Wednesday, January 6, 2010

புரளி கெளப்பும் புரோக்கர்கள்



போலியாக சில பேர் என்னல்லாம் பண்ணுறாங்கன்னு பாருங்களேன்.செயற்கையா நகை,பருப்பு,எண்ணெய்,இன்னும் எல்லாவத்துக்கும் விலையை கூட்டி,மக்களுக்கு கஷ்டத்த ஏற்படுத்துரத நாம் பாத்துக்கிட்டுத்தான் இருக்கோம்.

இப்போ சில ஊர்கள்ல போலியான மதிப்பீடு போட்டு,காலி மனைகளையும் விக்க ஆரம்பிச்சுட்டாங்க.அரசு சொல்லும் விலையை விட,தனியார் சொல்லும் விலை அதிகம்தான் என்றாலும்இது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதுதான்.ஆனால் இது பொதுவா விக்கக் கூடியவர்,வாங்கக் கூடியவரிடம் விலை சொல்லி,அது சரி என்றால் விற்பார்கள்.இது தானங்க நடைமுறை.





ஆனா இப்போ அதிரை, பட்டுக்கோட்டை சுத்து வட்டாரம்

போன்ற பகுதிகளில் நடப்பது என்னன்னா,விக்கிரவர்கிட்ட சில ஏஜென்ட்டுகள் போய்,"கொடுங்க நான் நல்ல விலைக்கு வித்து தர்றேன்" என்று சொல்லி,அட்வான்ஸ் கொடுத்துவிட்டு,மனை வாங்க விருப்பம் உள்ளவங்க கிட்ட போய்,மனைக்கு ஓனர் சொன்ன விலையைவிட,பல மடங்கு சொல்லி,வித்துபுடுறாங்க. இதுனால பல லட்சம் கூடுதலா கொடுக்க வேண்டி இருக்கு.எவ்வளவு அநியாயம் பாருங்க.


எனக்கு தெரிஞ்ச ஒரு குடும்பத்துல இப்பிடித்தான்,அஞ்சு லட்சம் குடுத்து வாங்க வேண்டிய மனைக்கு,எட்டு லட்சம் குடுக்க வேண்டியதா போய்டுச்சுன்னு நொந்து போய்ட்டாங்க.அதுக்கு அரசு நிர்ணயித்த விலை மூனு லட்சம்.

இப்படி பணம் வச்சிக்கிட்டு,கிடைக்கிற மனைகளைஎல்லாம் வாங்கிப் போட்டு,ஏஜன்ட்டுக்கள் பண்ணுற அட்டகாசம் தாங்க முடியலைன்னு பல நடுத்தர வர்க்கம் கதறுவது யார் காதிலும் விழுந்தபாடில்லை.இப்படி அநியாயம் பண்ணும் ஏஜன்ட்டுக்கள் நாளை மறுமையில் எல்லாத்துக்கும் அல்லாஹ் கேள்வி-கணக்கு கேட்பான் என்பதை மறந்துவிட வேண்டாம் என எச்சரிக்கிறேன்.
------------------------------------------------------------------------

அல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரியவன்) வேறு யாருமில்லை. நிச்சயமாக உங்கள் அனைவரையும் இறுதிநாளில் அவன், ஒன்று சேர்ப்பான் - இதில் சந்தேகமில்லை. மேலும் அல்லாஹ்வைப் பார்க்கிலும் சொல்லில் உண்மையுடையோர் யார்? (அல்குர்ஆன் 4:87)

அறிவிப்பாளர் : ஜாபிர் رَضِيَ اللَّهُ عَنْهُ



நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்கள் நவின்றுள்ளார்கள்: “கொள்முதல் செய்வதிலும், விற்பனை செய்வதிலும், கடனைக் கோருவதிலும் மென்மையுடனும் நற்பண்புடனும் நடந்து கொள்ளும் மனிதர் மீது அல்லாஹ் அருளைப் பொழிவானாக!”
(புகாரி)


 அறிவிப்பாளர் : உமர் رَضِيَ اللَّهُ عَنْهُ



“தேவையான பொருள்களைப் பதுக்கி வைக்காமல் உரிய

நேரத்தில் அவற்றை அங்காடிக்குக் கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தானவன்! மேலும், அவனுக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தையும் வழங்குவான். இன்னும், அவற்றைப் பதுக்கி வைப்பவன் இறைவனின் சாபத்திற்கு உரியவனாவான்.”(இப்னு மாஜா)






8 comments:

Anonymous said...

சவுக்கடி... காலம் காலமாக வெளிநாடுகளில் குடும்பத்தை பிரிந்து சேர்த்த பணத்தில் ஒரு மனைவாங்கி அதில் வீடு கட்டவேண்டுமென்பது அதிரையில் பிறந்த ஓவ்வொருவரின் எழுதப்படாத அபிலாசை. ஆனால் பரதேசியாக அதிரைக்கு வேலை தேடி வரும் பலர் ஓன்றிரண்டு மாதங்களிலேயே மனைபோட்டு குடிசைபோட்டு வாழ்க்கை தொடங்குவதும் அதே அதிரையில் தான். இதில் கொடுமை என்னான்னா பல லட்சம் கொடுத்து வாங்கும் மனைகளுக்கு அடுத்த வீட்டுகார்ராக அவர்கள் ஈசியாக வருவது தான். இதில் அவர்களது திறமையை பாராட்டத்தான் வேண்டும்.

Adirai Media said...

அன்புள்ள சகோதரிக்கு...
தங்களது கருத்துக்கள் அனைத்தும் சிந்திக்க வைக்கிறது
உங்களின் எழுத்தாற்றல் வளர்ச்சிக்கு எனது நெஜ்சார்ந்த வாழ்த்துக்கள் பல.....
இப்படிக்கு அதிரை புதியவன்.

M.A.K said...

ரொம்ப கரெக்டா சொன்னீங்க. இப்பெல்லாம் நம்ம ஊர்ல (அதிரை) கூட நிலமெல்லாம் மெட்ராஸ் ரேஞ் க்கு போய்டுச்சு. அல்லாஹ்தான் இந்த ப்ரோகர்களுக்கு நல்ல புத்திய குடுக்கணும்.

பாத்திமா ஜொஹ்ரா said...

கருத்து சொன்ன சகோ அதிரை புதியவன், Anonymous, MAK நன்றி. நாமும் விழிப்பா இருந்து,மற்ற மக்களுக்கும் எடுத்து சொன்னா இது போன்ற தில்லு முல்லுகள் மோசடிகள் இருந்து ,நாம் தப்பிக்க முடியும்.

இப்னு அப்துல் ரஜாக் said...

நல்ல கருத்து சொன்ன உங்களுக்கு நன்றி,இது போன்று இன்னும் எழுதுங்கள்.

Zakir Hussain said...

It is good you have started to make people realize about these kind of real estate agents. But this is the curse of this business. there will be price hike and real estate agents won't arrange a meeting of real buyer & real seller. It is pity in Adirai lot of instant real estate agents emerged within a short period. Onething is very sure, thier own attitude of making big money in one deal will make them vanish in thier own business.

ZAKIR HUSSAIN

தமிழ்ப்பெண்கள் said...

தமிழ்ப்பெண்கள்

Center for Tamil Female Bloggers பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை
http://www.tamilpenkal.co.cc/

Unknown said...

Not only in Adirai Dear. It happened around the Nation India especially Muslims mejority living areas. Because they want to buy a land or built a House on his vacation period (1 to 3 months). So the Brokers using his short-time period. So this is not only broker's mistake. We are also involved in those type of cheatings.Thanks : Kayal - Abu Rabia