Thursday, March 18, 2010

யாரு அந்த பத்து பேரு..............

என் அன்பு அக்கா தேனம்மை லக்ஷ்மணன் என்னையும் அழைத்திருந்தார்கள்,பத்து பெண்களை தேர்ந்தெடுங்கள் என்று,அவர்களின் என் மீதான நம்பிக்கைக்கும்,அன்புக்கும் முதலில் நன்றி சொல்லி.............
இதோ என்னால் முடிந்த அளவுக்கு............


1)ஏசுவின் தாய் மேரி

தந்தை இன்றி பிள்ளை பெற்றதனால்,அக்கால மக்கள் மேரி அவர்களை அவதூறு சொன்னபோது-ஏக இறைவனுக்காக அதை சகித்துக்கொண்ட மேன்மை மிகு தாய்.

இஸ்லாத்தில் ஏசுவை-ஈசா நபி(இறைவனின் தூதர்)என்றும் மேரியை மர்யம் என்றும் அழைக்கிறோம்.மேலும்,அவர்கள் மிக நல்ஒழுக்கமுள்ள சிறந்த பெண்மணி என்பதையும் ஏற்கிறோம்.

 2)கதிஜா ரலி அவர்கள்

தம் நாற்பது வயதில் தன் கணவரை (நபிகள் நாயகம் ஸல்)இறைவன் தன் தூதராக (இஸ்லாம்)தேர்வு செய்து-அகிலத்தாருக்கு குரானையும் வழங்கி,மக்களுக்கு நற்போதனை செய்யுமாறு சொன்னவுடன்,நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அவ்வாறு போதனை செய்யவே,அம்மக்கள் அவர்களுக்கு பல்வேறு துன்பங்கள் கொடுத்தபோது,தம் கணவருடன் கூட இருந்து -எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்த அந்த உத்தமி.

3) இந்திரா காந்தி

துணிச்சல் மிகு பெண்(ஆண்களே கொண்டுவராத எமேஜென்சியை கொண்டுவந்தவர்)

4)மேடம் கியூரி

இயற்பியல் ஆராய்ச்சி

5)மேதா பட்கர்

சேவகி

6)கமலா சுரையா

எழுத்தாளர்

7)சரோஜினி நாயுடு

கவிக்குயில் 

8)டாகடர் முத்துலட்சுமி

பெண்கள் முன்னேற்றம்

9)பிரதீபா பாட்டில்

அரசு நிர்வாகம் 

10)லத்திகா சரண்

சட்டம் ஒழுங்கு

அக்கா,என்னால முடிஞ்சது அவ்வளவே,இனி நீங்கதான் சொல்லணும். 

14 comments:

Jaleela Kamal said...

பாத்திமா பத்து பெண்களின் தேர்வும் அருமை/

கதிஜா ரலி அவர்களை குறிப்பிட்டது சூப்பர்.

Thenammai Lakshmanan said...

மிக அருமையா எழுதி அசத்திட்டம்மா ஃபாத்திமா..!!

எதிர்பார்க்கல ...மரியம்., கதிஜா( எனக்கும் இவங்களைப் பிடிக்கும் )

மேலும் சுரையா ...வித்யாசமான தேர்வும்மா அருமை..!!

ஜெய்லானி said...

1,2,3 தவிர மற்றவைக்கும் ஏன் பிடிக்கும்னு சொல்லிருந்தா கொஞ்ஜம் நல்லா இருந்து இருக்கும் விட்டுட்டீங்களே!!!

முதல் ஆள் ( ஏசுவின் தாய் மேரி ) யாரும் இதுவரை போடாதது.

Ahamed irshad said...

நல்ல பதிவு.வாழ்த்துக்கள் சகோதரி

இப்னு அப்துல் ரஜாக் said...

நல்ல செலக்ஷன் சகோதரி.குர்ஆனில் மேரி (அலை)அவர்களைப் பற்றி வரும் செய்திகள் சில........


பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!" (19:27)

"ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை" (என்று பழித்துக் கூறினார்கள்). (19:28)

(ஆனால், தம் குழந்தையிடமே கேட்கும் படி) அதன் பால் சுட்டிக் காட்டினார்; "நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையுடன் எப்படிப் பேசுவோம்?" என்று கூறினார்கள். (19:29)
"நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். (19:30)
"இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கினாவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வஸீயத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான். (19:31)
"என் தாயாருக்கு நன்றி செய்பவனாக (என்னை ஏவியிருக்கின்றான்;) நற்பேறு கெட்ட பெருமைக்காரனாக என்னை அவன் ஆக்கவில்லை. (19:32)

"இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்று (அக்குழந்தை) கூறியது. (19:33)

இ(த்தகைய)வர் தாம் மர்யமுடைய புதல்வர் ஈஸா (ஆவார்) எதைக் குறித்து அவர்கள் சந்தேகம் கொண்டிருக்கிறார்களோ அதுபற்றிய உண்மையான சொல் (இதுவே ஆகும்). (19:34)
அல்லாஹ்வுக்கு எந்த ஒரு புதல்வனையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை அவன் தூயவன்; அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், "ஆகுக!" என்று தான் கூறுவான்; (உடனே) அது ஆகிவிடுகிறது. (19:35)

"நிச்சயமாக அல்லாஹ்வே (படைத்துப் பரிபக்குவப்படுத்தும்) என்னுடைய இறைவனாகவும், உங்களுடைய இறைவனாகவும் இருக்கின்றான்; ஆகையால், அவனையே நீங்கள் வணங்குங்கள்; இதுவே நேரான வழியாகும்" (என்று நபியே! நீர் கூறும்). (19:36)

ஆனாலும், அவர்களிடையே இருந்த கூட்டத்தார் இது பற்றி(த் தங்களுக்குள்ளே) அபிப்பிராய பேதங் கொண்டனர். (சத்தியத்தை) நிராகரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, அவர்கள் யாவரும் ஒன்று சேர்க்கப்படும் வலுப்பமான நாளில் கேடுதான்! (19:37)

அவர்கள் நம்மிடத்தில் வரும் நாளில் எவ்வளவு தெளிவாகக் கேட்பார்கள், பார்ப்பார்கள்! எனினும் அந்த அக்கிரமக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இன்று இருக்கிறார்கள். (19:38)

மேலும், (நபியே!) தீர்ப்பு அளிக்கப்படும் அந்த கைசேதப்படக்கூடிய நாளைக் குறித்து, நீங்கள் அவர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக! எனினும் அவர்கள் அதைப்பற்றிக் கவலைப்படாதவர்களாகவும், நம்பாதவர்களாகவும் இருக்கின்றார்கள். (19:39)

இப்னு அப்துல் ரஜாக் said...

பெரியார்தாசன்,அப்துல்லாஹ்வாக ஏன் மாறினார்? பரபரப்புத் தகவல்களுடன் உள்ள வீடியோ...

http://peacetrain1.blogspot.com/2010/03/blog-post_18.html

அன்புடன் மலிக்கா said...

கதிஜா ரலியல்லாஹ். மரியம் அலைஹிஸ்ஸலாம்.
மற்றும் அனைவரும்.

நல்ல தேர்வுகள் வாழ்த்துக்கள் . ஃபாத்திமா

தாஜுதீன் (THAJUDEEN ) said...

முதல் இரண்டும் நல்ல தேர்வு, வாழ்த்துக்கள்.

Anonymous said...

சூப்பாரா தேர்வு செஞ்சுருக்கீங்க பாத்திமா.என் பிடிக்கும் என்று காரணமும் போட்டது அருமை.I like your taste fathima.

உங்களுக்கு ஓர் விருது என் ப்ளாக்கில் உள்ளது கீழே உள்ள லிங்க்கை பார்க்கவும்.
http://ammus-recipes.blogspot.com/2010/03/blog-post_25.html

Anonymous said...

பாத்திமா இஸ்லாம் பற்றியும் இஸ்லாம் விதிகளை பற்றியும் தெளிவாக தெரிந்து கொள்ள ஏதேனும் புஸ்தகம் அல்லது ஏதேனும் தமிழ் இணையத்தளம் உள்ளதா ?நான் பிறப்பால் ஒரு இந்து பெண்ணாயினும் ஒரு ஆர்வத்தினால் கேட்கிறேன்.தெரிந்தால் சொல்லுங்கள்.

பாத்திமா ஜொஹ்ரா said...

அன்புள்ள தோழி அம்மு,உங்களுடைய விருதுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும்,மற்ற சிலரின் ஆதங்கம் பற்றி கவலைப்படவேண்டாம்,உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.நீங்கள் என்னை வசைபாடினாலும்கூட ஏற்றுக் கொள்கிறேன்,நீங்கள் என் அன்புத் தோழி.

மேலும் நீங்கள் சொன்ன வீடியோ கிளிப் பார்த்தேன்.இதிலெல்லாம் இஸ்லாம் நம்பிக்கை வைப்பதில்லை.பற்பல அற்புதங்கள் திருக்குரானில் இறைவனால் சொல்லப்பட்டுள்ளது.அதை நாங்கள் நம்புகிறோம்,அது மட்டுமல்ல அது தற்போது ஒவ்வொன்றும் நிறைவேறி வருகிறது.இதனால்தான் அறிவியல் அறிஞர்கள்,மருத்துவர்கள்,நாத்திகர்கள்,படித்தவர்கள்,பாமரர்கள்,தாழ்த்தப்பட்டவர்கள்,பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று சொல்லிகொள்வோர் என எல்லா தரப்பு மக்களும் இஸ்லாம் நோக்கி வருகின்றனர்.

மேலும் இஸ்லாம் பற்றி நீங்கள் அறிய விரும்புவது கண்டு மிக மகிழ்வு கொள்கிறேன்.இஸ்லாம் பற்றி அறிய http://www.ift-chennai.org/
http://irf.net/
http://whyislam.org/
போன்ற இணைய தளங்களில் காணலாம்.மேலும்,உங்களுக்கு எதுவும் புத்தகம் வேண்டுமெனில்,நீங்கள் விரும்பினால் முகவரி தந்தால்,அனுப்ப இன்ஷா எல்லாஹ் ஏற்பாடு செய்கிறேன்.

Anonymous said...

நன்றி பாத்திமா.why islam என்ற தளம் நன்றாக உள்ளது.நான் எனக்கு தெரிந்ததை சொல்ல வேறு மாறி பிரச்சனை ஆகிடுமோனு பயந்துட்டேன்.

பாத்திமா ஜொஹ்ரா said...

நன்றி அம்மு,ஏன் யாருக்கு பயப்படவேண்டும்?
இஸ்லாம் பற்றி படியுங்கள்,சந்தேகம் இருப்பின், கேட்டால்,முடிந்தால் பதில் தருகிறேன்,இல்லையென்றால் தெரிந்து கொண்டு பதில் தருகிறேன்.வாழ்த்துக்கள்.

இதையும் போய் பாருங்கள் தோழி

http://www.islamtomorrow.com/

http://www.islamsgreen.org/

Adirai khalid said...

பத்தும் ம்...

ஆனா பத்தாது (சிலதில் விளக்கம் -உம். 9)