Friday, October 30, 2009

இன்னும் எச்சரிக்கை வேணும்!!

முஸ்லிம்களைப் பொறுத்தவரை இப்படித்தான் வாழ வேண்டும்,சம்பாதிக்க வேண்டும் என்று அல்லாஹ் தன் திருமறை குரானிலும்,நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தங்கள் ஹதீஸிலும் தெளிவாக சொல்லியுள்ளார்கள். அதை விட்டுவிட்டு,நாம இஷ்ட்டத்துக்கு வியாபாரம்,வேலை செய்கிறேன் பேர்வழி என்று ஹராமான செயல்களில் ஈடுபடுவது ரொம்ப கண்டிக்கத்தக்கது.

//நிறையபேர் லிக்கர் ஷாப் யானும் சாராய கடைலதான் வேலை பார்க்கிறார்கள் அங்கு சாராயம் மட்டும் இல்ல லாட்டரி என்கிற சூது மற்றும் செக்கேசின்ங் என்கிற வட்டி மற்றும் ஆபாச புத்தகம்/விடியோ சி.டி போன்ற எல்லா ஹராமான பொருள்கலும் இருக்கு நிறையபேர் வேலைபார்க்கிரங்கள் இதில் சிலர் முதலாளியாகவும் இருக்காங்க, ரொம்ப கவலைபடுற செய்தியா இருக்கு.//

இப்படி ஒருவர் (அபூ சுமையா) ஆதங்கப்பட்டிருந்தார்.

அது மட்டுமல்ல,மால்களில் சிலர் வேலை பார்த்துக்கொண்டும்,வியாபாரம் செய்துகொண்டுமுள்ளனர்.சிலர் முழுக்க ஹலாலான தொழில் மற்றும் உள்ளனர்.ஆனால்,இன்னொரு பயங்கர பாவகரமான ஒரு செயலை தனக்கு தெரியாமலேயே செய்துவருகின்றனர்.

மற்ற மதத்தவர்கள் வணங்கும் ஒரு பொருளை,கல்லை,மண்ணை,செம்பை,வெள்ளியை,பளிங்கு,கிறிஸ்டல்,தங்கத்தை அது எதில் செய்யப்பட்டில்ருந்தாலும்,உதாரணமாக சிலுவை,யூதர்களின் நட்சத்திரம்,இந்துக்கள்-புத்தர்கள் வழிபடும் சிலைகள் இன்னும் எதையெல்லாம் வணக்கமாக செய்யப்படுகிறதோ,அவை அனைத்தும் நமக்கு தடுக்கப்பட்டது.

இவைகளை சிலர் நகை கடைகளிலும்,கிப்ட் ஷாப்களிலும் வைத்து விற்கின்றனர்.இது எவ்வளவு பெரிய பாவம் என்பதை மறந்து விட்டார்கள்.

ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
5:90
மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின் சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் - இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள்.
7:148
நினைவு கூறுங்கள்! "என் இறைவனே! இந்த ஊரை (மக்காவை சமாதானமுள்ளதாய்) அச்சந்தீர்ந்ததாய் ஆக்குவாயாக! என்னையும், என் மக்களையும் சிலைகளை நாங்கள் வணங்குவதிலிருந்து காப்பாற்றுவாயாக!" என்று இப்ராஹீம் கூறியதை (நபியே! நீர் அவர்களுக்கு நினைவு கூறும்).
14:35
("என்) இறைவனே! நிச்சயமாக இவை (சிலைகள்) மக்களில் அநேகரை வழி கெடுத்து விட்டன எனவே, எவர் என்னைப் பின்பற்றுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவராவார். எவர் எனக்கு மாறு செய்கிறாரோ (அவர் என்னைச் சார்ந்தவர் இல்லை என்றாலும்) நிச்சயமாக நீ மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்."
14:36
அல்லாஹ்வையன்றி, சிலைகளை வணங்குகிறீர்கள் - மேலும், நீங்கள் பொய்யைச் சிருஷ்டித்துக் கொண்டீர்கள்; நிச்சயமாக, அல்லாஹ்வைத் தவிர நீங்கள் வணங்கி வரும் இவை உங்களுக்கு ஆகார வசதிகள் அளிக்கச் சக்தியற்றவை ஆதலால், நீங்கள் அல்லாஹ்விடமே ஆகார வசதிகளைத் தேடுங்கள்; அவனையே வணங்குங்கள்; அவனுக்கே நன்றி செலுத்துங்கள்; அவனிடத்திலேயே நீ;ங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.
29:17

திருக்குரானின் எச்சரிக்கை பார்த்தீர்களா!


பாகம் 2, அத்தியாயம் 34, எண் 2236
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!" என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!' எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'கூடாது! அது விலக்கப்பட்டது!' எனக் கூறினார்கள். அப்போது தொடர்ந்து, 'அல்லாஹ் யூதர்களை சபிப்பானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி விற்று, அதன் கிரயத்தை சாப்பிட்டார்கள்!" என்று கூறினார்கள்.

பாகம் 3, அத்தியாயம் 46, எண் 2478
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள். 'சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்துவிட்டது" (திருக்குர்ஆன்- 17-81) என்னும் வசனத்தை கூறத் தொடங்கினார்கள்.


அறிவிப்பாளர் : அபூகதாதா رَضِيَ اللَّهُ عَنْهُ
நபி صلى الله عليه وسلم அவர்கள் (வணிகர்களுக்கு எச்சாிக்கை செய்த வண்ணம்) கூறினார்கள்: “உங்களுடைய பொருளை விற்பனை செய்வதில் அதிகமாகச் சத்தியம் செய்வதைத் தவிருங்கள். ஏனென்றால் அது (தற்காலிகமாக) வாணிபத்தைப் பெருக்கினாலும் இறுதியில் அருள்வளத்தை இல்லாதொழித்து விடும்.” (முஸ்லிம்)

இன்னும் எத்தனையோ எச்சரிக்கைகள் இருக்கின்றன.நம் உழைப்பு,ஹலாலான வகையில் அமைந்து,அல்லாஹ் பொருந்த்திக்கொள்ளும் வகையில் செயல்படுவோம்.இன்ஷா அல்லாஹ்.
------------------------------------------------

மேற்கண்ட கட்டுரை என் நண்பி பரக்கத்துன்னிசா,ஈமைலில் அனுப்பி வைத்தால்.அவளுக்கு என் நன்றி.

2 comments:

தமிழ்நாடு தினசரி செய்திகள் said...

Assalamu Alaikkum

Plz Visit : www.tamilnadudailynews.blogspot.com

பாவா ஷரீப் said...

//நிறையபேர் லிக்கர் ஷாப் யானும் சாராய கடைலதான் வேலை பார்க்கிறார்கள் அங்கு சாராயம் மட்டும் இல்ல லாட்டரி என்கிற சூது மற்றும் செக்கேசின்ங் என்கிற வட்டி மற்றும் ஆபாச புத்தகம்/விடியோ சி.டி போன்ற எல்லா ஹராமான பொருள்கலும் இருக்கு நிறையபேர் வேலைபார்க்கிரங்கள் இதில் சிலர் முதலாளியாகவும் இருக்காங்க, ரொம்ப கவலைபடுற செய்தியா இருக்கு.//



(ஒரு சில அறியாமை முஸ்லிம் மக்கள் தான்)

1. ஜாதகம் பார்ப்பது
2. சாமியார்களிடம் குறி கேட்பது
3. கோவில்களில் அர்ச்சனை செய்வது
4. பரிகாரம் செய்வது
5. காபிர்கள் பூஜை செய்து தரும் பொருட்களை சாப்பிடுவது
(லட்டு, பஞ்சாமிர்தம், கறி விருந்து )

இது மட்டும் இல்லை சகோதரி இன்னும் நாம் அறியாமல் எவ்வளவோ இருக்கிறது ....

அல்லாஹ் தான் நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் .