பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும்,சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
திருக்குர்ஆன்
மறுமை நாளில் இறை மறுப்பாளன் (விசாரணைக்காகக்) கொண்டுவரப்பட்டு 'உனக்கு பூமி நிரம்பத் தங்கம் சொந்தமாக இருந்தால் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் நரக வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாயல்லவா?' என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் 'ஆம்' என்று பதிலளிப்பான். அப்போது 'இதைவிட சுலபமான ஒன்றே (-அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையே) உன்னிடம் கோரப்பட்டிருந்தது. (ஆனால், அதை நீ ஏற்கவில்லை)' என்று கூறப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறி வந்தார்கள்.
அனஸ் இப்னு மாலிக்(ரலி)
நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
தங்கம் மென்மையான உலோகம்ஆதலால் சுத்தத் தங்கத்தில் செய்யப்பட்ட நகை உறுதியாக இருக்காது. தங்கத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவு அல்லது வெள்ளி செம்புயைக் கலந்து செய்யப்பட்ட நகை ,நாணயம், பாத்திரம் முதலியவை உறுதியாக இருக்கும். தங்க பாத்திரங்கள் மட்டுமின்றி பேனாமுள், கைக்கடிகார உறுப்புகள்ஆகியவையும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. இன்றைய நகை ஆசாரிகள் நகை செய்ய வசதியாக இருக்குமேன்பதர்காக காட்மியம் உலோகத்தையும் சிறிதளவு சேர்கிறார்கள் .வைன் அல்லது சாராயத்தில் சிறிதளவு அரைத்து பொடியாக்கிப் பருகுவர் . இதனை தங்கபஸ்பம் என்று கூறுவார் . தங்கபஸ்பம் பருகினால் மேனி பொலிவடையும் என்பது பலரது நம்பிக்கை.தங்கத்தை மறு பயன்பாடு செய்ய முடியும். இவை அன்றைய சந்தை விலைக்கேற்ப மதிப்பிடப்படுகின்றன. எனவே தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. உலகிலேயே அதிகமான தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடு அமெரிக்கா.
ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலாவணியிலும் (பண மதிப்பு) தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அந்த்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாடும் அதன் மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றாவாறு அந்த நாட்டு அரசாங்கம் செலாவணி அல்லதுநாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்புகணக்கிடப்படுகிறது.
தங்கத்தின் '''காரட்''' என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.
WIKIPEDIA
சீனாவில் தூக்கியெறிக்கப்பட்ட 100 மில்லியன் மொபைல்போன்களிலிருந்து 1,500 கிலோ தங்கம், 1 மில்லியன் கிலோ அளவிற்கு தாமிரம், 30 ஆயிரம் கிலோ அளவிற்கு வெள்ளி உள்ளிட்டவைகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை என்கிறது சீனா.
இது குறித்து, சீனாவிலிருந்து வெளிவரும் பீபிள்ஸ் டெய்லி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் அளவிற்கு மொபைல்போன்கள் தூக்கி வீசப்படுவதாகவும், சீனாவில் மட்டும் 100 மில்லியன் மொபைல்போன்கள் தூக்கியெறிக்கப்படுகின்றன.
சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் அளவிற்கு மொபைல்போன்கள் தூக்கி வீசப்படுவதாகவும், சீனாவில் மட்டும் 100 மில்லியன் மொபைல்போன்கள் தூக்கியெறிக்கப்படுகின்றன.
இதன்மூலம், சீனாவில் மட்டும் 150 கிராம் தங்கம், 100 கிலோ காப்பர் மற்றும் 3 கிலோ சில்வர் பிரித் தெடுக்கப் பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
NAKKEERAN
3 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
எழுத்து பிண்ணனியில் வரும் கலரை அகற்றுங்கள் சகோ
tnx
tnx for the post..
Post a Comment