இறைவனின் தூதர்களில் ஒருவரான ஈசா நபியின் (இயேசு)அவர்களின் தாய் மர்யம் அலை (மேரி )அவர்களைப் பற்றி முஸ்லிம்கள் மிக உயர்வாக எண்ணுகிறார்கள்.இருவரையும் பெரிதும் மதிக்கிறார்கள்,ஈசா நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும்,அவனின் அடிமை என்றும் நம்புகிறார்கள்,மேலும் அவர்களின் தாயான மர்யம் அலை அவர்கள்,அல்லாஹ்வின் அற்புதம் கொண்டு - தகப்பன் இன்றி இயேசு அலை அவர்களை பெற்றார்கள் என்றும் நம்புவதோடு,இருவரும் கடவுள் அல்ல,கடவுளுக்கு மகனும் அல்ல,கடவுள் தன்மையும் இருவருக்கும் இல்லை என்றும் உறுதியாக நம்புகிறார்கள்.
மேலும்,இயேசு அலை,மர்யம் அலை இன்னார்தான் என்று எந்தப் புகைப்படமோ,சிலைகளோ மேலும் அது போன்றதையோ முஸ்லிம்கள் நம்பவில்லை.கீழ்காணும் படங்கள் கற்பனையே,மேலும் இத்தாலி அமைச்சரின் கமெண்ட்டை படம் மூலம் விளக்கும் முகமாக அந்த அமைச்சர் பர்தா பற்றி என்ன சொல்ல வருகிறார் என்று சொல்லவே இப்படமும்,கருத்தும்.
1 comment:
அதானே... இப்படி யோசித்தாலாவது பர்தாவை ஏற்றுக்கொள்வார்களா... அவர்களின் பாதிரிமார்கள் வெள்ளை நிறத்தில் அணிவதை நாம் கருப்பு நிறத்தில் அணிகிறோம்..இதிலென்ன வேறுபாடு கண்டுவிட்டார்கள்....அதை என்றுதான் உணர்வார்காளோ...
நல்ல வேளை ...வீடியோவிற்கு முன்பே நல்ல விளக்கம் கொடுத்துவிட்டீர்கள்...
Post a Comment