Wednesday, July 20, 2011

இதுதான் இஸ்லாம்

ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் அறிமுகமற்றவருக்கும் ஸலாம் (முகமன்) சொல்வதுமாகும்" என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

பிரபல கவிஞர் மு சண்முகம் இஸ்லாத்தை தழுவினார்

shanmugam.jpgஇளையான்குடி டாக்டர் ஜாஹிர் உசேன் கல்லூரியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் பொற்கிழி கவிஞர் மு. சண்முகம்.

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாம் குறித்து கவிதைகள், கட்டுரைகள் எழுதியும், பேசியும் வருபவர். இஸ்லாமிய இலக்கிய மாநாடுகளில் தவறாமல் பங்கேற்று படைப்புகளை வழங்கி வருபவர்.

’வஹியாய் வந்த வசந்தம்’  என்ற நூலுக்கு சீதக்காதி அறக்கட்டளையின் ஷேக் சதக்கத்துல்லாஹ் அப்பா பரிசினைப் பெற்றவர். இந்நூல் 1990 ல் கீழக்கரையில் நடைபெற்ற ஐந்தாவது உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் வெளியிடப்பட்டு தற்பொழுது முதுவை காஹிலா பதிப்பகத்தால் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது.

இளையான்குடியில் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்வின் போது நேற்று 17.07.2011 ஞாயிற்றுக்கிழமை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அல்ஹம்துலில்லாஹ்

தனது பெயரை ஹிதாயத்துல்லா என மாற்றிக் கொண்டார்.
இத்தகவலை சிங்கப்பூர் ஆடிட்டர் பெரோஸ்கான் 18.07.2011 திங்கட்கிழமை காலை அலைபேசியில் இளையான்குடியில் இருந்து தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

தகவல் இளைஞான்குடி யூசுப், பென்சில்வேனியா, அமெரிக்கா 

Friday, July 15, 2011

அற்புதம் உலகில் இது ஒன்று தான்

மக்காவில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன என்று இவ்வசனம் 3:97 கூறுகிறது. தெளிவான் அத்தாட்சி என்றால் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாத வகையில் மக்கள் கண்டு களிக்கும் வகையிலும் எந்தச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டாலும் அத்தாட்சி என்பது நிரூபணமாகும் வகையிலும் இருக்க வேண்டும். மனிதன் இன்னும் கண்டறியாத சான்றுகள் பல இருக்கலாம். மனிதன் கண்டறிந்த சான்றுகளில் முதன்மையானது ஜம்ஜம் எனும் கிணறாகும்.

இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும் மகன் இptஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார். குழந்தை இஸ்மாயீல் தண்ணீரின்றி தத்தளித்த போது வானவர் ஜிப்ரீல் வந்து அந்த இடத்தில் அடித்து ஒரு நீருற்றை ஏற்படுத்தினார், அது தான் ஜம்ஜம் எனும் கிணறாகும்.
இந்தக் கிணறு மாபெரும் அற்புதமாக இஸ்லாம் உண்மை மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாக இருக்கிறது.

கிணற்றின் அளவு

இந்தக் கிணறு 18 அடி அகலமும் 14 அடி நீளமும் கொண்டதாகும்.
இந்தக் கிணற்றில் தண்ணீரின் ஆழம் எப்போதும் சுமார் ஐந்து அடியாகும்.
இந்தக் கிணற்றில் இருந்து ஒவ்வொரு விநாடியும் தண்ணீர் இறைக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. வருடத்தின் எல்லா நாட்களிலும் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். ஹஜ் காலத்திலும் ரமலான் மாதத்திலும் சுமார் 20 லட்சம் மக்கள் அங்கே குழுமுகிறார்கள். அனைவருக்கும் இந்தக் கிணற்றில் இருந்து தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

ஒவ்வொருவரும் 20 லிட்டருக்குக் குறையாமல் அந்தத் தண்ணீரைத் தமது சொந்த ஊருக்கும் எடுத்துச் செல்கிறார்கள்.
குறைந்த ஆளம் உள்ள இந்தக் கிணறு, பாலைவனத்தில் அமந்துள்ள இந்தக் கிணறு, அருகில் ஏரிகளோ கண்மாய்களோ குளம் குட்டைகளோ இல்லாத அந்தக் கிணற்றில் இருந்து எப்படி லட்சோப லட்சம் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது என்பது முதலாவது அற்புதமாகும்.

எந்த ஊற்றாக இருந்தாலும் சில வருடங்களிலோ பல வருடங்களிலோ செயலிழந்து போய் விடும். ஆனால் இந்த ஊற்று பல ஆயிரம் ஆண்டுகளாக வற்றாமல் இருப்பது இரண்டாவது அற்புதமாகும்.

எந்த ஒரு நீர் நிலையாக இருந்தாலும் பாசி படிந்து போவதும் கிருமிகள் உற்பத்தியவதும் இயற்கை. இதனால் தான் குளோரின் போன்ற மருதுகள் நீர் நிலைகளில் கலக்கப்படுகின்றன. ஆனால் ஜம்ஜம் தண்ணீரில் அது உற்பத்தியான காலம் முதல் இன்று வரை எந்த மருதுகள் மூலமும் அது பாதுக்காக்கப்படாமல் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்வது மூன்றாவது அற்புதமாகும்.

மருந்துகளால் பாதுகாக்கப்படாத தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருக்காது என்பது அறிவியலின் முடிவாகும். ஆனால் இந்தத் தண்ணீர் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பிய சோதனைச் சாலையில் சோதித்துப் பார்க்கப்பட்ட போது இது குடிப்பதற்கு மிகவும் ஏற்ற நீர் என்று நிருபிக்கப்பட்டது.

பொதுவாக மற்ற நீரில் இருந்து ஜம்ஜம் தண்ணீர் வேறுபட்டுள்ளதும் சோதனையில் தெரிய வந்துள்ளது. கால்ஷியம் மற்றும் மேக்னீஷியம் எனும் உப்பு மற்ற வகை தண்ணீரை விட ஜம்ஜம் தண்ணீரில் அதிகமாக உள்ளது. இந்த உப்புக்கள் புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை. இதை அனுபவத்தில் உணரலாம். மேலும் இந்தத் தண்ணீரில் ஃபுளோரைடு உள்ளது. இது கிருமிகளை அழிக்க வல்லது. அங்கே அற்புதம் நடக்கிறது இங்கே அற்புதம் நடக்கிறது என்றெல்லாம் பலவாறான நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது. அது போல் இதையும் கருதக் கூடாது. மற்ற அற்புதங்கள் எல்லாம் எந்த சோதனைக்கும் உட்படுத்தப்படாதவை. நிருபிக்கப்டாமல் குருட்டு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் தினசரி 20 லட்சம் மக்களுக்கு அந்தத் தண்ணீர் குடி நீராகப் பயன்படுவதும், பாலைவனத்தில் இந்த அதிசயம் பல்லாயிரம் ஆண்டுகள் நடந்து வருவதும் எல்லாவித சோதனைக்கும் உட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதால் இது மெய்யான அற்புதமாகும். இது போன்ற அற்புதம் உலகில் இது ஒன்று தான் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை

Saturday, July 9, 2011

நிலமெல்லாம் ரத்தம்

...ஒன்றல்ல; இரண்டல்ல; முந்நூற்று அறுபது கடவுள்களை சிலைகளாகச் செய்துவைத்து வணங்கும் இனம். உழைத்துச் சாப்பிட்டு, சந்ததி பெருக்கி, மாண்டுபோய்க்கொண்டிருந்த இனம். பெண்கள் படைக்கப்பட்டதே, சந்ததி பெருக்குவதற்குத்தான் என்று உறுதிபட நம்பியதோர் இனம்.

ஏராளமான மூட நம்பிக்கைகளுடன் முட்டி மோதிக் கொண்டிருந்த இனம். படிப்பறிவில்லாத இனம். முரட்டு இனம்.

யுத்தவெறி பிடித்த இனம். தமது பெருமை என்னவென்றே உணராமல் காலம் காலமாக வீணடித்துவிட்ட இனம்.....



தொடர்ந்து படிக்க கிளிக்குங்கள் 






Saturday, July 2, 2011

”ஹிஜாப் என்னுடைய அணிகலன்! மும்பையில் ஒரு ’நிகாப்’ புரட்சி

afreenமும்பையில் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நின்று முனிசிபாலிட்டியின் பிரச்சினைகளை அரசுக்கு எடுத்து செல்வதில் ஒரு நிகாப அணிந்த சகோதரிக்கும் பங்குண்டு என்றால்...மிகை என்ன... மிக மிக மிகைதான் இல்லையா.

18 வயதிலேயே இஸ்லாத்திற்கு வந்ததோடல்லாமல் திருமணத்திற்கு பின் சமூகத்தில் சீர்திருத்தம் கொண்டு வரவும் மக்கள் பிரட்சினைக்காக பாடுபடவும் வேண்டும் என்றதும் அரசியல் கட்சிகள் ஆதாயம் தேடும் இடத்தில் அக்கறையை மட்டும் மையமாக கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறார், சகோ.ஆஃப்ரீன். 

”ஹிஜாப் என்னுடைய அணிகலன், அதை அணிவதால் என் சமூகத்திற்கு பாடுபட எனக்கு எந்த வித தடையுமில்லை” என்கிறார் சகோதரி. நிகாபை அணிவதாலும், முஸ்லிமாய் இருப்பதாலும் இது வரை தடையெதுவும் கண்டதில்லை எனக்கூறும் இந்த சகோதரி, தன் வெற்றிக்கு முதல் காரணமாக அல்லாஹுத’ஆலாவையும், அதன் பின் தன்னுடைய ஒவ்வொரு அடியிலும் துணை நிற்கும் கணவனையுமே புகழ்கிறார். நிகாப் இருப்பதால் வேலை செய்யுமிடத்தில் ஏதேனும் இடையூறோ தயக்கமோ இருக்குமே என்றால், எல்லா நிலையிலும் இந்த மக்கள் எனக்கு துணை நிற்பதோடல்லாமல், சில சமயம் எதிர்பார்க்காத அளவிற்கும் ஒத்துழைப்பு நல்கின்றனர் என்கிறார்.

மராத்தி, ஹிந்தி, குஜராத்தி தவிர ஆங்கிலமும் தெரிந்த இவர், தேர்தலில் முக்கிய வாக்குறுதிகள் அளித்தது குடிநீர், ரோடு மற்றும் சுகாதார வசதிகளின் மேல்தான். அதனாலேயே பிரச்சார நேரத்தில் சில பிரச்சினைகளையும் சந்தித்துள்ளார். “அன்றைய தினம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதி மக்களோ அதிகாலை 4 மணிக்கே எழுந்து குடிநீருக்காக லைனில் நிக்க வேண்டிய நிலை, எனவே அவர்களின் கோபாவேசத்தினாலும், அதில் ஏற்பட்ட சலசலப்பினாலும் கிட்டத்தட்ட என்னுடைய வாகனத்திலிருந்தே கீழே விழும் சூழ்நிலையாகி விட்டது” என்கிறார்.

தன்னுடைய பணியில் சாதனையாக சகோ.ஆஃப்ரீன் நினைப்பது, முனிசிபாலிட்டியில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மசோதா. அப்படி என்ன மசோதா? பெண்ணின் உடலை போஸ்ட் மார்ட்டத்திற்கு கொண்டு போகும்போதும், போஸ்ட்மார்ட்டம் முடித்து வரும்வரையும் ஒரு பெண் டாக்டரும், உதவிக்கு ஒரு பெண்ணும் கட்டாயம் அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்கிற ஆணையே அது. ஏன் இப்படி ஒரு மசோதா என்றால், சட்டென பதில் வருகிறது, சகோதரியிடமிருந்து. “ஓர் தடவை ஒரு 20 வயதுப்பெண் விபத்தில் இறந்து போனார். அவருடைய உடலை வாங்க மருத்துவமனைக்கு சென்றபோது ஒரு மனிதன் அந்தப்பெண்ணின் உடலில் போர்வை போர்த்தும் சாக்கில் அவளை அவசியமற்ற விதத்தில் தொடுவதைக் கண்டேன். அன்றெழுந்த முடிவு இது” என்கிறார்.

முஸ்லிம் சமுதாயத்தின் பிரச்சினையே கல்வியறிவில்லாததும், வேலைஞானமும் இல்லாததுதான் என்னும் சகோ.ஆஃப்ரீன், தன்னுடைய கணவரின் துணை கொண்டு மக்களுக்கென ரேஷன் கார்டு, பிசி, ஓபிசி பத்திரங்கள், வாக்காளர் அட்டை போன்ற அத்தியாவசிய அட்டைகளை பெறுவதற்கான வழிமுறை வகுப்புகளையும் அவ்வப்போது நடத்துகிறார். ”நம் முஸ்லிம் சமூகத்தில் இந்த மாதிரி தேவையான அட்டைகளை வாங்கும் வழிமுறைகள் தெரியாததே ஸ்காலர்ஷிப், அரசாங்க வேலை போன்ற பல அரசாங்க உதவிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் போக வைக்கிறது” என்கிறார். இதற்காக கோடை காலத்தில் மாதம் முழுக்கவும் கேம்ப்கள் நடத்துகிறார். இவரின் உதவியாளார்கள், வீட்டிற்கு வீடு சென்று கதவை தட்டியழைத்தும் வந்து இவற்றில் பங்கு பெற வைக்கின்றனர்.

அரசியலில் நுழைந்து விட்டால் ஆண்களின் ஆதிக்கத்தை சந்தித்துத்தானே ஆகவேணும் என்ற நிலையில், சட்டரீதியான, நுணுக்கமான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அரசியல் ரீதியான பேச்சுக்களுக்கும், செயல்களுக்கும் தன் கணவரின் முடிவில் விட்டுவிடுகிறார். 

செய்தி மூலம், ஆங்கிலத்தில் படிக்க : - http://www.coastaldigest.com/index.php?option=com_content&view=article&id=26458:hijab-is-my-ornament-mumbai-corporator-afreen

THANKS TO ANNU

Friday, July 1, 2011

மாபெரும் பரிசு

* ""வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்! நாம் தாம் அவர்களுக்கும் உணவளிக்கிறோம்; உங்களுக்கும் உணவளிக்கிறோம். உண்மையில் அவர்களைக் கொலை செய்வது பெரும் பாவமாகும்.''

திருக்குர்ஆன்(17:31)


நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

* ""ஒருவன் தன் பெண் குழந்தைகளை உயிருடன் புதைக்காமலும், கொடுமைப்படுத்தாமலும், ஆண் குழந்தையுடன் ஒப்பிடும்போது வேறுபாடு காட்டாமலும் இருந்தால் இறைவன் அவனை சுவனத்தில் நுழையச் செய்வான்''
(நூல்: அபூதாவூத்)


* "" உங்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்வது உங்கள் குழந்தைகளின் கடமை; உங்கள் குழந்தைகளைச் சமமாக நடத்துவது உங்களின் கடமை!''
(நூல்: அபூதாவூத்)


* ""தந்தை தன் பிள்ளைக்கு அளிக்கும் மாபெரும் பரிசு நல்லொழுக்கமே!''
(நூல்: திர்மிதி)

Tuesday, June 21, 2011

தலித்துகளுக்கு விடுதலை! இஸ்லாம் பற்றி பெரியார்


ஒவ்வொரு வாக்கியத்தின் இறுதியிலும் ஆமாம்- மும், வெங்காயத்தை -யும் தனக்கே உரிய பாணியில் உச்சரித்த பெரியார் அவர்களின் பேச்சுதான் முதல் பஞ்ச் வசனமாக இருக்கக்கூடும்.
1947ஆம் ஆண்டுவாக்கில், தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் சீலையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர்கள் 69 பேர் தீண்டாமைக் கொடுமை தாங்கமுடியாமல் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள்.
அதுகுறித்து பெரியார் பேசிய பேச்சு இது.
அதில் அவர், இந்து மதத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகளை வரிசைப்படுத்தும் விதமும், சமதர்ம சமுதாயத்திற்கு ஏற்றது இஸ்லாம் மதம்தான் என்றும் கூறும்விதம் அழகோ அழகு. நீங்களும் கேளுங்களேன் அவருடைய பேச்சை!

Sunday, June 19, 2011

உயிரோடு நீ... தொழு!


ரு வறை தொடங்கி
கல் லறை அடங்கி
முடி வுறும் நாள்வரை...
இறைவனைத் தொழு!

எத்தனை அழகு 
என்னென்ன நிகழ்வு
எல்லாம் உனக்களித்த
ஏகனைத் தொழு!

காணவும் களிக்கவும்
 
கண்களால் ரசிக்கவும்
பார்வையைத் தந்தவனை
நேர்மையாய்த் தொழு!

கேட்கவும் கிறங்கவும்
 
கேட்டதை உணரவும்
ஒலி புரியச் செவி தந்த
வலியோனைத் தொழு!

சாப்பிடவும் கூப்பிடவும்
 
சண்டையின்றிப் பேசிடவும்
நாவும் நல் வாயும் தந்த
நாயன் தனைத் தொழு!

சுவாசிக்கும் நாசியாகவும்
 
முகர்ந்தறிய மூக்காகவும்
அமைத்தொரு புலன் தந்த
ஆண்டவனைத் தொழு!

கையும் காலும்
 
கச்சித உடலும்
வாகாய்த் தந்த
வல்லோனைத் தொழு!

முடிந்த இரவை முழுமையாக்கி
 
விடியும் முன்பு தொழு...
புதிய பூவாய்ப் பூரிப்போடு
மதிய நேரம் தொழு...

மாலை மகுடம் காத்திருக்கு
 
மாலை வேளை தொழு...
மாலை மயங்கி இரவு தொடும்
வேளையிலும் தொழு...

இன்று நன்றாய் முற்றுப்பெற
 
இரவு நேரம் தொழு!
காலநேரம் கடக்குமுன்
கவனமாகத் தொழு!

கடமையுணர்ந்து தொழு!
 
கண்மணி நபி
கற்பித்தவாறு
கவனமுடன் தொழு!

உறுதியாகத் தொழு
 
உபரியையும் தொழு!
அறுதியாய்ச் சுவனம்
அடைந்திடத் தொழு

உன்
 
உடல் கிடத்தி
ஊர் தொழு முன்-
உயிரோடு நீ...
தொழு!

- சபீர்

Friday, June 10, 2011

நாணமும் இறைநம்பிக்கையும்...

* நாணமும் இறைநம்பிக்கையும் இணைந்தே உள்ளது. அதில் ஒன்று கெட்டுவிட்டால் 
இன்னொன்றும் கெட்டுவிடும்.

* உங்களில் எவர் ஒரு தீய செயலைக் 
காண்கிறாரோ, அவர் அதனை தனது கைகளால் தடுக்கட்டும். அவரால் அது முடியவில்லையெனில் அதை நாவால் தடுக்கட்டும். அதையும் செய்ய முடியவில்லையெனில் அதை அவர் தம் மனதால் வெறுக்கட்டும். இது இறை நம்பிக்கையில் மிகவும் 
பலவீனமான நிலையாகும்.

* செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணத்தைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை 
எண்ணுகின்றானோ அதற்குரிய பலன்தான் அவனுக்குக் கிட்டும்.

* இறைவன் உங்களில் சிலருக்கு சிலரை விட எதனைக் கொண்டு சிறப்பளித்திருக்கின்றானோ, அதனை அடைய நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு 
அவர்கள் சம்பாதித்ததற்கேற்ப பங்கு உண்டு. மேலும் பெண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததற்கு ஏற்ப பங்கு உண்டு. இருப்பினும் இறைவனிடம் அவனுடைய 
அருளைக் கோரிய வண்ணம் இருங்கள்.

* செல்வ வளம் என்பது அதிக செல்வத்தைப் 
பெறுவதல்ல. போதுமென்ற மனதைப் பெறுவதே 
உண்மையான செல்வமாகும்.



நபிகள் நாயகம் ஸல் பொன்மொழிகள்