Saturday, November 19, 2011

சாதனை செயல்,அல்லாஹ்வுக்காக மட்டும்

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பின் சகோதர சகோதரிகளே!...

அல்லாஹ் அக்பர்...அல்லாஹ் அக்பர்...அல்லாஹ் அக்பர்..

ஸஹீஹ் முஸ்லிம் முழுமையான பாகம் - அல்லாஹ்வின் மாபெரும் உதவி கொண்டு, நிறைவுபெற்று,பயன்பாட்டிற்கு வந்துவிட்டது...

ஸஹீஹ் முஸ்லிமின் முழுமையான பாகத்தை முதன்முதலில் எனதருமை சகோதர சகோதரிகளுக்கு அளிப்பதில் அளப்பறிய மகிழ்ச்சி அடைகிறேன்...

இந்த ஆக்கத்தில் உங்களின் பங்கு குறிப்பிடத்தகுந்த ஒன்று...

அல்லாஹ் இதன் கூலியை முழுமையாக வழங்கிட போதுமானவன்...

பயன்படுத்திப்பார்த்து,மற்ற சகோதரர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்....

இதன் பதிவிறக்க சுட்டி:


இந்த நற்பணியை செவ்வனே செய்து நம் கைகளில் தவழ செய்திருக்கும் நம் சகோதரர் ரஜீன் அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் இரண்டு உலகத்திலும் அள்ளி-அள்ளி கொடுப்பானாக,ஆமீன் 

1 comment:

RAZIN ABDUL RAHMAN said...

அஸ்ஸலாமு அலைக்கும் அருமை சகோதரி ஃபாத்திமா அவர்களுக்கு,

சாதனை ஒன்றும் இல்லை அருமை சகோதரி..வல்ல அல்லாஹ் எல்லோருக்கும் ஒரு வாய்ப்பளிக்கிறான்,இன்னும் சொல்லப்போனால் தேர்வு செய்கிறான்..அவனது மார்க்கத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்க,மேலோங்க செய்ய,...

அந்த அடிப்படையில் இந்த சீரிய பணியை செய்ய அல்லாஹ் என்னை தெரிவு செய்து கொண்டதில்,வல்ல அல்லாஹ்வுக்கு நான் நன்றி சொல்லவே கடமை பட்டுள்ளேன்...என் வாழ்வில் அல்லாஹ்வுக்காக, இந்த சமுதாய மக்களின் பயன்பாட்டிற்காக சிறிது காலம் ஒதுக்க முடித்ததை,...இல்லை இல்லை...ஒதுக்க வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்...

எனது கையில் ஒன்றும் இல்லை சகோதரி....
இந்த நேரத்தில் அல்லாஹ் இதை அனைவருக்கும் சென்றடைய நாடியதை செய்திருக்கிறான்...என்னை கருவியாய் கொண்டு...அவ்வளவுதான்...

தங்களின் துஆவிற்கு பலமுறை ஆமீன் சொல்லிக்கொள்கிறேன்...இம்மை மறுமையில்,அல்லாஹ்வுடைய அருட்கொடையில் அதிக அதிக தேவைகளுடையவனாக இருக்கும் எனக்கு, உங்களின் இந்த துஆ முக்கியத்துவம் வாய்ந்தது...தேவையானது...

எனக்கு இதை தவிர வேறொன்றும் தேவையில்லை...இதன் பொருட்டு அல்லாஹ் எனது சிறிய பெரிய பாவங்களை மன்னித்து,பொருந்திக்கொள்ள ஆதரவு வைத்தவனாக...

அன்புடன்
ரஜின்