Sunday, August 29, 2010

நரகத்திற்கே உரித்தான சதை

ஹராமான உணவால் ஏற்படும் விளைவுகள்
1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.
2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.
3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.
4. துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.
5. செல்வத்தில் பரக்கத் இருக்காது.
6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.
7. குழந்தைகள் மோசமாகிவிடுவார்கள்.
8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.
9. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.
10. ஹராமால் வளர்ந்த சதை நரகத்திற்கே உரியது.
11.ஹராமை சாப்பிடுபவன் அல்லாஹ், ரசூல் ஆகியோரின் கோபத்திற்கு ஆளாவான்.

ஒரு முறை சஅத் பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் நபியவர் களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் கேட்கும் துஆவை இறைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதற்காக தாங்கள் துஆ செய்யுங்கள்" என்று கூறினார்கள். அதற்கு நபியவர்கள், "சஅதே! உங்களின் உணவை ஹலாலானதாகவும் சுத்தமானதாகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். துஆக்கள் ஏற்றுக்கொள் ளப்படும் மனிதர்களில் நீர் ஆகி விடுவீர். ஹராமான ஒரு கவள உணவு நாற்பது நாட்களின் நல்லமல்களை ஏற்றுக்கொள்ளப்படாமல் ஆக்கிவிடும். மேலும், ஹராமான உணவில் உருவான சதை நரகத்திற்கே உரியதாகும்" என்று கூறினார்கள்.    (நூல்: தஃப்சீர் இப்னு கஸீர், பாகம்:1,பக்கம்:203)

நன்றி:மனாருல்ஹுதா ஜூலை 2007

4 comments:

ஜெய்லானி said...

ஜஸாகுமுல்லாஹ் க்கைர்...

நம்மை அறியாமல் (யாராவது தந்து)உள்ளே போகாமல் இருக்கவும் அல்லாஹ் துனை புரிவானாக..!! ஆமீன்

அன்னு said...

மாஷா அல்லாஹ் ஃபாத்திமா அருமையான, தேவையான பதிவு.
அபூ பக்ர்(ரலி) வாழ்க்கையில் நடந்த சம்பவம்தான் நினைவுக்கு வருகின்றது. அவர் ஒரு தடவை அவரின் அடிமை அல்லது வேலையாள் வீட்டிலிருந்து கொணர்ந்த சாப்பாட்டை சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அப்போது அவர் அந்த வேலையாளிடம் கேட்பார், இந்த சாப்பாட்டிற்கு பணம் எங்கிருந்து வந்ததென்று; அவரின் வேலையாள் கூறுவான், நான் ஒருவனுக்கு ஜோதிடம் பார்த்தேன், அதில் கிடைத்த பணத்தை கொண்டு சமையல் செய்தேன் என்று. உடனே அபூ பக்ர்(ரலி) அவர்கள் விரலை வாயில்விட்டு அத்தனை சாப்பாட்டையும் வெளியே எடுத்துவிடுவார்கள். இந்த சம்பவத்தைப் பற்றி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு தெரிய வரும், அப்பொழுதுதான் அபூபக்ருக்கு 'அஸ்ஸித்தீக்' என்னும் பெயரை முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வைப்பார்கள், மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டே சொல்வார்கள், அவர் அஸ்ஸித்தீக் ஆயிற்றே, அவரின் வாயில் ஹறாமான் உணவு நுழையாது என்று. அப்படியும் மனிதர்கள் வாழ்ந்தார்கள்!! மாஷா அல்லாஹ். நன்றி, பகிர்வுக்கு.

அதிரைநிருபர் குழு said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரி ஃபாத்திமா அவர்களுக்கு,

அதிரை ஷிஃபா மருத்துவமனை பற்றிய கட்டுரை ஒன்றை நம் அதிரை அஹமது எழுதி அதிரை வலைப்பூக்கள் பலவற்றில் வெளிடச்சொல்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்கள், அதன் தொடர்ச்சியாக அதிரை வலைப்பூக்கள் சில வற்றில் இது பதியப்பட்டுள்ளது. உங்கள் வலைப்புவிலும் பதிந்தால் இன்னும் சிலரை சென்றடைய வாய்ப்புள்ளது. எங்கள் அதிரைநிருபர் வலைப்பூவில் கட்டுரை உள்ளது, அதை நீங்கள் எடுத்து உங்கள் வலைப்பூவில் பதிந்துக்கொள்ளலாமே.

தலைப்புக்கு சம்பந்தமில்லாத பின்னூட்டமாக இருப்பதால் இந்த பின்னூட்டத்தை பதிய வேண்டாம்.

அன்புடன் சகோதரன்

தாஜுதீன்
adirainirubar@gmail.com

ராஜவம்சம் said...

சிறப்பானப்பதிவு
அதர்க்கு மெருகூட்டுகிரது
அன்னு வின் பின்னூட்டம்.