Tuesday, July 24, 2012

ரமழானை வரவேற்போம் - பத்து அம்சத் திட்டம்


ரமழான் எனும் புனித மாதம் அண்மிவிட்டது. இந்த ஆண்டின் ரமழானை அடைந்துகொள்ளாமல் மரணித்துவிட்ட முஸ்லிம்கள் அனைவருக்கும் நம் பிரார்த்தனைகள் உரித்தாகட்டும். இதை நமக்கு அடையத் தந்த அல்லாஹ்வைப் புகழ்கிறோம்! இந்தப் புனித மாதத்தை எதிர்நோக்கும் விதத்தில் ஆவலுடன் முஸ்லிம் சமுதாய அமைப்புகளும் தனி நபர்களில் பலரும் பல்வேறு நினைவூட்டல் நிகழ்வுகளும் அறிவுரைகளும் வழங்கி அவற்றின் மூலம் முஸ்லிம்கள் அதிகமாக நன்மைகளைப் பெறவேண்டும் என்ற நன்நோக்கத்தில் மிகவும் ஆர்வத்துடன் செயல் படுகின்றனர், அல்ஹம்துலில்லாஹ்!


அவ்வழியில் நாமும் பத்து அம்சத் திட்டம் ஒன்றை சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு வழங்குகிறோம். அவற்றைச் செயல்படுத்துவதன் மூலம் நாம் ரமழானில் மட்டுமின்றி ரமழான் அல்லாத மற்ற நாட்க்ளிலும் பலன் பெற்று இம்மை வெற்றியும் மறுமை ஈடேற்றமும் பெற அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமீன்.

1) ரமழானின் நோக்கம்  நாம் "தக்வா"  எனும் இறையச்சத்துடனும் இறையுணர்வுடனும் ஒவ்வொரு விஷயத்திலும் செயல்பட வேண்டும் என்பதாகும் நாம் சென்ற ரமழானிலும் ரமழானிற்குப் பிறகு இன்று வரையும் அவ்வாறு செயல்பட்டோமா? செயல்படுகிறோமா? என்று ஒரு முறையாவது சில நிமிடங்களை ஒதுக்கி, பள்ளியிலோ இரவின் தனிமையிலோ முதலில் சுயபரிசீலனை செய்ய வேண்டும்.

2) நமது கடமையான தொழுகைகளை நிறைவேற்றியது, அவற்றைப் பள்ளியில் ஜமாத்தோடு தொழுதது, உபரியான தொழுகைகள் மற்றும் குர்ஆனோடுள்ள தொடர்பு, வறியவர் துயர் நீக்கிடும் ஜகாத்-ஸதகா போன்ற தர்மங்கள் கொடுத்தது, சென்ற ரமழானுக்குப் பிறகு நமது ஈமானின் நிலையில் உறுதி கூடி இருக்கிறதா? என்று தன்னாய்வு செய்ய  வேண்டும்.

3) நம்முடைய அன்றாட அலுவல்கள் கடந்த ரமழானுக்கு முன்னர்; ரமழானில்; ரமழானுக்குப் பின்னர் இன்றுவரை எவ்வாறு இருந்தது; இருக்கிறது; இருக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்து, உறுதி பூண்டு, செயல் திட்டமிட்டு நீறைவேற்ற முனைய வேண்டும்.

4) அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்களில் பொருட்செல்வம், சிந்தனை ஆற்றல், நேரம் போன்றவற்றை எவ்வாறு செலவழித்தோம் என்பதை மனத்தில் அசைபோட்டுப் பார்த்து,  அவற்றை இறைதிருப்தியைக் கூடுதலாகப் பெறும் வகையில் ஆன்மீக, சமுதாய நற்பணிகளில் ஈடுபடுத்திட வழிகோல வேண்டும்.

5) ரமழான் என்பது குர்ஆனுடைய மாதம் என்பதால் ரமழானில் மட்டும் குர்ஆனை அதிகமாக ஓதி, குர்ஆனோடு தொடர்புடைய வாழ்க்கை என்பது ரமழானில் மட்டுமே என்ற குறுகிய எண்ணம் கொண்டுவிடாமல் முழு மனிதகுலத்துக்கும் நேர்வழி காட்டி, ஈடேற்றதின்பால் இட்டுச் செல்லும் இறைவேதம் அருளப்பட்ட மாதம் குர்ஆன் எனும் உயர்நோக்கில் குர்ஆனை என்றென்றும் பொருள் உணர்ந்து ஓதுவதோடு, அதன் சட்ட-திட்டங்களை நம் வாழ்வின் இறுதி மூச்சுவரை கடைப்பிடிக்கவேண்டும்.

6) கடந்த ரமழானில் நாம் நோற்ற நோன்பு, பொய்யும் புறமும் வீணானவையும் கலவாது இருந்ததா? அப்பயிற்சி ரமழானுக்குப் பின்னரும் தொடர்ந்ததா? கடந்தகால ரமழான் நோன்புகளை நோற்றதன் மூலம் நமது வாழ்க்கையில் தீமையான செயல்கள் அற்றுப் போயினவா? குறைந்தனவா? போன்ற கேள்விகளை நமக்கு நாமே கேட்டு விடைகாண வேண்டும்.

7) ரமழான் எனும் இந்த கண்ணியமான மாதத்தில் செய்யப்படும் அமல்களுக்கும்  தர்மங்களுக்கும் பல மடங்கு நன்மைகள் உள்ளன என்பதை உணர்ந்து, (உம்ரா போன்ற) வழிபாடுகளை அதிகப்படுத்தினோமா? தீய, வீணான செயல்களைத் தவிர்த்துக் கொண்டதோடு நன்மையான செயல்பாடுகளைக் கூட்டிக்கொண்டோமா? கடந்த ரமழானில் நம் வாழ்வில் தீயவை குறைந்து நல்லவை கூடியிருப்பின் அவை ரமழானுக்கு மட்டுமில்லை; வாழ்நாள் முழுவதற்கும் எனும் எண்ணத்துடன் பயிற்சியுடன் தொடர்வோமாக!

8) ரமழான் இரவுத் தொழுகையின் மகத்துவத்தை உணர்ந்து அவற்றை பேணினோமா, எண்ணிக்கைகளுக்கு முக்கியமளிக்காமல் அதில் அல்லாஹ்வோடு இருந்த ஈடுபாட்டிற்கும் இறையுணர்வுக்கும் முக்கியமளித்ததோடு நமது தேவைகளை அதன் மூலம் அல்லாஹ்விடம் சமர்ப்பித்தும், நமது பாவங்களையும் குறைகளையும் நினைத்து வருந்தி அழுது முறையிட்டு தீர்வு பெறும் பழக்கத்தை கடந்த ரமழானிற்குப் பின்னரும் கடைப்பிடித்தோமா?

9) ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த லைலதுல் கத்ரு எனும் இரவைக் கடந்த ரமழானின் கடைசிப் பத்து இரவுகளை வணக்கத்தில் கழித்திடவேண்டி கண்விழித்து, இத்திகாஃப் எனும் பள்ளியில் தங்கி வணக்கம் புரிந்திட நமது பணிகளில் இருந்து விடுப்பு எடுத்தோமா எடுக்க நாடினோமா அல்லது, ரமழான் இரவுகளை உடுப்புகள் அணிகலன்கள் வாங்கி அமல்கள் புரிய வேண்டிய காலத்தை இழந்து அலைபவர்கள்போல் அல்லாமல் ரமழானுக்கு முன்னரே நமது கொள்முதல்களை முடித்துக் கொண்டு ரமழானின் நன்மைகளைக் குவிப்போமா?

10) ரமழானில் நோன்புடன் இருக்கும் போது டீவியும் சினிமாவும் தவிர்க்க வேண்டும் என்பதைவிட வீணானவைகள் எதிலும் எங்கும்  தவிர்க்க வேண்டும் என்பதை மற்ற நாட்களிலும் உணர்ந்திட இஸ்லாமியச் சிந்தனை, இறையுணர்வு, இறையச்சம், அதிகரித்திட வழிகோலும் வாய்ப்பு வசதிகள் நம் சமகால வாழ்வில் குவிந்து கிடக்கின்றன. இஸ்லாமிய நூல்கள், கேஸட்டுகள், மார்க்கப் பிரச்சார ஒளிபரப்புகள், இணைய தளங்கள் (ISLAMIC WEB SITES http://www.satyamargam.com/) போன்றவை நிறைய உள்ளன. அவற்றோடும் அவற்றை அறிமுகப்படுத்தும் அமைப்புகளோடும் ஈடுபாடு கொள்வதும் பிறரையும் கொள்ளச் செய்வதும் நம்மை இந்த ரமழான் மாதத்தின் நோக்கத்தைப் பெற உதவும் என்பதையும்  உணர்வோமாக.

அல்லாஹ் நம்மையும் நம் உற்றர் உறவினர் அண்டை வீட்டார் அண்டை நாட்டார் என்று முழு மனித சமுதாயக் குடும்பத்தையும் இந்த உண்மைகளையும் உணர்வுகளையும் ஏற்றுச் செயல்பட்டு இம்மை எனும் இவ்வுலக வாழ்விலும் மறுமை எனும் நிலையான வாழ்விலும் நன்மைகளைப் பெற்றுக்கொண்ட வெற்றியாளர்களாக அருள் புரிய பிராத்திப்போமாக!

தொகுப்பு : இப்னு ஹனீஃப்

Sunday, July 15, 2012

கப்ரு வணங்கிகளின் கொலைவெறி தாக்குதல்


அவ்லியாக்களின் கபுர்களின் மீதுள்ள கட்டடங்களை தரைமட்டமாக்குவதற்கு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டாகள்:-

ஹதீஸ் ஆதாரம்:- உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள் என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: அபுல் ஹய்யாஜ் அல் அஜதி (ரலி), நூல்கள் : அபூதாவுத், நஸயீ, திமிதி, அஹ்மத்.

அவ்லியாக்களின் கப்ருகளில் மஸ்ஜிதைக் கட்டுபவாகள் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவர்கள்:-ஹதீஸ் ஆதாரம்:-

யஹுதிகளையும், நஸாரக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கபுகளை மஸ்ஜிதாக ஆக்கிக்கொண்டனர் (நூல் : புகாரி)
அவ்லியாக்களின் கபுர்களில் தர்ஹாக்களை எழுப்புபவர்கள் அல்லாஹ்வின் படைப்பினங்களிலேயே மிகவும் கெட்டவர்கள் ஆவாகள்:-ஹதீஸ் ஆதாரம்:-

அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும் போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். இவாகளின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்வர்கள் அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் புகாரி மற்றும் முஸ்லிம்.

அவ்லியாக்களின் கபுர்களில் சந்தனம் போன்றவற்றைப் பூசக்கூடாது:-ஹதீஸ் ஆதாரம்-1:-
கப்ருகள் பூசப்படுவதை நபி (ஸல்) அவர்கள் தடுத்தனர் அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), ஆதார நூல்கள் : அஹ்மத், முஸ்லிம், நஸயீ மற்றும் அபூதாவுத்.
ஹதீஸ் ஆதாரம்-2:-

கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படுவதையும் அவற்றின் மீது கட்டடம் (தர்ஹா) எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தனர் அறிவிப்பவர்: ஜாபி (ரலி), ஆதார நூல் : திமிதி.

அவ்லியாக்களின் கபுர்களில் கந்தூ விழாக்கள் நடத்தக்கூடாது:-ஹதீஸ் ஆதாரம்:-

எனது கப்ரை (கந்தூ) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கிவிடாதீகள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கிவிடாதீகள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்து சொல்லுங்கள். அது என்னை வந்தடையும் அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம்: அபூதாவுத்.

அவ்லியாக்களின் கபுர்களை வணங்கும் இடமாக ஆக்கக்கூடாது:-ஹதீஸ் ஆதாரம்-1 :-

யஹுதிகளும், நஸராக்களும் தங்கள் நபிமார்களின் கப்ரை வணங்குமிடங்களாக ஆக்கிக்கொண்டனர். அல்லாஹ் அவர்களைச் சபிப்பானாக அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம்.

ஹதீஸ் ஆதாரம்-2 :-
உங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்கள் தங்கள் நபிமார்களின் கபுருகளையும், நல்லடியார்களின் கபுருகளையும் வணங்குமிடமாக ஆக்கிவிட்டனர். அறிந்து கொள்க! கபுருகளை வணங்குமிடமாக ஆக்கிவிடாதீகள்! அதை நான் தடுக்கிறேன் அறிவிப்பவர் : அப்துல்லாஹ் அல்பஜலி (ரலி), நூல் : முஸ்லிம்.

Monday, May 7, 2012

இத்தாலிய அமைச்சரின் பர்தா பற்றிய பஞ்ச் டயலாக்



இறைவனின் தூதர்களில் ஒருவரான  ஈசா நபியின் (இயேசு)அவர்களின் தாய் மர்யம் அலை (மேரி )அவர்களைப் பற்றி முஸ்லிம்கள் மிக உயர்வாக எண்ணுகிறார்கள்.இருவரையும் பெரிதும் மதிக்கிறார்கள்,ஈசா நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும்,அவனின் அடிமை என்றும் நம்புகிறார்கள்,மேலும் அவர்களின் தாயான மர்யம் அலை அவர்கள்,அல்லாஹ்வின் அற்புதம் கொண்டு - தகப்பன் இன்றி இயேசு அலை அவர்களை பெற்றார்கள் என்றும் நம்புவதோடு,இருவரும் கடவுள் அல்ல,கடவுளுக்கு மகனும் அல்ல,கடவுள் தன்மையும் இருவருக்கும் இல்லை என்றும் உறுதியாக நம்புகிறார்கள்.

மேலும்,இயேசு அலை,மர்யம் அலை இன்னார்தான் என்று எந்தப் புகைப்படமோ,சிலைகளோ மேலும் அது போன்றதையோ முஸ்லிம்கள் நம்பவில்லை.கீழ்காணும் படங்கள் கற்பனையே,மேலும் இத்தாலி அமைச்சரின் கமெண்ட்டை படம் மூலம் விளக்கும் முகமாக  அந்த அமைச்சர் பர்தா பற்றி என்ன சொல்ல வருகிறார் என்று சொல்லவே இப்படமும்,கருத்தும்.











Saturday, May 5, 2012

நபிகளார் மொழிந்தவை


இறைத்தூதராக நியமிக்கப்பட்ட அந்த நிமிடம் முதல் - அண்ணலாரின் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் - அவர்களின் சிறுசிறு அசைவுகளும் கூட மிகக் கவனமாகப் பதிவு செய்யப்பட்டன. காரணம்: திருநபி (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் வாழ்க்கை திருகுர்ஆனின் செயல்வடிவாகத் திகழ்ந்தது. அதாவது, நடமாடும் குர்ஆனாக அவர்கள் திகழ்ந்தார்கள். வாழ்வின் ஏதோ ஒன்றிரெண்டு துறைகளுக்கு மட்டுமல்ல அனைத்து துறைகளுக்கும் வழிகாட்டினார்கள். அவர்கள் நிகழ்த்திய சொற்பொழிவுகள், தந்த அறிவுரைகள், ஏவிய செயல்கள், தடுத்த காரியங்கள் ஆகிய அனைத்துமே மனிதனுக்கு வழிக்காட்டும் ஒளி விளக்குகளாய் விளங்குகின்றன.

நபிகளார் மொழிந்தவை:

1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.


2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.


3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.


4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.


5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.


6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.


7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.


8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.


9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.


10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.


11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.


12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.


13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.


14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்கு
அளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.


15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.


16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.


17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.


18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.


19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.


20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.


21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.


22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.


23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.


24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.


25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.


26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.


27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.


28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.


29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.


30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.


31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.


32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.


33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.


34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.


35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.


36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.


37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். 38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.


39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.


40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.


41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.


42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.


43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.


44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.


45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.


46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.


47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.


48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.


49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.



50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.

51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.


52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.


53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.


54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்


55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.


56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.
57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.


58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.


59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.


60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்.

Tuesday, April 24, 2012

குர்ஆனின் முன்னறிவிப்புகள்,விண்வெளிப் பயணம்!

ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?. “மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால், (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.” அல்குர்ஆன் 55:32-33 
இவ்வசனம் விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ள முடியும் என்று தெளிவாகச் சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது. 
ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே தவிர நீங்கள் இந்த எல்லைகளையெல்லாம் கடக்க இயலாது என்றும் கூறுகிறது. 

விண்ணில் பறக்க முடியுமா? என்பதைக் கற்பணை செய்து கூட பார்திராத அந்த சமுதாயத்தில் முடியும் என்பதையும், அதற்கென ஒரு ஆற்றல் தேவை என்பதையும் கூறி, இறை வேதம் தான் என்று திருக்குர்ஆன் தன்னை நிரூபித்துக் கொள்கிறது.

Saturday, April 14, 2012

மத்திய அரசின் சட்டம் செல்லும், தனியார் பள்ளிகள் எதிர்ப்பு

 லட்சக்கணக்கான ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் வகையில் சரித்திர புகழ்வாய்ந்த தீர்ப்பு ஒன்றினை அளித்துள்ளது உச்சநீதிமன்றம். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஏழை மாணவர்களுக்கு கட்டாய மற்றும் இலவச கல்வி அளிக்கவேண்டும் என்ற மத்திய அரசின் சட்டம் செல்லும் என்பதுதான் அது.

ஏழை மாணவர்கள் அகரம் படிக்க பள்ளிக்குச் செல்வது அரசுப்பள்ளிக்குத்தான். அரசுப் பள்ளிகள் தொலைவில் இருக்கும் பட்சத்தில் ஏழைகளுக்கு கல்வி என்பது எட்டாக்கனியாக இருக்கிறது. அரசு உதவி பெரும் தனியார் பள்ளிகளில் பணம் செலவழித்து சேர்ப்பதற்கு இயலாத சூழ்நிலையில் அவர்களுக்கு கல்வி என்பது கனவாகவே போய்விடுகிறது.

இதை மனதில் கொண்டுதான் கடந்த 2009 ம் ஆண்டு கல்வி என்பது அனைவருக்கும் அடிப்படை உரிமை என்பதை உணர்த்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டுவந்தது. இந்த சட்டத்தின் படி அனைத்து மாநில அரசுகளும் 6 வயதில் இருந்து 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கட்டாயமாக இலவச கல்வி அளிக்கவேண்டும் அனைத்து பள்ளிகளும் ஏழைகளுக்கு 25 சதவிகித இடத்தை இலவசமாக ஒதுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டது.

தனியார் பள்ளிகள் எதிர்ப்பு

மத்திய அரசின் சட்டம் தனியார் பள்ளிகளுக்கு உள்ள உரிமைகளை மீறும் வகையில் உள்ளது, இதை ரத்து செய்யவேண்டும் என்று அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் அரசுதரப்பு, தனியார் பள்ளிகள் தரப்பு வாதங்களைக் கேட்ட தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஸ்வாதந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமையன்று வரலாற்றின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படக்கூடிய தீர்ப்பினை அளித்துள்ளது.

கல்வியை அடிப்படை உரிமையாக்கி மத்திய அரசு கொண்டுவந்துள்ள கட்டாய கல்வி உரிமைச் சட்டம் செல்லும். இந்த சட்டம் அரசு உதவிபெறாத சிறுபான்மையினர் பள்ளிகளைத் தவிர இதர அனைத்து பிரிவு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்.

அனைத்து பள்ளிகளும் 25% இடங்களை ஏழைக் குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளனர். இந்த தீர்ப்பு உடனே நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை அமைப்புகளால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கும், அரசிடம் இருந்தோ, உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தோ நிதி உதவி பெறாத நிறுவனங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது எனவும் நீதிபதிகள் நீதிபதி ராதா கிருஷ்ணன் கூறிய தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அமர்வில் இடம்பெற்றிருந்த மற்ற நீதிபதிகள் அரசு உதவிபெறாத தனியார் பள்ளிகளுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என தீர்ப்பளித்தனர்.

கபில் சிபல் வரவேற்பு

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ளார். இந்த தீர்ப்பின் மூலம் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்றார்.

சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்பின் மூலம் அடிப்படை வசதியற்ற ஏழை மாணவர்களுக்கும் கல்விச் செல்வம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு திருத்தம்

இதனிடையே கட்டாய கல்விச்சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், மாற்றுத்திறனாளி குழந்தைகளும் சேரும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வந்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.



Friday, March 30, 2012

தங்கமடி தங்கம்



பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.

ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும்,சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.

திருக்குர்ஆன் 

மறுமை நாளில் இறை மறுப்பாளன் (விசாரணைக்காகக்) கொண்டுவரப்பட்டு 'உனக்கு பூமி நிரம்பத் தங்கம் சொந்தமாக இருந்தால் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் நரக வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாயல்லவா?' என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் 'ஆம்' என்று பதிலளிப்பான். அப்போது 'இதைவிட சுலபமான ஒன்றே (-அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையே) உன்னிடம் கோரப்பட்டிருந்தது. (ஆனால், அதை நீ ஏற்கவில்லை)' என்று கூறப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறி வந்தார்கள். 

அனஸ் இப்னு மாலிக்(ரலி) 

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் 





 தங்கம் மென்மையான உலோகம்ஆதலால் சுத்தத் தங்கத்தில் செய்யப்பட்ட நகை உறுதியாக இருக்காது. தங்கத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவு அல்லது வெள்ளி செம்புயைக் கலந்து செய்யப்பட்ட நகை ,நாணயம்பாத்திரம் முதலியவை உறுதியாக இருக்கும். தங்க பாத்திரங்கள் மட்டுமின்றி பேனாமுள், கைக்கடிகார உறுப்புகள்ஆகியவையும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. இன்றைய நகை ஆசாரிகள் நகை செய்ய வசதியாக இருக்குமேன்பதர்காக காட்மியம் உலோகத்தையும் சிறிதளவு சேர்கிறார்கள் .வைன் அல்லது சாராயத்தில் சிறிதளவு அரைத்து பொடியாக்கிப் பருகுவர் . இதனை தங்கபஸ்பம் என்று கூறுவார் . தங்கபஸ்பம் பருகினால் மேனி பொலிவடையும் என்பது பலரது நம்பிக்கை.தங்கத்தை மறு பயன்பாடு செய்ய முடியும். இவை அன்றைய சந்தை விலைக்கேற்ப மதிப்பிடப்படுகின்றன. எனவே தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. உலகிலேயே அதிகமான தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடு அமெரிக்கா.


ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலாவணியிலும் (பண மதிப்பு) தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அந்த்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாடும் அதன் மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றாவாறு அந்த நாட்டு அரசாங்கம் செலாவணி அல்லதுநாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்புகணக்கிடப்படுகிறது.


தங்கத்தின் '''காரட்''' என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்புவெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.


WIKIPEDIA





சீனாவில் தூக்கியெறிக்கப்பட்ட 100 மில்லியன் மொபைல்போன்களிலிருந்து 1,500 கிலோ தங்கம், 1 மில்லியன் கிலோ அளவிற்கு தாமிரம், 30 ஆயிரம் கிலோ அளவிற்கு வெள்ளி உள்ளிட்டவைகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை என்கிறது சீனா. 

இது குறித்து, சீனாவிலிருந்து வெளிவரும் பீபிள்ஸ் டெய்லி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் அளவிற்கு மொபைல்போன்கள் தூக்கி வீசப்படுவதாகவும், சீனாவில் மட்டும் 100 மில்லியன் மொபைல்போன்கள் தூக்கியெறிக்கப்படுகின்றன. 
இதன்மூலம், சீனாவில் மட்டும் 150 கிராம் தங்கம், 100 கிலோ காப்பர் மற்றும் 3 கிலோ சில்வர் பிரித் தெடுக்கப் பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NAKKEERAN



Sunday, February 19, 2012

அரபி பயிற்றுவிக்க பெண் ஆசிரியைகள் தேவை..


முத்துப்பேட்டை ரஹ்மத் மெட்ரிகுலேஷன் பள்ளீயில் அரபி வகுப்புகளுக்கான ஆசிரியைகள் தேர்வு நடைபெருகிறது . இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையிலிருந்தும் மற்றும் 1 ஆம் வகுப்பு முதல் 12 வகுப்புவரை அரபி பாடங்கள் நடத்தவும், அரபி படிக்க எழுத பேசத்தெரிந்த பட்டப்படிப்பு படித்த முஸ்லிம் பெண் ஆசிரியைகள் தேவை. விருப்பமுள்ளவர்கள் முழுவிபரம் மற்றும் தொலைபேசி எண்களோடு கீழ்காணும் ஈமெயில் முகவரியில் தொடர்புக்கொள்ளவும்.
 
சகோதரி மலிக்கா, fmalikka@hotmail.com

Saturday, February 18, 2012

சொர்க்கம் போகலாமா? கிராமவாசியின் ஆசை !


அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 


கிராமவாசி ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் சுவர்க்கம் செல்வதற்கேற்ற ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; கடமையான தொழுகையையும் கடமையான ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும்; ரமலானில் நோன்பு நோற்கவேண்டும்" என்றார்கள். அதற்கவர், 'என் உயிர் எவன் கைவசத்தில் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! இதைவிட அதிகமாக எதையும் செய்ய மாட்டேன்' என்றார். அவர் திரும்பிச் சென்றதும் நபி(ஸல்) அவர்கள், 'சுவர்க்கவாசிகளில் ஒருவரைப் பார்க்க விரும்புவோர் இவரைப் பார்க்கட்டும்" என்றார்கள். 


நபிகள் நாயகம் ஸல் அவர்களின் நன் மொழி ஸஹிஹ் அல் புஹாரி 1397 

Monday, January 23, 2012

குர்ஆனின் அத்தாட்சி, ஃபிர்அவ்ன்

“இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய். 

எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்” (என்று அவனிடம் கூறப்பட்டது). அல்குர்ஆன் 10:90-92 Firoun


http://www.tamililquran.com/quran_proof.asp?file=quran_proof_8.html