Sunday, February 13, 2011

தோலில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன! இறைவனின் இறுதி வேதம் திருக்குர்ஆன் வரலாறு. பாகம் 3

வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள் மனிதனின் தோலில் தான் உள்ளன. தோல் கரிந்து விட்டால் எந்த வேதனையையும் மூளை உணராது என்பது சமீபத்திய கண்டு பிடிப்பு. 


இதனால் தான் மேல் தோலை மட்டும் மரத்துப் போகச் செய்யும் ஊசிகளைப் போட்டு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்கின்றனர். முழு உடலையும் மரத்துப் போகச் செய்வதில்லை. அவ்வாறு மரத்துப் போகச் செய்தால் மனிதன் செத்து விடுவான்.


அது போல் தான் தீக்காயத்தில் தோல் கருகிப் போனவர்கள் வேதனையால் துடிக்காமல் இருப்பதையும் காண்கிறோம். 


4:56யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.


திருக்குர்ஆன்'அவர்களின் தோல் கருகும் போது அதை மாற்றுவோம்என்று கூறாமல்'வேதனையை அவர்கள் உணர்வதற்காகவே மாற்றுவோம்என்று 14நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூறுவதென்றால் மனிதனைப் படைத்த இறைவனால் தான் சாத்தியமாகும். திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக அமைந்துள்ளது. 

Monday, February 7, 2011

இரவு மட்டும்.........


சமீபத்தில் ஒரு மருந்து கடை ரசீதின் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டிருந்த குறிப்புகள் மிகவும்உபயோகமாக இருந்ததால் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

பொதுவாக மருந்து சீட்டில் மருத்துவர்கள் குறிப்பிடும் சில  சுருக்கங்களின் விளக்கம்:-
STAT(statim) - Start Immediately - உடன்  தொடங்கவும்.
O.M.  Omni mane (Morning Only) காலை மட்டும்.
O.D.  Omni die(Daily Only)  தினசரி ஒன்று மட்டும்.
B.D  Bis die(Daily twice) தினசரி இரண்டு.
T.D.S  Ter die sumendus (Thrice daily) தினசரி மூன்று.
Q.D.S  Quarter die sumendus (Four times only) தினசரி நான்கு.
Q.Q.H  Quarta quaque hara(Every four hours) நான்கு மணி நேரத்திற்கு ஒன்று.
A.C./B  Ante cibum (Before Food) சாப்பிடும் முன்.
P.R.N.  Pro re neta (when required) தேவைப்படும் பொது.
S.O.S  Only acute pain. வலி ஏற்படும் பொது.
H.S.  One at night இரவு மட்டும்.

மருந்து/மாத்திரைகள் உபயோகிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்:-

1. மருத்துவர் குறிப்பிட்ட காலம்வரை எழுதிக்கொடுக்கப்பட்ட அனைத்து மருந்துகளையும் இடைவிடாமல் சாப்பிடவும்.

2. மருந்துகள் வாங்கும்போது மருந்தின் பெயர்காலாவதியாகும் தேதி போன்றவற்றை அட்டையில் சரிபார்த்து வாங்கவும். போதிய வெளிச்சத்தில் மருந்தை சரிபார்க்காமல் உட்கொள்வதை தவிர்க்கவும்.

3. மாத்திரை அட்டையிலிருந்து பிரித்தேடுக்கும்போது மீதமுள்ள மாத்திரைகள் பக்கம் காலாவதியாகும் தேதி இருக்கும்படி பிரிக்கவும்.

4. மருந்துகளை குழந்தைகளின் கைகளில் எட்டாமலும்உலர்ந்த இடத்திலும் வைக்கவும்.

5. மருத்துவரிடம் செல்லும்  ஒவ்வொரு முறையும் தாங்கள் வாங்கிய மருந்து சீட்டையும்கடை ரசீதையும் தவறாமல் எடுத்து  செல்லவும்.

6. ஏதேனும் மருந்துகள் பற்றிய விவரங்கள் தேவைப்பட்டால் மருந்தாளுனரிடம் தயக்கமில்லாமல் கேட்கவும்.   

Saturday, February 5, 2011

உயிர்கொல்லி காதலுக்கு கொண்டாட ஒரு தினமா?


கிறிஸ்துவ போதகர் வேலன்டைன் என்பரின் நினைவாக ரோம பாரம்பரியத்தின் வாயிலாக உருவானது தான் இந்த வேலன்டைன் தினம். பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் இந்த நாளை வணிகமயாக்குவதற்காகவே மேற்கத்திய நாடுகள் இதை காதலர் தினமாக அறிவித்துள்ளன.
எதற்காக பிப்ரவரி 14 தேர்வு செய்யப்பட்டது என்பதற்கு எந்த சரியான வரலாறும் இல்லாத இந்த நாள், இன்றைக்கு பல பெண்களின் கற்பு பறிபோகும் நாளாக மாறிவிட்டது.
நமது இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல! மேற்கத்திய கலாச்சாரத்தை இங்கும் கடைபிடிக்கின்றனர்,
valentineஇன்றைக்கு உள்ள மீடியாக்கள் காதலை ஊக்கப்படுத்தும் வண்ணம் தனியாக பல்வேறு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கும் அளவிற்கு காதல் சாதரண விஷயம் என்பதையும் தாண்டி ‘அடப்பாவி உனக்கு கேல் ஃபிரண்ட் இல்லையா? அப்ப நீ வேஸ்ட் என்று கூறும் அளவிற்கு கவுரவமான விஷயமாக மாறி விட்டது.
உங்க லவ்வரோட பேர டைப் பண்ணி அப்டி எஸ்.எம் எஸ் அனுப்பு இப்டி எஸ்.எம்.எஸ் அனுப்பு ஒரு எஸ்.எம்.எஸ் க்கு 3 ரூபாய் என்று கூறி காதலர் தினம் என்ற பெயரில் இளைஞர்களிடமிருந்து பணத்தை அபகரிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வருடா வருடம் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.
இஸ்லாமிய இளைஞர்களும் இளைஞிகளும் இந்த காதல் எனும் சமூக சீர்கேட்டில் விழுந்து விடுகின்றனர்.
இதற்கெல்லாம் காரணம் காதல் என்ற பெயரில் நடைபெறும் அநாச்சாரங்கள் மற்றும் அசிங்கங்கள் பற்றிய விழிப்புணர்வும் இஸ்லாம் எந்த அளவிற்கு இதை தடை செய்துள்ளது என்ற அறிவும் நம் பெற்றோர்களிடத்திலும் பிள்ளைகளிடத்திலும், இல்லாமையே.
“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகின்றது; அல்லது பொய்யாக்குகின்றது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243
தவறான பார்வையையும், சிந்தனையையும், பாலியல் தொடர்பான பேச்சுக்களையும் விபச்சாரத்தின் ஒரு பகுதி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
எனவே காதல் என்ற பெயரில் நடந்து வரும் காமக் களியாட்டங்களுக்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.
ஒருவர் ஒரு பெண்ணை மணம் முடிக்க விரும்பினால் அந்தப் பெண்ணின் பொறுப்பாளர்களிடம் போய் பேசி, மணம் முடித்துக் கொள்ள வேண்டும். இது தான் இஸ்லாம் கூறும் வழிமுறை.
திருமணத்திற்கு முன்பு பெண்ணைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முகீரத் இப்னு ஷுஃபா (ரலி) நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு மணம் பேசி முடிக்கப்பட்ட செய்தியைக் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “நீ அந்தப் பெண்ணைப் பார்த்தாயா?” என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “பெண்ணை நீ போய் பார். அது உங்கள் இருவருக்கிடையில் நட்பு வளருவதற்குச் சிறந்ததாக இருக்கும்” என்று கூறினார்கள்.
(நூல்: நஸயீ 3183)
மேற்கூரிய அறிவுரைகளை பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சிறுவயது முதல் கூறி இந்த காதல் எனும் சீர்கேட்டில் பிள்ளைகள் விழுந்து விடாமல்  பாதுகாக்க வேண்டும்.
ஆனால்  மாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்ற போது. பெற்றோரும் சேர்ந்து கொண்டு தான் அதை  பார்க்கின்றனர்.
விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகுவது ஒருபுறமிருக்க  யாருடனேனும் ஓடிப்போகும் போது பெற்றோர்கள் அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு சென்று விடுகின்றனர்.
பெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.
செல்போன் பிள்ளைகளின் ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.
செல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்கள் இளைஞர் மற்றும் இளைஞிகளிடையே இன்றைக்கு சர்வசாதாரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது.
தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள் இந்த செல்போன்களில் தான் நடைபெறுகின்றது: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.
ஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.
ஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.
பிள்கைளுக்கு செல்போன் வாங்கி கொடுப்பதை நிறுத்தினால் பிப்வரி 14 உங்கள் பிள்ளையின் கற்பு பறிபோகும் நாளமாக மாறாமல் தடுக்கலாம்.
இந்த காதல் எனம் சீர்கேட்டால் சமூகத்தின் ஒழுக்கம் எனும் கட்டமைப்பே சீர் குலைந்து விட்டது. எந்த அளவுக்கென்றால் திருமணததிற்கு முன் இப்போழுதெல்லாம் பெண்களுக்கு கன்னி பரிசோதனை (virgin test) நடத்தபடுகின்றது. இந்த காதல் சமூகத்தில் அவ்வளவு ஒழுக்க சீர்கேட்டை கொண்டு வந்துள்ளது.
இந்த காதலினால் ஒழுக்க கேடான விஷயங்கள் ஒருபுறமிக்க இதையெல்லம் மிஞ்சும் அளவிற்கு இந்த காதல் என்ற சீர் கேட்டால் எத்தனை உயிர்கள் பறிபொகின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு காதல் விகாரத்தில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை 217 (தினமணி 8-5-2010).
என்றாவது அம்மா நேசிக்காததால் மகன் தற்கொலை என்ற செய்தியை கேள்வி பட்டுள்ளோமா? கிடையாது!
ஆனால் காதலி நேசிக்காததால் காதலன் தற்கொலை அல்லது காதலியின் முகத்தில் ஆசி ஊற்றினான் ( திருச்சி சம்பவம்) போன்ற செய்திகளை நிறைய கேள்விபட்டிருப்போம்.
மகள் அல்லது மகன் ஓடிப்போய்விட்டதால் பெற்றோர்கள் அவமானத்தில் தற்கொலை செய்கின்றனர். (உம்: தொழிலதிபர் குடுபத்துடன் தற்கொலை)
பிள்ளைகளை ஒழுக்கத்துடன் ஒழுங்காக வளர்த்திருந்தால் இந்த அவல நிலை பெற்றோர்களுக்கு  ஏற்படுமா?
வீட்டில் காதலுக்கு சம்மதிக்காததால் காதல் ஜோடி தற்கொலை! இந்த செய்தியும் பத்திரிக்கைகளில் அதிகம் பார்த்திருப்பீர்கள்.
ஆரம்பத்திலேயே காதல் சீர்கேட்டை பிள்ளைகளுக்கு புரிய வைத்திருந்தால் பிள்ளைகளை பரிகொடுக்கும் அவல நிலை பெற்றோர்களுக்கு ஏற்படுமா?
தன் காதலியை காதலித்தவனை ஆத்திரத்தில் கொலை செய்த காதலன். அல்லது இன்னொருத்தவனை காதலித்ததால் காதலியை கொன்ற காதலன். இந்த செய்தியை பத்திரிக்கைகளில் பார்த்திருப்பீர்கள்.
இதில் கள்ளக் காதல் வேறு! அதில் ”கள்ளக் காதலன் கொலை”  அல்லது ”கள்ளக் காதலி கொலை” என்று உயிர் பலி இதை விட அதிகம் என்பது பத்திரிக்கைப்படிப்பவர்களுக்கு  தெரியும்.
இப்படி உயிர் கொல்லியாகவும், ஒழுக்கக் கேட்டை கட்டவிழ்த்து விடும் செயலாகவும் இருக்கும் இந்த காதலுக்கு ஒரு தினம் வைத்து உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.
இதற்கெல்லாம் காரணம் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை எங்களுக்கு பணம் தான் முக்கியம் என்று மீடியாக்கள் கொஞ்சம் கூடசமுதாய அக்கரை இல்லாமல் செயல்பட்டு இந்த காதலை ஊக்கப்படுத்திக்  கொண்டிருப்பதினால்  தான்.
இப்படி காதலை ஆதரிப்பவர்களிடம் போய் ‘சார் நான் உங்க பொண்ண லவ் பண்ணிக்கவா’ என்று கேட்டால் ”டேய்! உன்ன ஈவ்டிசிங்ல போலிஸ்ல புடுச்ச கொடுத்துடுவேன்” என்று தான் கூறுவார்கள்.
ஏன் காதலித்தவர்களே திருமணத்திற்கு பிறகு நம்ம பிள்ளைகள் காதல் கத்தரிக்கான்னு போய்விடக்கூடாது என்று தான் நினைப்பார்கள்.
அவ்வளவு ஏன்?, ஒரு பெண்ணை காதலிக்கும் இளைஞன் தான், தன் அக்காவையோ அல்லது தங்கையையோ யாரேம் காதலித்தால் முதலில் சண்டைக்கு போவான்.
அடுத்தவன் பிள்ளை நாசமா போனா பரவாயில்லை உன் அக்கா தங்கை நாசமாகிவிடக்கூடாது என்று சுய நலத்தோடு யோசிக்கும் இளைஞர்களே சமுதாய அக்கறையோடு நடந்து கொள்ளுங்கள்!
சமுதாய அக்கரையுள்ள இளைஞர்களும், பிள்ளைகள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இந்த பிப்ரவரி 14 ஐ புறக்கணித்தால் உயிர் பலிகளும் சமூக சீர்கேடுகளும் அசிங்கங்களும் மற்றும் திருணமத்திற்கு முன்பே கற்பு பரிபோகும் நிலையும் ஏற்படாமல் நமது சமுதாயத்தை காப்பாற்றலாம்!
பிப்ரவரி 14  ஆம் தேதியும் டிசம்பர் 1 ஆம் தேதியும் நம்மை பொறுத்வரை ஒன்று தான். எய்ட்ஸ் எனும் உயிர்க் கொல்லி நோய்க்காக டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் நாளாக அறிவிக்கப்பட்டு அதில் எஸ்ட்ஸ் பற்றிய விழிப்புர்ணபு பிரச்சாரம் செய்யப்டுகின்றது(தனி நாள் ஒதுக்காமல் அனைத்து நேரங்களிலும் நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும் என்பதே நமது நிலை).
அதே போன்று தான் பிப்ரவரி 14 ல் காதல்  கொண்டாட்டங்கள் நடைபெறாமல் தடுக்க காதல் எனும் உயிர் கொல்லி பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட வேண்டும். அன்று மட்டும் இல்லாம் எல்லா நேரங்களிலும் இந்த வழிப்புணர் பிரச்சாரங்கள் மக்களிடையே செய்யப்பட வேண்டும்.

Friday, January 28, 2011

கேன்சலே ஆகாத பயணம்


என் இனிய சகோதர, சகோதரிகளே !

நம்மை தூக்கிக்கொண்டு பறப்பதற்காக ஜனாசா ஏர் லைன்ஸ் தயாராக உள்ளது! பயணிகளே கவனமாக  தயாராகுங்கள் !!! 

ஏறும் இடம் (Departure ) : துணியா !  
இறங்கும் இடம் (arrival) : கபர்ஸ்தான் !!.

புறப்படும் நேரம் : நம்மை படைத்த எல்லாம் வல்லாஹ் அல்லாஹ் மட்டுமே அறிந்தவன்.

கவலைபடவேண்டாம் பயண நேரமும் தேதியும் மாற்றத்திற்கு உள்ளாகாது !. விமானமும் கேன்சல் ஆகா சான்சே இல்லை!?.

Destination Air போர்ட் : டெர்மினல் 01  சொர்க்கம் ! /
                                         டெர்மினல் 02 நரகம்!?. 

இது ஒரு ட்ரான்சிட் AIR LINE  ?
இந்த அதிநவீன  ஏர் லயன்சின் திட்டங்களும் விபரங்களும் உலகில் எங்கும் கிடைக்காது ஆனால் 
புனித திருக்குரான் மற்றும் நபிகளார் முகமது சல்லல்லாஹுவசல்லாம்அவர்களின் வாழ்வின் நடைமுறையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
இந்த அதிநவீன  எரோபிளேனின் பெயர் பிரிட்டிஷ் அல்லது கல்ப் அல்லது எமிரேட்ஸ் அல்லது  ஏர் இந்திய கிடையாது. 

ஆனால் இதன் பெயரோ    ஏர்  ஜனாசா !.
இந்த விமானத்தின் கேப்டன் மலக்குல் மவுத் !!!. 
இதனில் உட்காரும் இருக்கை இல்லை, வசதியாக அவரவர்களின் அமல்களுக்கு (செய்த நன்மைகளுக்கு ஏற்ப ) படுத்துக்கொண்டு மட்டும்தான் பயணிக்கலாம் !.
இதில் ரவுண்டு ட்ரிப் கிடையாது ஒன் வே ட்ரிப் மட்டும்தான் !!!.?. 
இதில் கண்டிப்பாக உங்கள் உடமைகளை எடுத்து கொண்டு பயணிக்க இயலாது !, 
ஆனால் நமது அமல்களை எத்துனை கிலோவாக இருந்தாலும் அனுமதி கிடைக்கும் !!.
அதற்காக ஏர்போர்ட் டாக்ஸ் கட்ட வேண்டிய பிரச்னை இல்லை மகிழ்ச்சிதானே ! ?.
இதிலே செல்வதற்கு கோட் சூட் தேவை இல்லைஒரு ஆறு முழ வெள்ளை துணி போதும் ? காசு மிச்சம்தானே !!!.
இதில் நீங்கள் பயணிக்க விசாவிற்கோ மற்றும் ஏர் டிக்கெட் எடுபதற்கோ சிரமபடதேவை இல்லை !!!! ??? காசும் விரயம் இல்லை!?.

உங்களுடை விசாவும் பயண சீட்டும் நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் இருக்கும்போதே தயாராக விட்டது. !!!.

மேலும் மகிழ்ச்சிதானே?! ஆம் உங்கள் சீட் உறுதிசெய்யப்பட்டு விட்டது (confirmed )!. ரீ கன்பாம் செய்யும் பிரச்னை இருக்காது !!!. 
ஆனால் உங்களுடைய சரியான பாஸ் போர்டைவைத்துகொள்ள  மறந்தும் இருந்து விடாதீர்கள் ?

உங்களுக்கு பாஸ்போர்ட் செக்கிங் உண்டு !!!.

பாஸ் போர்ட் செக்கரின் பெயர் முன்கர் மற்றும் நகீர் !!!!!!! ???.

வேறு இந்தியன் or அமெரிக்கன் or பிரிட்டிஷ் or எந்தவிதவிதமான பாஸ்போர்ட்டும் செல்லுபடியாகாது ???. 

ஆனால் ஒரே ஒரு பாஸ் போர்ட் தான் செல்லு படியாகும் !!!.
ஆம் அந்த பாஸ் போர்டின் பெயர் மவுத் !!!!!!.(மரணம் )
அதிலே எல்லாருக்கும் ECR கட்டாயம் ஸ்டாம்ப் உண்டு.
எமிக்ரேசன் கிளியரன்சுக்கு மூன்று கேள்விகளை நமது பாஸ்போர்ட் எமிக்ரேசன் ஆபிசர்  மதிற்பிக்குரிய 
முன்கர் மற்றும் நகீர் அவர்கள் கேட்பார்கள்.

அதை சரியாக  கூறிவிட்டால் உங்கள் ட்ரான்சிட் லவுஞ்சில் சுகமாக ஓய்வு எடுக்கலாம் எந்த விதமான தொல்லையும் இருக்காது!!!. 

ஆனால் சரியாக கூறாவிட்டால் உங்களுக்கு தொல்லை ஆரம்பம் ஆகிவிடும் உங்களின் ட்ரான்சிட் லவுன்ச் நரக லவுன்ச் ஆகிவிடும்???.

உஷார் !

உஷார் !

 உஷார் !

உஷார் !  அந்த மூன்று கேள்விகள் !. 

உன்னுடைய இறைவன் யார் ? விடை அல்லாஹ் !!!!!!.

உன்னுடைய மார்க்கம் எது ? விடை இஸ்லாம் !!!!!!!!.

உன்னுடைய நபி யார் ? விடை முகமது சல்லல்லாஹுவசல்லாம்
மறந்தும் இறந்து விடாதீர்கள் ? பதிலை சொல்ல அல்லாஹ்வும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் முஸ்லிமாக வாழ்ந்து மட்டுமே பதிலலிக்க முடியும்.

சுகமான பயணத்திற்கு தயாராக இருப்போம். 

இன்ஷா அல்லாஹ் !. 

நம்முடைய ஏர்  ஜனாசா !. பயணம் நல்ல பயணமாக அமய துவா செய்யும்,

எங்கள் இறைவனே,எங்களுக்கு இந்த உலகத்திலும் நல்ல வாழ்க்கை தருவாயாக,மறுஉலகத்திலும்(மரணத்துக்கு பின் உள்ள வாழ்வு)நல்ல வாழ்க்கையை தருவாயாக.மேலும் நரக நெருப்பை விட்டும் பாதுகாப்பாயாக

Tuesday, January 25, 2011

காலையிலே பெட்ரோல் குடிங்க? சும்மா எனர்ஜிக்கு!!

காலையில் சாப்பிடும் உணவை எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது; எட்டு அல்லது பத்து மணி நேரம் இடைவெளிக்கு பின், உடலுக்கு “பெட்ரோலாக” தேவைப்படும் உணவு அது.

காலை உணவு முறையை “பிரேக் பாஸ்ட்” என்று கூறுவர். “பாஸ்ட்”டை (உண்ணாதிருத்தலை) “பிரேக்” (துண்டிப்பது) பண்ணுவது என்று அர்த்தம். முதல் நாள் இரவு சாப்பிட்டபின், தூங்கி எழுந்திருக்கும் போது, பல மணி நேரம், சாப்பிடாமல் உடல் இயங்குகிறது. அதனால் அதற்கு, சத்துக்கள் தேவைப்படுகிறது. காலையில் சாப்பிடாமல், மதிய உணவு சாப்பிடலாம் என்று எண்ணுவது சரியல்ல. பத்து மணி நேரத்தையும் தாண்டி பட்டினி போடுவது, உடலில் உள்ள முக்கிய சத்துக்கள் குறைபாடு ஏற்படக் காரணமாகி விடும்.


காலையில் எழுந்தவுடன் காபி, பால் போன்ற பானங்கள் சாப்பிட்டு விட்டு, உணவு அல்லது சிற்றுண்டி சாப்பிடுவோர் பலர் உள்ளனர். சிலர், காலையில், ழுமு உணவு சாப்பிட்டு விட்டு, மதியம் சாதாரண அளவில் சாப்பிட்டு, இரவு டிபன் சாப்பிடுகின்றனர்.

ஆனால், காலை உணவை தவிர்ப்போரும் உண்டு. இவர்களுக்கு தான் பாதிப்பு வரும். குறிப்பாக, வீட்டு, ஆபீஸ் வேலை பார்க்கும் பெண்களுக்கு காலை உணவு மிக முக்கியம். அதை தவிர்த்தால், அவர்களுக்கு பல கோளாறுகள் வர வாய்ப்பு அதிகம்.


உடலுக்கு தேவைப்படும் சத்துக்களை தருவது தான் உணவு. கார் போன்றது உடல். கார் ஓட பெட்ரோல் தேவைப்படுவது போல, உடல் சிறப்பாக இயங்க எரிசக்தி தேவை. அந்த எரிசக்தியை தருவது சத்துக்கள் தான். அந்த சத்துக்களை நாம் உணவில் இருந்து தான் பெற வேண்டும். காலை உணவு சாப்பிட்டால், அது சிற்றுண்டியாக இருந்தாலும், உணவாக இருந்தாலும், உடலுக்கு முழு எரிபொருளை தருகிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், மயக்கம், சோர்வு, தலைவலி, மூட்டு பாதிப்பு வராமல் இருக்கவும், காலை உணவு மிக முக்கியம்.


பெண்களுக்கு இரும்புச்சத்து மிக முக்கியம், நாம் சாப்பிடும் உணவு மூலம் அது கிடைத்தால், மனது மற்றும் உடல் ரீதியாக திடத்தன்மை ஏற்படுகிறது. காலை உணவில், மக்காச்சோள உணவை சேர்த்துக்கொள்ளலாம். “கார்ன்பிளேக்ஸ்” போன்ற பாக்கெட் உணவுகளை பின்பற்றினால், இரும்புச் சத்து கிடைக்கும். இந்தியாவில், 90 சதவீத பெண்கள், இரும்புச்சத்து குறைபாடுடன் உள்ளனர். அவர்களுக்கு காலை உணவு கைகொடுக்கும் மக்காச்சோளம் உட்பட தானிய வகை உணவுகள் மிக நல்லது. உடலுக்கும், மூளைக்கும் வலுவை தரும்.


காலை உணவு சாப்பிட்டு வந்தால், உடல் எடை சீராக இருக்கும். அதனால், “ஸ்லிம்”மை தொடர்ந்து பாதுகாத்து வரலாம். ஆனால், பலரும் காலை உணவை தவிர்த்தால் “ஸ்லிம்”மாக முடியும் என்று நினைக்கின்றனர். இது தவறு. காலை உணவை தவிர்த்தால், மதிய வேளையில் அதிகமாக சாப்பிட தூண்டப்படுகிறது. அதனால் எந்த உணவாக இருந்தாலும், அதிகமாக சாப்பிட்டு கொலஸ்ட்ரால் ஏறியும் விடுகிறது. காலை உணவில், புரோட்டீனும், நார்ச்சத்தும் அதிகம் தேவை. அப்படிப்பட்ட தானிய வகை உணவை சேர்த்துக் கொள்ளலாம். இதில் எரிசக்தியை வெளிப்படுத்தும் வைட்டமின் “பி” ஆன்டி ஆக்சிடென்டாக உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை உள்ளன.


காலை உணவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீண்ட நாள் வாழலாம். அதற்கேற்ப, உடலுக்கு தேவையான அனைத்துச் சத்துக்களும் கிடைத்துவிடுகின்றன. பாக்கெட், உணவு வகைகள், இப்போது கொழுப்பு நீக்கப்பட்ட நிலையில் விற்பனை செய்யப்படுகின்றன. சிற்றுண்டியாகவும் சாப்பிடலாம், சாப்பாடாகவும் காலை உணவை சாப்பிடலாம்.


காலை உணவில் பலவகை உண்டு. தானிய வகை சத்துக்களாக சமைத்து சிற்றுண்டியாக சாப்பிட்டாலும், முழு உணவாக சாப்பிட்டாலும் நல்லது தான். ஆனால், முதல் நாள் சமைத்ததை மறுநாள் பயன்படுத்துவது கூடாது. அதனால், உடலுக்கு சத்துக்கள் கிடைக்காது. முழு அளவில் சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும்.


காலை உணவில் எல்லா சத்துக்களும் இருக்க வேண்டுமானால், தானிய வகை உணவு, பானங்கள், யோகர்ட், பால் உணவு போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். உணவுடன் பழங்களையும் சேர்த்துக் கொண்டால், உடலுக்கு இன்னும் நல்லது. காலை உணவை சாப்பிட்டவுடன், ஓய்வு எடுப்பது தவறான பழக்கம். வேலைக்கு போகாத பெண்கள் என்றால், காலாற நடக்கலாம்; ஏதாவது வேலையில் இறங்கலாம். வேலைக்கு போவோராக இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால், உட்கார்ந்தபடி பல மணி நேரம் ஒரே வேலையை செய்யக் கூடாது. உடலை இயக்கும் வண்ணம் அரை மணிக்கு ஒரு முறை நடக்க வேண்டும்; குறைந்தபட்சம் நாற்காலியை விட்டு எழுந்திருக்க வேண்டும்.
காலையில பிச்சைக்காரன் சாப்பிடுகிற மாதிரியும்,பகல்ல நடுத்தர மக்கள் சாப்பிடுகிற மாதிரியும் இரவுக்கு டயாபடீஸ்காரங்க மாதிரியும் சாப்பிடனும்.

(பிச்சைக்காரன் எந்த உணவு கிடைத்தாலும்-ஒரு மொத்து மொத்துவான் அதே மாதிரி.,டயாபடீஸ்காரங்க சும்மா பேருக்குன்னு சொல்வாங்களே அந்த மாதிரி)

Tuesday, January 18, 2011

வீடியோ ஆதாரம்! இறைவனின் இறுதி வேதம் திருக்குர்ஆன் வரலாறு. பாகம் 2

இறைவன் அருளால் திருக்குர்ஆன் பற்றிய மற்ற விஷயங்களுக்கு செல்லும் முன் - திருக்குர்ஆன் கூறும் விஞ்ஞான,மருத்துவ,பிரபஞ்ச தோற்றம் இன்னும் கோள்கள்,சமுத்திரங்கள் போன்ற இன்னும் ஏனைய செய்திகளை அலசும் இந்த தளத்தினுள் சென்று பாருங்கள்.வீடியோ செய்திகள் நம்மை கவரும்.




Sunday, January 16, 2011

பெயர் காரணம் !!!இறைவனின் இறுதி வேதம் திருக்குர்ஆன் வரலாறு. பாகம் 1 புதிய தொடர்!


மாற்று மத சகோதரர்களில் பலர் குர்ஆன் என்றால் என்ன?அது யாரால், எப்படி,யாருக்கு அருளப்பட்டது என்ற விஷயத்தையும் - அது என்ன சொல்கிறது,அது முஸ்லிம்களுக்கு மட்டுமான வேதமா அல்லது உலக மக்களுக்கே உரித்தான பொது மறையா,எந்த மத வேதமும் சொல்லாத,முன் அறிவிப்பு செய்யாத பல விஷயங்கள் என்ன,அறிவியலோ அல்லது எந்த துறையோ அது குர்ஆன் முன் அறிவிப்பு செய்யும் முடிவுக்கே வந்துவிடுகிறது எப்படி இன்னும் பல விஷயங்களை பற்றி சுவராசியமாக அலசவே இக்கட்டுரை.

(நபியே!) இன்னும், “சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியமானது அழிந்து போவதேயாகும்” என்று கூறுவீராக.17;81

திருக்குர்ஆன்

அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது; பின்னர் (அசத்தியம்) அழிந்தே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.21;18



திருக்குர்ஆன்


வானவர் ஜிப்ரில்(THE ANGEL GABRIEL,PEACE BE UPON HIM)   அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலம்,இறைவனின்  கடைசி தூதர் முஹம்மத் 
நபியவர்களுக்கு வல்லவன் அருளிய இந்த நன்மறைக்கு எத்தனையோ பெயர்கள் இருந்த போதிலும், இந்த மாமறையிலே பல இடங்களிலும்  குறிப்பிடப்படும் “குர்ஆன்” என்ற பெயரே சிறப்பு பெயராக விளங்கி வருகிறது

“குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”, “ஓதக்கூடியது”, ஓதவேண்டியது என்று பொருள்படும். அண்ணல் நபி அவர்களுக்கு இறைவன்(அல்லாஹ் என்பது அரபி மொழியில்)  ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாக “ஓதப்பட்ட” இவ்வேதம், மனித சமுதாயம் தன் மேன்மையைக் கருதி “ஓதவேண்டியது” என்ற பொருளையே தன் பெயராகக் கொண்டிருப்பதும், இவ்வேதமே இவ்வுலகில் அதிகமான மக்களால் “ஓதப்படுவதும்” சிந்தித்து நயக்கத்தக்கதாக இருக்கிறது.


அல்லாஹ்(ஏக இறைவன்) என்ன செய்தியை மக்களுக்கு சொல்ல விரும்புகிறானோ அதை வானவர் தலைவர் ஜிப்ரீல் அலை மூலம் முஹம்மத் நபி அவர்களுக்கு அனுப்ப,அந்த செய்தியை கேட்டு,நபிகள் நாயகம் அவர்கள்,அப்படியே உள்ளது உள்ள படியே மக்களுக்கு எடுத்துரைப்பார்கள், அதுவே திருக்குர்ஆன் ஆகும். 


தொடர்வோம் இன்ஷா அல்லாஹ் 

Sunday, January 2, 2011

உன்னைத் தேடு

இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் 2011,ஜனவரி 14-15,வெள்ளி & சனிக்கிழமைகளில் நமதூரில்'கல்வி விழிப்புணர்வு மாநாடு'நடைபெறவுள்ளதை அறிவீர்கள்.

முதல் நாள் (14.01.2011) நிகழ்ச்சியில் இளையான்குடி, டாக்டர் ஜாஹிர் ஹுஸைன் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் ஆபிதீன்அவர்கள் 'உனக்குள் உன்னைத் தேடு' எனும் தலைப்பில் மாணவர்களுக்கான சிறப்புரையாற்ற உள்ளார்கள்.

"அடுத்த தலைமுறையைப் படித்த தலைமுறையாக்கிட"முழக்கத்தோடு 'சமூகநீதி அறக்கட்டளை'யும் 'சமூகநீதி முரசு' எனும் இதழும் நடத்திவருபவரும் நமது சமுதாயம் கல்வியில் உயரவேண்டும் என்பதற்காகவே பல ஊர்களிலும் சென்று பிரச்சாரம் செய்பவருமானசகோ. முஹம்மது ஸலீம் (CMN) இரண்டாம்நாள்(15.1.2011) நிகழ்ச்சியில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். மாநாட்டில் வினா-விடைப் பகுதியும் இடம்பெறவுள்ளது, இன்ஷா அல்லாஹ்.



விரிவான நிகழ்ச்சி நிரல் இங்கு விரைவில் பதிவு பெறும். நமதூரில் நடைபெறும் முதல் 'கல்வி விழிப்புணர்வு மாநாட்டுக்காக' உருவாக்கப்பட்ட இலச்சினை LOGO இங்கு அறிமுகப் படுத்தப்படுகிறது - நீங்கள் பிறருக்கு அறிமுகப் படுத்துவதற்காக!

மாநாடு சிறப்புற நடைபெறவும் அதனால் நம் மாணவர்கள் பயன்பெறவும் வேண்டுமென எல்லாரும் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவன் அருள் புரிவான்.

இவண்

அதிரை கல்வி விழிப்புணர்ச்சி மாநாட்டுக் குழு
Adirai Educational Awareness Conference - Team

thanks : adiraixpress