Friday, January 28, 2011

கேன்சலே ஆகாத பயணம்


என் இனிய சகோதர, சகோதரிகளே !

நம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் தயாராக உள்ளது! பயணிகளே கவனமாக  தயாராகுங்கள் !!! 

ஏறும் இடம் (Departure ) : துணியா !  
இறங்கும் இடம் (arrival) : கபர்ஸ்தான் !!.

புறப்படும் நேரம் : நம்மை படைத்த எல்லாம் வல்லாஹ் அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்.

கவலைபடவேண்டாம் பயண நேரமும் தேதியும் மாற்றத்திற்கு உள்ளாகாது !. விமானமும் கேன்சல் ஆகா சான்சே இல்லை!?.

Destination Air போர்ட் : டெர்மினல் 01  சொர்க்கம் ! /
                                         டெர்மினல் 02 நரகம்!?. 

இது ஒரு ட்ரான்சிட் AIR LINE  ?
இந்த அதிநவீன  ஏர் லயன்சின் திட்டங்களும் விபரங்களும் உலகில் எங்கும் கிடைக்காது ஆனால் 
புனித திருக்குரான் மற்றும் நபிகளார் முகமது சல்லல்லாஹுவசல்லாம்அவர்களின் வாழ்வின் நடைமுறையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்த அதிநவீன  எரோபிளேனின் பெயர் பிரிட்டிஷ் அல்லது கல்ப் அல்லது எமிரேட்ஸ் அல்லது  ஏர் இந்திய கிடையாது. 

ஆனால் இதன் பெயரோ    ஏர்  ஜனாசா !.
இந்த விமானத்தின் கேப்டன் மலக்குல் மவுத் !!!. 
இதனில் உட்காரும் இருக்கை இல்லை, வசதியாக அவரவர்களின் அமல்களுக்கு (செய்த நன்மைகளுக்கு ஏற்ப ) படுத்துக்கொண்டு மட்டும்தான் பயணிக்கலாம் !.
இதில் ரவுண்டு ட்ரிப் கிடையாது ஒன் வே ட்ரிப் மட்டும்தான் !!!.?. 
இதில் கண்டிப்பாக உங்கள் உடமைகளை எடுத்து கொண்டு பயணிக்க இயலாது !, 
ஆனால் நமது அமல்களை எத்துனை கிலோவாக இருந்தாலும் அனுமதி கிடைக்கும் !!.
அதற்காக ஏர்போர்ட் டாக்ஸ் கட்ட வேண்டிய பிரச்னை இல்லை மகிழ்ச்சிதானே ! ?.
இதிலே செல்வதற்கு கோட் சூட் தேவை இல்லைஒரு ஆறு முழ வெள்ளை துணி போதும் ? காசு மிச்சம்தானே !!!.
இதில் நீங்கள் பயணிக்க விசாவிற்கோ மற்றும் ஏர் டிக்கெட் எடுபதற்கோ சிரமபடதேவை இல்லை !!!! ??? காசும் விரயம் இல்லை!?.

உங்களுடை விசாவும் பயண சீட்டும் நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தயாராக விட்டது. !!!.

மேலும் மகிழ்ச்சிதானே?! ஆம் உங்கள் சீட் உறுதிசெய்யப்பட்டு விட்டது (confirmed )!. ரீ கன்பாம் செய்யும் பிரச்னை இருக்காது !!!. 
ஆனால் உங்களுடைய சரியான பாஸ் போர்டைவைத்துகொள்ள  மறந்தும் இருந்து விடாதீர்கள் ?

உங்களுக்கு பாஸ்போர்ட் செக்கிங் உண்டு !!!.

பாஸ் போர்ட் செக்கரின் பெயர் முன்கர் மற்றும் நகீர் !!!!!!! ???.

வேறு இந்தியன் or அமெரிக்கன் or பிரிட்டிஷ் or எந்தவிதவிதமான பாஸ்போர்ட்டும் செல்லுபடியாகாது ???. 

ஆனால் ஒரே ஒரு பாஸ் போர்ட் தான் செல்லு படியாகும் !!!.
ஆம் அந்த பாஸ் போர்டின் பெயர் மவுத் !!!!!!.(மரணம் )
அதிலே எல்லாருக்கும் ECR கட்டாயம் ஸ்டாம்ப் உண்டு.
எமிக்ரேசன் கிளியரன்சுக்கு மூன்று கேள்விகளை நமது பாஸ்போர்ட் எமிக்ரேசன் ஆபிசர்  மதிற்பிக்குரிய 
முன்கர் மற்றும் நகீர் அவர்கள் கேட்பார்கள்.

அதை சரியாக  கூறிவிட்டால் உங்கள் ட்ரான்சிட் லவுஞ்சில் சுகமாக ஓய்வு எடுக்கலாம் எந்த விதமான தொல்லையும் இருக்காது!!!. 

ஆனால் சரியாக கூறாவிட்டால் உங்களுக்கு தொல்லை ஆரம்பம் ஆகிவிடும் உங்களின் ட்ரான்சிட் லவுன்ச் நரக லவுன்ச் ஆகிவிடும்???.

உஷார் !

உஷார் !

 உஷார் !

உஷார் !  அந்த மூன்று கேள்விகள் !. 

உன்னுடைய இறைவன் யார் ? விடை அல்லாஹ் !!!!!!.

உன்னுடைய மார்க்கம் எது ? விடை இஸ்லாம் !!!!!!!!.

உன்னுடைய நபி யார் ? விடை முகமது சல்லல்லாஹுவசல்லாம்
மறந்தும் இறந்து விடாதீர்கள் ? பதிலை சொல்ல அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் முஸ்லிமாக வாழ்ந்து மட்டுமே பதிலலிக்க முடியும்.

சுகமான பயணத்திற்கு தயாராக இருப்போம். 

இன்ஷா அல்லாஹ் !. 

நம்முடைய ஏர்  ஜனாசா !. பயணம் நல்ல பயணமாக அமய துவா செய்யும்,

எங்கள் இறைவனே,எங்களுக்கு இந்த உலகத்திலும் நல்ல வாழ்க்கை தருவாயாக,மறுஉலகத்திலும்(மரணத்துக்கு பின் உள்ள வாழ்வு)நல்ல வாழ்க்கையை தருவாயாக.மேலும் நரக நெருப்பை விட்டும் பாதுகாப்பாயாக

9 comments:

நட்புடன் ஜமால் said...

Assalamu Alaikkum

very nice of telling :)

பாத்திமா ஜொஹ்ரா said...

நன்றி ஜமால் பாய்.அடிக்கடி வந்து போங்க

Najim said...

Assalamu Alaikkum
I just go thru your site.
Excellent. Lots of good articles.
Nice work. Thank you.

பாத்திமா ஜொஹ்ரா said...

wa alaikkum salam Najim brother,thanks for your comment, appreciate that.

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ பாத்திமா,

மரணத்தையும் மறுமையையும் நினைவுபடுத்தும் வித்யாசமான பதிவு...

நன்றி..

மரணசிந்தனை ஒரு மனிதனை நல்வழிப்படுத்தும்,நபி (ஸல்) ஒரு நாளைக்கு 60 முறை மரணத்தை பற்றி சிந்திப்பவர்களாக இருந்தார்கள்...

அன்புடன்
ரஜின்

பாத்திமா ஜொஹ்ரா said...

thanks rajin.

அன்னு said...

ஏன் இப்படி????

நானும் பதிவோட டைட்டில் பாத்தவுடனே...ஆஹா ஊருக்கு போறீங்க போலன்னு நினச்சேன். கலவரப்படுத்திட்டீங்க. நடத்துங்க நடத்துங்க.. :)

பாத்திமா ஜொஹ்ரா said...

வாங்க அன்னு அக்கா (சந்தடி சாக்கு)அடிக்கடி வந்துட்டு போங்க,பையன் எப்படி இருக்கான்?

Jaleela Kamal said...

அஸ்ஸலாமு அலைக்கு பாத்திமா, என்ன அருமையான விளக்கம்.

அடிக்கடி இப்படி நீனைவூட்டுவது நல்லது.