Thursday, August 4, 2011

கடமையைச் செய்யுங்கள். பலனை எதிர்பாருங்கள்

* நற்செயல் என்பது நற்குணத்தைப் பெறுவதாகும். எந்தச் செயலை நீ மனதில் நினைத்து அதனை பிறர் அறிவதை விரும்பவில்லையோ அது பாவச் செயலாகும்.

* அளவில் சிறிதாக இருப்பினும் தொடர்ந்து நிலையாக செய்யும் செயல்களையே இறைவன் நேசிக்கிறான்.


* பிறப்பில் அனைவரும் தூய்மையானவர்களே! ஒருவர் செய்யும் பாவமே அவரைக் களங்கப்படுத்துகிறது. அக்களங்கத்தை அவரே போக்க வேண்டும்.


* மனிதனுக்கு தான் முயற்சி செய்ததைத் தவிர வேறு எதுவுமில்லை. இன்னும் அவனுடைய முயற்சி விரைவில் கவனிக்கப்படும். பின்னர் அதற்கான முழுக்கூலியும் அவனுக்கு வழங்கப்படும்.


* ஒருவன் நேரான வழியை மேற்கொள்கிறானெனில், அவனது நேரான வழி அவனுக்கே பயனளிக்கும். ஒருவன் நெறிதவறிப் போகிறானெனில், அவனுடைய நெறி தவறிய போக்கு அவனுக்கே தீங்கு விளைவிக்கும். சுமையைச் சுமக்கும் எவரும் 
மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார்.



* கடமையைச் செய்யுங்கள். பலனை எதிர்பாருங்கள்; மனிதர்களிடத்தில் அல்ல; இறைவனிடத்தில்!

* (இறைவனின் அடியார்கள்) இறைவனின் மீதுள்ள அன்பினால் வறியவருக்கும், அநாதைக்கும், கைதிக்கும் உணவளிக்கின்றார்கள். (மேலும் அவர்களிடம் கூறுகின்றார்கள்) ""நாங்கள் இறைவனுக்காகவே உங்களுக்கு உணவளிக்கின்றோம். நாங்கள் உங்களிடமிருந்து எந்த பிரதிபலனையும் நன்றியையும் எதிர்பார்க்கவில்லை''.


* கேடு தான்! தம் தொழுகையில் அலட்சியமாய் இருக்கிறார்களே, அப்படிப்பட்ட தொழுகையாளிகளுக்கு! அவர்கள் பிறருக்கு காட்டுவதற்காகவே செயல்படுகின்றார்கள்.


* எவர்கள் இறைவழியில் தங்கள் பொருளைச் செலவு செய்த பின்னர் அதைத் தொடர்ந்து தாங்கள் செலவு செய்ததைச் சுட்டிக்காட்டிப் பேசாமலும் (மனம்) புண்படச் செய்யாமலும் இருக்கின்றார்களோ, அவர்களுக்குரிய நற்கூலி அவர்களின் அதிபதியிடம் இருக்கின்றது. மேலும் அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். கனிவான சொல்லும், மன்னித்து விடுவதும் மனம் புண்படச் செய்யும் தானத்தைவிடச் சிறப்பு உடையனவாகும்.



திருக்குர்ஆன் 

No comments: