Wednesday, January 13, 2010

படிப்போமா,படிப்பினை பெறுவோமா? படித்தேன் பகிர்ந்தேன்

பெயர் : அசோக் கோலன் யாங்

நாடு : சூடான்

பதவி : கிழக்கு மற்றும் மத்திய ஆப்ரிக்க சர்ச் கவுன்சிலின் பொதுச் செயலாளர்

இவர் கடந்த 2002 ம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். இவர் மதங்களைப் பற்றிய மதிப்பீடுகள் குறித்து ஒப்பு நோக்கி ஆய்வு செய்த பொழுது, இஸ்லாமே உண்மையான மார்க்கம் என்பதைப் பற்றிய தெளிவுக்கு வந்தார். இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

இவரை குவைத்திலிருந்து வெளிவரும் அல் முஜ்தமா என்ற அரபுப் பத்திரிக்கை பேட்டி கண்டது. அந்தப் பேட்டியின் தமிழாக்கமே இது.

நான் ஏன் முஸ்லிமானேன்..! ஏனென்றால்,

திருமறைக் குர்ஆனை எந்த தனிப்பட்ட மனிதரும் எழுதவில்லை, அதேநேரத்தில் பைபிளுக்கு பல்வேறு நூலாசிரியர்கள் இருக்கின்றார்கள்.


திருமறைக் குர்ஆன் அல்லாஹ்வின் சத்திய வாக்கியங்களாகும்.

இஸ்லாம் அழைக்கின்ற ஓரிறைத் தத்துவத்தின் பாலே அனைத்து நபிமார்களும் மக்களை அழைத்தார்கள்.




இஸ்லாமே இறுதி மார்க்கம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிகத் தெளிவாகவே சுட்டிக் காட்டி இருக்கின்றார்கள்.



இவரது முயற்சியின் காரணமாக 1,50,000 பேர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள், இவர்களில் 2500 பேர் தேவாலயங்களின் தலைவர்களாவார்கள்.

கிறிஸ்தவ அமைப்புகள் முஸ்லிம்களிடையே கிறிஸ்துவத்தைப் பரப்புவதற்கு பல்விதமான தந்திரங்களைக் கையாளுகின்றன. இது பற்றி அவர் மேலும் கூறியதாவது :

மனித உதவி மற்றும் தொண்டு நிறுவனங்கள் என்ற போர்வையின் கீழ் செயல்படுகின்றன

உதவிகளை வழங்குவதன் மூலம் தங்களது அரசாங்கத்தின் வழியாக அரபுக்களின் மீதும், இன்னும் முஸ்லிம்களின் மீதும் பலப்பிரயோகத்தைத் திணித்தல் மூலமாக

இன்னும், தனிநபர்களை இஸ்லாத்தின் பால் அழைப்பதற்கு பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன, அவை : பணம், பதவி, பெண் ஆகியவற்றின் மூலமாக.

மேலும், அவர் கூறும் பொழுது, இஸ்லாத்தில் என்னை மிகவும் கவர்ந்த அம்சம் என்னவென்றால், ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள் கிடையாது, இன்னும் சாதி அமைப்புகளும் கிடையாது, முஸ்லிம்கள் அனைவரும் சமமே. ஆனால், கிறிஸ்துவத்தில் கறுப்பு நிற நீக்ரோ கிறிஸ்தவர்கள் வெள்ளைக்கார கிறிஸ்தவர்களின் சர்சுக்குச் சென்று வழிபாடு நடத்த இயலாது, ஏன்.., (முன்னாள்) அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த காலின் பவலைக் கூட வெள்ளைக்காரர்களின் சர்ச்சிற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள்.

இஸ்லாத்திற்கு எதிராக எத்தனை கிறிஸ்தவ அமைப்புகள் உலகெங்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று கேட்கப்பட்டதற்கு, ஆயிரக்கணக்கான அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், இவற்றில் சூடானில் மட்டும் 500 அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது என்று கூறினார்.


கடந்த 1981 ல் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் பரம ரகசியமானதொரு கூட்டத்திற்கு நான் அழைக்கப்பட்டேன், அந்தக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டாக்கி, அதன் மூலம் முஸ்லிம்களிடையே கிறிஸ்தவத்தைப் பிரச்சாரம் செய்வதென்று அதில் கலந்து கொண்டவர்கள் தீர்மானித்தார்கள்.

மேற்கு நாடுகளில் மக்கள் தங்களது வருமானத்தில் 5 சதவீதத்தை கிறிஸ்தவப் பிரச்சாரத்திற்காகச் செலவழிக்கின்றார்கள்.

முஸ்லிம் நாடுகளில் முதலீடு செய்கின்ற மேற்கு நாடுகளின் நிறுவனங்கள், தங்களது முதலீட்டின் மீது வருகின்ற வருமானத்தை கிறிஸ்தவப் பிரச்சாரத்திற்காகச் செலவழிக்கின்றன.

மேலும் அவரிடம், நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நீங்கள் சொல்வது உங்களது உயிருக்கே ஆபத்தாகவல்லவா முடியும் போலிருக்கின்றது? என்று சொன்ன பொழுது, ஆம்..! நான் சொல்வது என்னுடைய உயிருக்கே ஆபத்தானது என்பதை நான் நன்கறிவேன், எப்பொழுது கிறிஸ்தவ அமைப்புகள் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அறிந்து கொண்டனவோ அப்பொழுதே என்னைத் தீர்த்துக் கட்ட முனைந்தன, ஆனால் என்னுடைய இனத்தவர்கள் எனக்கு அளித்திருக்கும் பாதுகாப்பின் காரணமாக அவர்களது முயற்சியில் அவர்கள் தோல்வியையே கண்டார்கள். இன்னும் நான் சாவினைக் கண்டு பயப்படவில்லை, இஸ்லாத்திற்காக என்னுடைய உயிரை அற்பணிக்கவும் நான் தயாராகி விட்டேன், இன்னும் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் அவர்கள் செய்து கொண்டிருக்கின்ற சதிகளை அம்பலப்படுத்திக் கொண்டு தான் இருக்கின்றேன்.

கிறிஸ்தவ அமைப்புகள் முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு செயல்படுகின்றன?

இதற்கு அவர் பதிலளிக்கையில், இவர்கள் சரியான ஒருங்கிணைப்பு மற்றும் திட்டமிடுதல்களின் அடிப்படையில் செயல்படுகின்றார்கள். குறிக்கோளின்றி அவர்கள் செயல்படுவதில்லை, ஆனால் அறிவு மற்றும் ஆராய்ச்சிகளின் மூலமாகத் தங்களது செயல்பாடுகளைத் திட்டமிடுகின்றார்கள். உதாரணமாக, தாங்கள் குறி வைத்திருக்கும் நாடு அல்லது பகுதியைப் பற்றிய முழுமையான தகவல்களைத் திரட்டுகின்றார்கள், அதில் அவர்களது மதம், மக்கள் தொகை, அவர்கள் மதத்தைப் பின்பற்றுகின்றவர்களா அல்லது அல்லவா, பால் - ஆண், பெண், மக்களது தேவைகள் அதாவது பணம், உணவு, கல்வி, மருத்துவ சேவை மற்றும் இன்ன பிற தேவைகள் என்று ஒவ்வொன்றாகத் திட்டமிட்டுச் செயல்படுகின்றார்கள்.

என்னருமை முஸ்லிம் சகோதரர்களுக்கு :

அல்லாஹ் இஸ்லாம் என்ற அருட்கொடையை உங்களுக்கு பரிசாக வழங்கியுள்ளான், அதனை நீங்கள் மறுக்க முடியாது, ஏனென்றால் அதுவே நம்முடைய உண்மையான சொத்து, அதை நம்மிடம் இருந்து அழித்து விடத்தான் மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகள் நம்மைக் குறி வைத்து தாக்கிக் கொண்டிருக்கின்றன. உங்களது வாழ்வில் இஸ்லாத்தைக் கடைபிடிப்பீர்கள் என்று சொன்னால், நீங்கள் பலசாலியாவீர்கள், இன்னும் மேற்கத்தியர்கள் உங்களைக் கண்டு அச்சம் கொள்வார்கள். உங்களுக்கு எதிராகக் கிளப்பி விடப்படும் எந்தவிதமான குழப்பங்களையும் எதிர்கொள்வதற்கு அறிவியல் ரீதியான அணுகுமுறைக்கான அடித்தளமான கல்வி நம்மிடம் தேவையாக இருக்கின்றது. முஸ்லிம்கள் தங்களது வாழ்வில் 10 சதவீதமாவது இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளைத் தங்களது வாழ்வில் கடைபிடிப்பார்களென்றால், மேற்கத்தியர்களை விட வாழ்வில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள், இன்னும் அதுவே நம்முடைய அநேகமான பிரச்னைகளையும் தீர்த்து விடக் கூடியதாக இருக்குமென்று கருதுகின்றேன். இந்த ஒரு முன்னேற்றத்தை வெறும் 10 சதவீத இஸ்லாத்தை நம்முடைய வாழ்வில் அமுல்படுத்தியதன் விளைவாகப் பெற முடியுமென்றால், இஸ்லாமிய வாழ்வை முழுமையாக நாம் கடைபிடிப்போமென்றால், நம்முடைய நிலை எவ்வாறு இருக்கும்? என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை என்று கூறினார்.

thanks to brother ali azarudhin
http://dailymuslimnews.blogspot.com/

4 comments:

சங்கர் தூத்துக்குடி said...

நல்ல முறையில் சிந்தித்து,மார்க்கத்தை தழுவியுள்ளார்.எனக்கும் ஊக்கமூட்டுவதாக உள்ளது.அக்கா,நீங்கள் சொன்ன முகவரி சென்று இஸ்லாம் புத்தகங்கள் வாங்கி படித்து வருகிறேன்,

அன்புடன் மலிக்கா said...

அழகிய முறையில் ஆன்மாக்களை
கவர்திழுக்கும் இஸ்லாம்.
இறைவனுக்கு நன்றி...

இப்னு அப்துல் ரஜாக் said...

இஸ்லாம் ஒரு நன் மார்க்கம்,இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம் என்பதை இச் சம்பவமும் நிரூபிக்கிறது,சுபானல்லாஹ்.
சகோதரர் ஷங்கர் அவர்களே,நீங்கள் எப்போது?

சாலிஹா said...

இஸ்லாம் ஒரு வாழ்வியல் வழிகாட்டி என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது