ஏக இறைவன் அல்லாஹ் கட்டளையிட்ட ஏழைகளுக்கு செலுத்தவேண்டிய வரியை (ஜகாத்) செலுத்திவிட்டீர்களா?
அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்பதை மறக்க வேண்டாம்!!
புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்)
2:177
5 comments:
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி,ரமலான் கரீம்.தாம் கேட்டிருந்த ஜகாத் சந்தேகதிற்கு என்னால் முடிந்தவரை சில அல்குரான் முலம் சொல்லப்பட்டிருப்பதை தொகுத்துள்ளேன் அல்லாஹுக்கே எல்லாப்புகழும்.
உங்கள் செல்வத்திலிருந்து நீங்கள் அவர்களுக்கு செலவு செய்யுங்கள்' (அல் குர்ஆன் 24:33)
'(நபியே) இவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்தை வசூல் செய்து அதன் மூலம் அவர்களைத் தூய்மைப் படுத்துவீராக...' (அல் குர்ஆன் 9:103)
'எவர்கள் தங்கத்தையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான வேதனையுண்டு' (அல் குர்ஆன் 9:34)
'(நபியே) அவர்களுடைய பொருட்களிலிருந்து தர்மத்தை எடுத்துக் கொண்டு அவர்களை உள்ளும் - புறமும் தூய்மைப் படுத்துவீராக' (அல் குர்ஆன் - 9:103)
'எந்த செல்வத்திற்கு இறைவன் உங்களை பிரதிநிதியாக்கினானோ அந்த செல்வத்திலிருந்து செலவு செய்யுங்கள்' (அல்குர்ஆன் - 57:7)
'(நபியே) எதை (இறைவழியில்) செலவு செய்ய வேண்டும் என்று உம்மிடம் கேட்கிறார்கள். உங்கள் தேவைக்குப் போக மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று கூறுவீராக' (2:219)
***********************************************************************************
வாழ்வாதார தேவைக்குரியவைகளில் வீடும், வீட்டுப் பொருட்களும், வீட்டார் பயன்படுத்திக் கொள்ளும் வாகனமும் அடங்கிவிடும். குடும்பத்திற்காகச் செலவிடப்படும் தொகை ஜகாத் தொகைக்குரிய தகுதியைப் பெறாது.
முஸ்லிம்களின் சொந்தத் தேவைக்குரியது என்ன என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மனிதன் தன் வாழ்வாதாரத் தேவைகளை மிக வேகமாகப் பெருக்கிக் கொண்டு வந்துவிட்டான். மேற்கண்ட 2:219வது வசனம் இறங்கும்போது அந்த மக்களின் தேவை வெகு சொற்பமே. வீடும், வாகனமும், உணவும், உடையும் போக மீதி இருப்பவை அனைத்தும் மேலதிகமானதே. வளர்ச்சி பெற்ற நூற்றாண்டுகளில் குறிப்பாக இந்த நூற்றாண்டில் மனிதனின் அத்தியாவசியத் தேவை அதிகப்பட்டு விட்டது. குளிர் சாதனப் பெட்டிகள், தெலைகாட்சி, தொலைபேசி, இணையம் என்று ஒவ்வொன்றும் வசதிக்கேற்ப மனிதனுக்கு அவசியமாகி விடுகிறது. பேரரிவாளனான இறைவன் இதையெல்லாம் உள்ளடக்கியே தன்னுடைய வார்த்தையை பயன்படுத்தியுள்ளான். 'தமது தேவைக்குப் போக மீதமுள்ளதை' என்று.
தேவைகள் அதிகரித்து அதற்கேற்ப வீட்டில் பொருட்கள் 'அம்வால்' பயன்படுத்தப்பட்டால் அதற்கு ஜகாத் தேவையில்லை.
'தேவைக்குப் போக மீதமுள்ளதை தர்மம் செய்வதே சிறந்ததாகும்' என்ற நபிமொழியும் இங்கு கவனிக்கத் தக்கது. (அபுஹுரைரா ரலி - புகாரி 14:26)
வீடு இல்லாதவர்கள் சொந்த வீடு கட்டுவதற்காக நிலம் வாங்கி போட்டிருந்தால், அவை வீடு கட்டுவதற்குரிய அளவுள்ள இடமாக இருந்தால் அதற்கு ஜகாத் இல்லை. ஏனெனில், அவை நமது தேவைக்கு உட்பட்டதாகும். அதிகப்படியான நிலங்கள் மேலதிகமான சொத்தாக இருந்தால் அவற்றிற்கு ஜகாத் கொடுத்தாக வேண்டும்.
வருமானம் இல்லாமல் வீட்டு மனைகள் வாங்கப்பட்டிருந்தால் அவற்றின் மதிப்பிற்கு ஜகாத் கொடுத்தாக வேண்டும். ஏனெனில் வங்கிகளில் பணம் சேமிக்கப் படுவது போன்று இங்கு நிலங்களின் மீது பணம் சேமிக்கப் படுகிறது. மேலதிக 'அம்வால்' களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமென்ற இறைவனின் கட்டளையில் இந்த காலிமனைகள் அனைத்தும் அடங்கிவிடும்.
பெண்கள் அணியும் நககைகள், பீரோவில் உள்ள நகைகள், லாக்கரில் பூட்டப்பட்டுள்ள நகைகள் இவற்றிற்கும் ஜகாத் கொடுத்தாக வேண்டும்.
'யார் தங்கத்தையும் - வெள்ளியையும் சேமித்து வைத்து அல்லாஹ்வின் பாதையில் அவற்றை செலவு செய்யாமல் வாழ்கிறார்களோ அவர்களுக்குக் கடும் தண்டனையுண்டு' (அல்குர்ஆன் - 9:34,35)
இறைவழியில் செலவு செய்யாமல் சேமித்து வைப்போருக்குத் தண்டணையுண்டு என்று கூறுவதால் அவற்றின் மீதும் ஜகாத் கடமையாகிறது. பெண்கள் தங்கத்தைச் சேர்த்து வைக்கவில்லை, அதன் மூலம் தம்மை அழகுபடுத்திக் கொள்கிறார்கள் அதனால் அதற்கு ஜகாத் தேவையில்லை என்றெல்லாம் யாரும் சமாதானம் சொல்ல முடியாது. தம்மை அழகுபடுத்திக் கொண்டு தொழ வந்த பெண்களிடம்தான் நபி (ஸல்) அவர்கள் உபதேசம் செய்கிறார்கள். உடனே பெண்கள், தமது காது வளையங்கள், கால் மெட்டிகள், வளையல்கள் எல்லாவற்றையும் கழற்றி அவற்றை இறைவனின் பாதையில் கொடுக்கிறார்கள். (புகாரி)
பெண்கள் தமது கைகளில் அணிந்திருந்த தங்கக் காப்புகளுக்கு நபி (ஸல்) அவர்கள் ஜகாத் கொடுக்கச் சொன்ன விபரம் அமீரிப்னு ஷுஐப்(ரலி) அறிவித்து அபூதாவூதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, பெண்கள் தங்க நகைகளுக்கு ஜகாத் கொடுக்கத்தான் வேண்டும்.
தேவையானப்பதிவு.
அஸ்ஸலாமு அலைக்கும்.தெ ரிமைன்டர்.என்றதலைப்பில்வெளியானசிறு கட்டுரை மிகவும் அருமைநம் சம்பாத்தியங்களை நிலை நிறுத்துவது ஜகாத் என்பதில்துளியளவும் சந்தேகம் இல்லை..
அஸ்ஸலாமு அலய்க்கும் ஃபாத்திமா,
நோன்பு எப்படி போயிக்கொண்டுள்ளது? நீங்கள் தொலைபேசி எண் தந்தும் உரையாட நேரமின்றி இருக்கின்றேன்..சிறு மகனை வைத்துக் கொண்டு அவனுடன் ஓடவே நேரம் பத்தவில்லை. மன்னிகவும், என்னுடைய சோம்பேறித்தனமும் அதில் சேர்ந்து விட்டது. ஓமஹாவில் அதிகமான பள்ளிகள் இல்லை, இருப்பதும் 3 பள்ளிகள் அதிலும் ஒன்று கட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது, மீதம் இரண்டு சோமாலியர்களும் ஆஃப்கானிகளுமே ஜாஸ்தி. எனினும் எல்லாரும் ஒன்றாக ஸலாத்திற்கு நிற்கும்போது அடையும் ஆனந்தமே ஆனந்தம். நான் ரமதான் மாதத்திற்காக வேண்டி இன்னொரு வலைப்பூவையும் ஆரம்பித்தேன். முடிந்தால், நேரமிருந்தால் அதிலும் பங்களியுங்கள். எங்களையும் எங்கள் பெற்றோரையும் து'ஆவில் நினைவு கூறுங்கள் இன்ஷா அல்லாஹ். சீக்கிரமே உங்களிடம் தொலைபேசியில் உரையாட முயல்கிறேன், வ ஸலாம்.
அஸ்ஸலாமு அலைக்கும்,,,
அதிரை எக்ஸ்பிரஸில் நீங்கள் கேட்ட ஜகாத் சம்பந்தமாக அபூஅஸிலா என்ற சகோதரர் எழுதிய விளக்கத்திற்கு என்னுடைய கருத்தையும் எழுதியிருந்தேன். அதை அவர் மட்டுருத்திவிட்டார். நான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு ஆதரவாக எழுதுவதால் அப்படி செய்கிறார் என்று நான் நினைக்கிறேன். அந்த குழுமத்தில் அவரும் மட்டுருத்தினராக இருக்கலாம். உங்களுடைய மெயில் முகவரி எனக்கு தெரியாது. எனவே எப்படி விளக்குவது என்பது தெரியவில்லை.
சுருக்கமாக,,,
வீடு கட்டி குடியேறினாலும் சேமிப்பு என்று வைத்திருந்தாலும் அதற்கு ஜகாத் உண்டு. ஏனெனில் எந்த நோக்கத்தில் வைத்திருந்தாலும் சொத்து சொத்து தான். சொத்துக்களுக்கு ஜகாத் என்பதில் இது அடங்கும். கொடுத்த பொருளுக்கு ஜகாத் மீண்டும் என்பது இல்லை. எனவே அவர் ஜாகாத் கொடுக்காத அனைத்திற்கும் உடனே கொடுத்து விடுவது நல்லது. ஏனெனில் எப்போதும் மரணம் வந்து விடலாம். அவர் எப்போது கொடுக்கிறாரோ அன்றைய மதிப்பில் இரண்டரை சதம் கொடுக்கனும்.
--------------------------
அம்வால் சொத்துக்கு ஸகாத் என்று குர் ஆன் கூறுகிறது. பார்க்க 9:103
பணம் நகை வீடு நிலம் உள்ளிட்ட அனைத்துமே சொத்து தான். சொத்து என்பது நிரூபனமாகும் போது அதற்கு ஜகாத் உண்டு என்பதும் நிரூபணமாகின் விடும்.
அன்புடன்
அதிரை - சர்புதீன்
ஜித்தாவிலிருந்து.
sarfudin@gmail.com
Post a Comment