Saturday, March 27, 2010

அண்ணல் நபிகளின் அமுத மொழிகள்: "மனைவி"

   ''இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!'' என நபியவர்கள் கூறினார்கள்.  

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ்  நூல்: முஸ்லிம் 2911

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்வை குறித்து விசாரிக்கப்படுவான்'' என நபி அவர்கள் கூறினார்கள்.  

அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்  (ரலீ)  நூல்: புகாரீ 5200

 ''இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!'' என்று நபி அவரகள் கூறினார்கள்.  

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலிநூல்: திர்மதி 1082

  ''அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட'' என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்.  

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலிநூல்: புகாரி 56

    ''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்'' என நபி அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீநூல்: முஸ்லிம் 2915

 

Thursday, March 18, 2010

யாரு அந்த பத்து பேரு..............

என் அன்பு அக்கா தேனம்மை லக்ஷ்மணன் என்னையும் அழைத்திருந்தார்கள்,பத்து பெண்களை தேர்ந்தெடுங்கள் என்று,அவர்களின் என் மீதான நம்பிக்கைக்கும்,அன்புக்கும் முதலில் நன்றி சொல்லி.............
இதோ என்னால் முடிந்த அளவுக்கு............


1)ஏசுவின் தாய் மேரி

தந்தை இன்றி பிள்ளை பெற்றதனால்,அக்கால மக்கள் மேரி அவர்களை அவதூறு சொன்னபோது-ஏக இறைவனுக்காக அதை சகித்துக்கொண்ட மேன்மை மிகு தாய்.

இஸ்லாத்தில் ஏசுவை-ஈசா நபி(இறைவனின் தூதர்)என்றும் மேரியை மர்யம் என்றும் அழைக்கிறோம்.மேலும்,அவர்கள் மிக நல்ஒழுக்கமுள்ள சிறந்த பெண்மணி என்பதையும் ஏற்கிறோம்.

 2)கதிஜா ரலி அவர்கள்

தம் நாற்பது வயதில் தன் கணவரை (நபிகள் நாயகம் ஸல்)இறைவன் தன் தூதராக (இஸ்லாம்)தேர்வு செய்து-அகிலத்தாருக்கு குரானையும் வழங்கி,மக்களுக்கு நற்போதனை செய்யுமாறு சொன்னவுடன்,நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அவ்வாறு போதனை செய்யவே,அம்மக்கள் அவர்களுக்கு பல்வேறு துன்பங்கள் கொடுத்தபோது,தம் கணவருடன் கூட இருந்து -எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்த அந்த உத்தமி.

3) இந்திரா காந்தி

துணிச்சல் மிகு பெண்(ஆண்களே கொண்டுவராத எமேஜென்சியை கொண்டுவந்தவர்)

4)மேடம் கியூரி

இயற்பியல் ஆராய்ச்சி

5)மேதா பட்கர்

சேவகி

6)கமலா சுரையா

எழுத்தாளர்

7)சரோஜினி நாயுடு

கவிக்குயில் 

8)டாகடர் முத்துலட்சுமி

பெண்கள் முன்னேற்றம்

9)பிரதீபா பாட்டில்

அரசு நிர்வாகம் 

10)லத்திகா சரண்

சட்டம் ஒழுங்கு

அக்கா,என்னால முடிஞ்சது அவ்வளவே,இனி நீங்கதான் சொல்லணும். 

Sunday, March 14, 2010

பேராசிரியர் டாக்டர் பெரியார்தாசன் இஸ்லாத்தை தழுவினார்.

கருத்தம்மா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர் பெரியார்தாசன். உளவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். கடவுள் மறுப்புக் கொள்கையில் உறுதியாகயிருந்தவர். தனது பெயரையே நாஸ்திக சிந்தனையாளரான தந்தை பெரியாரின் பெயருடன் அடிமை என்ற பொருளைத் தரும் தாசன் என்ற வார்த்தையை இணைத்துக் கொண்டவர்.

தமிழகத்தில் பிரபலமான பெரியார்தாசன் பல்வேறு மேடைகளில் சமூக சிந்தனை கருத்துக்களை பரப்பியவர். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் அமைந்துள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இஸ்லாத்தை பற்றி பலகாலமாக ஆய்வுச்செய்த பெரியார்தாசன் கடந்த வியாழக்கிழமை(மார்ச் 11) அன்று சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாதில் அமைந்துள்ள இஸ்லாமிய தஃவா மையத்தில் வைத்து இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

தனது பெயரை அப்துல்லாஹ்(அல்லாஹ்வுக்கு அடிமை) என்று மாற்றிக் கொண்டார். இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டதைக் குறித்து டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) கூறியதாவது: "இவ்வுலகில் இஸ்லாமிய மார்க்கம் மட்டுமே இறைவனிடமிருந்து நேரடியாக இறக்கியருளப்பட்ட வேதத்தைக் கொண்டுள்ளது. நான் பல்வேறு மதங்களின் வேதங்களையும் ஒப்பீட்டு ஆய்வுச் செய்தேன். அதில் இஸ்லாத்தைத் தவிர மற்ற அனைத்து நூல்களுமே இறைவனிடமிருந்து நேரடியாக அருளப்பட்டது அல்ல. குர்ஆன் மட்டுமே இறைவனிடமிருந்து எந்த வடிவில் முஹம்மது நபிக்கு அல்லாஹ்விடமிருந்து அருளப்பட்டதோ அதே வடிவில் இன்றும் உள்ளது. நான் நாத்திகக் கொள்கையின் மூலமாக இந்தியாவில் அனைவருக்கும் நன்றாக அறிமுகமானவன். இஸ்லாம்தான் இவ்வுலகிலும், மறுவுலகிலும் மனித இனத்திற்கு பொருத்தமான மார்க்கம் என்பதை புரிந்துக்கொண்டேன்." என்றார்.

டாக்டர் அப்துல்லாஹ்(பெரியார்தாசன்) இன்று(மார்ச் 13) உம்ரா செய்வதற்காக புனிதஸ்தலமான மக்காவிற்கு செல்கிறார். பின்னர் மதீனாவும் செல்வார். அல்லாஹ் அவருடைய நல்லச் செயல்களை பொருந்திக் கொண்டு கடந்த கால பாவங்களை மன்னித்து நேரான வழியில் செலுத்துவானாக! என பிரார்த்திப்போம்.

நன்றி அரப் நியூஸ், மார்ச் 12, 2010