மாற்று மத சகோதரர்களில் பலர் குர்ஆன் என்றால் என்ன?அது யாரால், எப்படி,யாருக்கு அருளப்பட்டது என்ற விஷயத்தையும் - அது என்ன சொல்கிறது,அது முஸ்லிம்களுக்கு மட்டுமான வேதமா அல்லது உலக மக்களுக்கே உரித்தான பொது மறையா,எந்த மத வேதமும் சொல்லாத,முன் அறிவிப்பு செய்யாத பல விஷயங்கள் என்ன,அறிவியலோ அல்லது எந்த துறையோ அது குர்ஆன் முன் அறிவிப்பு செய்யும் முடிவுக்கே வந்துவிடுகிறது எப்படி இன்னும் பல விஷயங்களை பற்றி சுவராசியமாக அலசவே இக்கட்டுரை.
(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.17;81
திருக்குர்ஆன்
அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது; பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.21;18
திருக்குர்ஆன்
வானவர் ஜிப்ரில்(THE ANGEL GABRIEL,PEACE BE UPON HIM) அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம்,இறைவனின் கடைசி தூதர் முஹம்மத்
நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும் குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது
“குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு இறைவன்(அல்லாஹ் என்பது அரபி மொழியில்) ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.
அல்லாஹ்(ஏக இறைவன்) என்ன செய்தியை மக்களுக்கு சொல்ல விரும்புகிறானோ அதை வானவர் தலைவர் ஜிப்ரீல் அலை மூலம் முஹம்மத் நபி அவர்களுக்கு அனுப்ப,அந்த செய்தியை கேட்டு,நபிகள் நாயகம் அவர்கள்,அப்படியே உள்ளது உள்ள படியே மக்களுக்கு எடுத்துரைப்பார்கள், அதுவே திருக்குர்ஆன் ஆகும்.
தொடர்வோம் இன்ஷா அல்லாஹ்
1 comment:
இஸ்லாம் பற்றி நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி சகோ
Post a Comment