கொஞ்ச நேரம் கழிச்சி,அந்த மெக்சிகோ டாக்சிக்காரன், நம்ம ஆளை ஒரு கேஸ் ஸ்டேஷன்(பெட்ரோல் பங்க்)கூட்டிப் போய்,கேஸ் போடணும் என்று சொல்லி,அவனும் கீழ இறங்கி-கடைக்குள்ள போய் கேஸ் போட பணம் தா என்று கேட்க,இவரும் கீழ இறங்கி அவனோட கூட போய் பணம் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் 'இறங்கி நடந்து வர 'அப்பொழுது அது நடந்தது,இவர் டாக்சியை விட்டு இறங்கினதும்-அந்த மெக்சிகோ டாக்சிக்காரன் விருட்டென்று டாக்ஸியில ஏறி பறந்துவிட,நம்ம ஆளு,"அமிகோ-அமிகோ"என கத்த(ஸ்பானிஷ் மொழியில் அமிகோ என்றால் நண்பா என பொருள்)அவன் போயே,போய்விட்டான்.
பாவம் நம்ம ஆளுவுடைய,பாஸ்போர்ட்,கிரீன் கார்ட்,பணம்,பொருட்கள் எல்லாம் போய்விட்டன.என்ன செய்வது?
இது போன்ற தகிடு தத்ததங்கள் நம்ம ஊர்லயும் இருக்கு,அமெரிக்காவிலேயும் இருக்கு.எல்லாரும் விழிப்புடன் இருக்கவே இந்த செய்தி.
(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும், என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக.
அல்குர்ஆன் 2-186
மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி

அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) நூல்: திர்மிதி