Sunday, May 9, 2010

தண்ணீர் ....தண்ணீர்..........

என்னதான் உடற்பயிற்சி செய்தாலும், மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும், உடல் எடை ஓரளவுதான் குறையும்.

ஆனால், தொடர்ந்து தண்ணீர் குடித்து வாருங்கள், ஒரு மாதத்திலேயே அதற்கு நல்ல பலன் கிடைக்கும்.

உடலில் கலோரியை கட்டுப்படுத்த மருந்து தேவையில்லை, தண்ணீர் தான் முக்கிய தேவை. தண்ணீர் சாப்பிட்டால், உடலில் வயிற்றில் இருந்து ஆரம்பித்து, குடல், சிறுநீரகம் என்று எல்லா இடங்களையும் சுத்தப்படுத்தி, எலும்பு, தசைகளையும் எந்த பாதிப்பும் இல்லாமல் சீராக்கி கடைசியில் வெளியேறி விடுகிறது.

இப்படி செய்வதால்தான் சிறுநீரகம் மற்றும் குடல் பிரச்சினைகள் என்று எதுவும் வராது. நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
இதுதான் பலரின் கேள்வி.

* ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து டம்ளர் வரை தண்ணீர் குடிக்கலாம். ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு என்று பழங்களாகவும் சாப்பிடலாம். அவற்றில் 70 சதவிகிதம் வரை தண்ணீர் தான் உள்ளது. தினமும் ஏதாவது ஒரு சமயம், பழங்களாக சாப்பிட்டால் நல்லது.

* பொதுவாக நம் உடல் எடையில் பாதி அளவுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும். அதாவது உதாரணமாக 120 பவுண்டு எடை இருப்பதாக வைத்தால், பாதி அளவு, 60 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* ஒரு பக்கம் தண்ணீர் குடித்து விட்டு, இன்னொரு பக்கம் காபி குடித்தால் பலனே இல்லை. குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் காபியில் உள்ள காபின்.

* ஆல்கஹாலும் அப்படித்தான். தண்ணீர் வேண்டிய அளவு குடித்து விட்டு, மதுப்பழக்கம் இன்னொரு பக்கம் இருந்தால், நாக்கு வறண்டு தான் போகும். உடலில் தண்ணீர் ஏறவே ஏறாது.

* தண்ணீர் சாப்பிடுகிறேன் பேர்வழி என்று ஒரே மொடக்கில் அடிக்கடி கண்டபடி குடம் குடமாக குடிப்பதும் தவறு.

* வெறும் தண்ணீர் குடிக்க பிடிக்காவிட்டால், அதில் தேயிலை பையை நனைத்தோ, எலுமிச்சை சாற்றைப் பிழிந்தோ குடிக்கலாம்.
குளிர்ந்த நீரில் குளிப்பதே நல்லது

பூமியின் மேற்பரப்பில் தண்ணீர்தான் மூன்று மடங்கு அடங்கியுள்ளது. அதே போல் மனித உடலும் முக்கால்வாசி தண்ணீரால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் வைத்தியம் என்பது சக்தி வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது.

எனவே, உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தி தேவை என்றால் குளிர்ந்த தண்ணீரில் தினமும் குளிக்க வேண்டும்.

இதற்காகப் ஜில்'லென்று குளிர்ந்த தண்ணீர் நிரப்பிக் கொண்டு தொட்டிக்குள் உட்காருங்கள். ஒரு நிமிடம் தண்ணீருக்குள் முழு உடலும் இருக்கும் விதத்தில் மூழ்கிக் கொண்டு உடலை ஆங்காங்கே தேய்த்து விடவும்.

ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை இப்படி குளிர்ந்த தண்ணீரில் சோப் இன்றித் தேய்த்துக் குளிக்கும்போது நிணநீர் மண்டலம் சுறுசுறுப்பாக இயங்கி உள்ளே உள்ள உறுப்புகளை சுத்தம் செய்துவிடுகிறது. இதனால் இதயமும் சுறுசுறுப்படைகிறது.

-------------------------------------------------------------------
இன்னும், பூமியில் அருகருகே இணைந்தார்போல் பல பகுதிகளை (அமைத்து, அவற்றில்) திராட்சைத் தோட்டங்களையும், விளைநிலங்களையும், கிளைகள் உள்ளதும், கிளைகள் இல்லாததுமான பேரீச்சை (வர்க்கத்தை)யும் (அவனே உண்டாக்கினான்; இவையனைத்திற்கும்) ஒரே தண்ணீர் கொண்டு தான் பாய்ச்சப்பட்டாலும், அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றை விட சுவையில் நாம் மேன்மையாக்கியிருக்கின்றோம்; நிச்சயமாக இவற்றில் உணர்ந்தறியும் மக்களுக்கு பல அத்தாடசிகள் இருக்கின்றன.13:4

உண்மையான அழைப்பு (பிரார்த்தனை) அவனுக்கே உரியதாகும்; எவர் அவனை அன்றி (மற்றவர்களை) அழைக்கின்றார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தர மாட்டார்கள்; (அல்லாஹ் அல்லாதவர்களைப் பிரார்த்திப் போரின் உதாரணம்;) தண்ணீர் தன் வாய்க்கு(த் தானாக) வந்தடைய வேண்டுமென்று, தன் இருகைகளையும் விரித்து ஏந்திக் கொண்டு இருப்பவனைப்போல் இருக்கிறது (இவன் அல்லாது) அது வாயை அடைந்து விடாது - இன்னும் காஃபிர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் இருப்பதே தவிர வேறில்லை. 13:14


(நபியே!) இன்னும் நீர் கூறுவீராக "இந்தச் சத்திய (வேதம்) உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது" ஆகவே, விரும்புபவர் (அதனை) நம்பி கொள்ளட்டும். இனனும் விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்; (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும்; மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும்.18:29


(நபியே!) நீர் கூறும்: உங்களின் தண்ணீர் பூமியினுள் (உறிஞ்சப்பட்டுப்) போய்விட்டால், அப்பொழுது ஓடும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார்? என்பதை கவனித்தீர்களா? என்று (எனக்கு அறிவியுங்கள்).67:30

திருக்குர்ஆன் 
-------------------------------------------------------------------------------------
பாகம் 1, அத்தியாயம் 4, எண் 173 'ஒரு நாய் தாகத்தின் காரணமாக ஈர மண்ணை (நக்கி) சாப்பிடுவதை ஒருவர் பார்த்தார். உடனே அவர், தான் அணிந்திருந்த காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ் அம்மனிதருக்கு கருணை காட்டி அவரைச் சுவர்க்கத்தில் புகத்தினான்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என்று என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 
நபி மொழி 

 
 





 

11 comments:

ராமலக்ஷ்மி said...

மிக நல்ல பதிவு.

ஜெய்லானி said...

நேற்று என் ரூம் மேட் துடித்த துடிப்பு இருக்கே!! டெஸ்ட் முடிவில் கிட்னியில் கல் , ஒரு நாள் செலவே தாங்கல .டாக்டரின் பதில் தண்ணீர் நிறைய குடி.

நோய் வந்த பின் கஷ்டப்படுவதை விட முன்பே எச்சரிக்கையா இருப்பது நல்லது.
வெயில் நேரத்தில் அவசியமான பதிவு..

Anonymous said...

Jazakallahu khair, sister.. very informative post..

நட்புடன் ஜமால் said...

நல்ல இடுக்கை.

தாஜுதீன் (THAJUDEEN ) said...

நல்ல பயன் தரும் பதிவு

தொடருங்கள் உங்கள் எழுத்து பணியை. வாழ்த்துக்கள்

இப்னு அப்துல் ரஜாக் said...

நல்ல பதிவு

Shameed said...

நல்ல இடுக்கை ,
உதாரணமாக 120 பவுண்டு எடை இருப்பதாக வைத்தால், பாதி அளவு, 60 அவுன்ஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். கணக்கு இடிப்பது போல் உள்ளது

ஹுஸைனம்மா said...

// குடித்த தண்ணீரை வற்றவைத்து விடும் காபியில் உள்ள காபின்.

* ஒரே மொடக்கில் அடிக்கடி கண்டபடி குடம் குடமாக குடிப்பதும் தவறு. //

நல்ல தகவல்கள்; அவசியமான செய்தி!!

SUFFIX said...

உபயோகமான செய்திகள்.

GEETHA ACHAL said...

தண்ணீரினை பற்றி மிகவும் அருமையான பதிவு...சூப்பர்ப்....

Unknown said...

Kodaikaalathirketha sirappaana padhivu....


Thanks for posting this...

(jazakallah Khair):-)