Monday, August 8, 2011

நோன்பும்,சில சுவாரஸ்ய நினைவுகளும்!!!படித்ததில் பிடித்தது ....


அஸ்ஸலாமு அலைக்கும் அருமைச்சகோதர சகோதரிகளே! இனிய ரமலானை களிப்புடன் கழித்துக்கொண்டிருக்கும் நம் அனைவரின்  மீதும்,மற்றும் இவ்வுலக மக்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.

இந்த இனிய ரமலானில்,நோன்பு குறித்த எனது அனுபவங்களையும்,எனது ஊர் பழக்கங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு வாய்ப்பாக கொள்கிறேன்.இது என்னை அன்புடன் தொடர்பதிவுக்கு அழைத்து,நான் எழுதாததால்,உரிமையுடன் கோபித்துக்கொண்ட எனதருமை சகோதரியையும் திருப்திபடுத்துமாயிருக்கும்..இன்ஷா அல்லாஹ்.

முதலில் ஊர்.அடியேன் ”இராம்நாட் அல்ல,இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் எனும் ஊரை சொந்த ஊராகக் கொண்டவன்.முஸ்லிம்கள் அதிகம்.அதே அளவு ஹிந்து சகோதரர்களும் இருக்கிறார்கள்..

எங்க ஊர் நான்கு பள்ளிகளை தன்னகத்தே கொண்டது..ஊர் பெரிய பள்ளிவாசல்,எனக்கு தெரிந்து சுற்றுவட்டாரத்தில் இத்தனை பெரிய இரட்டை மனரா(Tower??) உள்ள பள்ளி இதுவாகத்தான் இருக்கும்.நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னே கட்டப்பட்டது.அடுத்து ஊரணிப்பள்ளி,இது ஊரில் உள்ள ஊரணிக்கரையோரம் இருப்பதால் அதுவே பெயர்காரணம் ஆனது.அடுத்தது கீழப்பள்ளி(எங்க ஜமாத்),இது ஊரின் கிழக்கு திசையில் இருப்பதால் இதுவும் காரணப்பெயர் தான்.அடுத்தது வடக்குப்பள்ளி.ஸேம்.வடக்கு திசையில் இருப்பதால் வந்த பெயர் அது..


அடுத்தது நோன்பு.நோன்பு என்றாலே முதலில் நியாபகம் வருவது நோன்பு கஞ்சிதான்..அது எங்க ஊரில் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு டேஸ்ட்.பெரிய பள்ளி கஞ்சி கொஞ்சம் காரம் ஜாஸ்தியா இருக்கும்.ஊரணிப்பள்ளி கஞ்சி எனக்கு ரொம்ப பிடித்தது.எங்க காலத்தில் மைதுவா என்ற பெரியவர்தான் காச்சுவார். கீழப்பள்ளி கஞ்சியும் அருமைதான்.இங்குதான் அதிகம் நோன்பு திறந்தது.

பெரியபள்ளி மனராவில் சுற்றிலும் கலர் பல்புகள் எப்போதும் பொருத்தி இருக்கும்.விஷேச நாட்களில்,குறிப்பாக பெருநாள்,தலைநோன்பு, இவற்றுக்கெல்லாம் அதை எரியவிடுவார்கள். நான் சிறுவயதில் நோன்புக்கு பிறை பார்ப்பதை விட அந்த லைட் போட்டாச்சான்னுதான் பார்ப்பேன்..பிறை பாத்துட்டா லைட் போட்ருவாக...

லைட் எரிஞ்சுட்டாலே,ரோட்ல இருந்து ஆட்டம் போட்டுகிட்டே வீட்டுக்கு வந்து,அம்மா நோன்பு வந்துடுச்சுன்னு சொல்ரது.

நோன்பு காலமெல்லாம் ஒரே சந்தோஷம் தான்.என்னவொ தெரியாது..ஊரும் ஜகஜோதியா இருக்கும்,நோன்பு பெருநாளுக்கு பிரத்தியேகமா ஊர்வரும் மக்கள்,இன்னும் ஊர் மக்கள் கூட்டம் கூடினமாதிரி இருக்கும்.
ஸ்கூல் உட்டு வந்தவொடன (d)டேப்(அதாவது தூக்குவாளி,எங்க ஊர்ல இதுக்கு இப்டிதா பேரு..ஏ எதுக்குனெல்லா தெரியாது.) ரெடியா கழுவி இருக்கும்.எடுத்துக்கிட்டு அஸர்(மாலை தொழுகை) தொழுக போய்ட்டு.வரும்போது வீட்டுக்கு கஞ்சி வாங்கிட்டு வர்ரது.அப்ரம் கொஞ்சம் வேலை சஹர்(முன்இரவு நோன்பு சாப்பாடு) ஏற்பாட்டுக்கு..நோன்பில் பிரத்தியேகமாக சாயங்காலம் ஃப்ரஷ்(புதியJ) மீன் வரும்..அப்ரம் நோன்பு திறக்க பஜ்ஜி (a banana slice, coated with flour, and immediately jumps in to hot oil, then fully fried, is called Bajji ;), வடை,...அப்ரம் குளியல்..இது மத்த ஊர்ல எப்டின்னு தெரியல..பட் பசங்க எங்க ஊர்ல சாயங்கால குளியல்தான்..அதும் ஆண்களுக்கு குளியல் எப்போமே பள்ளிலதான்.. இல்ல ஊரணில...வீட்டுக்குளியல் கொஞ்சம் ரேர்தான்..சோ எல்ல ஃப்ரண்ட்ஸும் சொல்லிவச்சு ஒன்னா போய் ஜாலியா குளிச்சுட்டு வந்துடுவோம்..

பின் மஃரிப்க்கு ஒரு அரைமணி நேரம் முன்னதாக நோன்பு திறக்க கெலம்பீர்ரது..நான் நோன்பு திறந்த அனுபவத்த ஊர் வழக்கப்படி மூனு காலகட்டமா பிரிக்கலாம்.

அதாவது.முதல் காலகட்டம் சிறுவயது.அப்போல்லாம் பள்ளிக்கு நோன்பு திறக்கன்னு சொல்லி கெலம்பும் போது அப்போல்லா எனாமல் பாத்திரம் ஃபேமஸ்,ஸோ ஒரு எனாமல் ஸ்பூன் நல்ல டிஸைன்ல எடுத்துக்கிட்டு.பேப்பர்ல பேரீச்சம்பழம், கொஞ்சம் அதே (d)டேப். மினி ஸைஸ்’ல சர்பத் கரைத்து அம்மா தருவாக...சில நாள் அதும் தரமாட்டாக..because me return வரும்போது டேப் மிஸ் ஆயிடும்..ஸோ,...போ.. பொயி நோன்பு தொரந்துட்டு வந்து இங்க எல்லா சாப்டுக்கோன்னு அனுப்பிருவாக..ஸ்பூன்ல கொஞ்சம் ஊருகாய் வேர சைட் டிஷ்...இன்னும் பொம்புள புள்ளைகள்லா,கிண்ணத்துல மீன் ஆனம்(குழம்பு) சுண்டவைத்து பேஸ்ட் மாதிரி ஆக்கி கொண்டு வருவாக..நாம கௌரவ கொரச்சல் காரணமா அதையெல்லா எடுக்கிறதில்ல.பட் பள்ளிக்குள்ள போயி கொஞ்சம் வாங்கிக்கிறது..

இப்போ பள்ளிக்குள்ள போனவொடன,கைல உள்ளதைலா ஒரு எடத்துல வைச்சுட்டு கொஞ்சநேரம் விளையாடுரது...கஞ்சி சட்டிக்கிட்ட போயிட்டா,அங்க இருந்து ஒரு சத்தம் வரும்..காரணம் நெருப்பு சரியா அணைக்காம இருக்கும்..ஸோ,குளிக்கிற ஏரியாவுக்கு போய் ஆட்டம் போட்ரது..அப்ரம் ஆள் எல்லா வர ஆரம்புச்ச ஒடன ஒரு லைன் ஃபாமாகும்.. அதாவது கலக்கம்புல (ஓட்டு போடுர க்யூ மாதிர்) ஆண்கள் பெண்கள்,அதாவது நாங்கதா நண்டு நசுக்கெல்லா அதுலதா போய் நிக்கனும்..ஒன்வேதா.இப்டி போகும்போதுதா,ஒருத்தர் ஒருத்தர் பிரியமா விசாரிச்சுப்போம்,ஸைட் டிஷ்க்காக..

அங்க போன அண்ணன்மார்கள் சின்ன பசங்களுக்கு தட்டுலதான் கஞ்சி ஊத்தி கொடுப்பாக... இந்த தட்டு மேட்டர சமாளிக்கத்தா அந்த ஸ்பூன்..அப்டியே குடிக்க முடியாதுல்ல...பொம்புள புள்ளைக இந்த தட்டு ஸ்டேஜ் வரைக்கும்தா..பள்ளிக்கு வருவாக/...அப்ரம் பாவம்..யாரு?? நாங்கதா...வேரெதுக்கு?? then நோ ஸைட் டிஷ்!!!...

அப்ரம் இரண்டாம் காலகட்டம் கொஞ்சம் வளர வளர..தட்டை நம்ம கெவுரவத்த கொஞ்சம் டேமேஜ் பண்ணும்..அதனால அண்ணம்மார கொஞ்சம் கரெக்ட் பண்ணி,கோப்பை வாங்க ட்ரை பண்ரது..சில நேரம் கிடைக்கும்,கிடைக்காது...பெரியவங்களுக்கு இல்லாம போயிரும்ப்பா,அப்டீன்னு காரணம் சொல்லிருவாக...பெருந்தன்மையோட சரிங்ண்ணா அப்டீன்னு வந்துர்ரது...(வேர வழி??)

அப்ரம் கொஞ்சம் வளந்ததுக்கப்பரம்,ரெகுலர் கோப்பைக்காரராயிரது..ஸ்பூன தூக்கி கடாசிட்டு அதே (d)டேப் மினி ஸைஸ்’ல சர்பத்.ஒரே சமயத்துல ரஸ்னா,டேங்,லெமன் ஜூஸ்,நன்னாரி சர்பத்,ரோஸ்மில்க்,அப்ரம் ஆளாலுக்கு ஒன்னு ரெண்டு பஜ்ஜி,இப்டி கொண்டுவந்து எல்லாத்தையும் ஒன்னா போட்டு ஷேர் பண்ணி சாப்டுவோம்.இதுல சுண்டல்,இருந்தா இன்னும் ஸ்பெஷல்..எல்லாத்தையும் கஞ்சில போட்டு குடிக்கும்போது சேத்து சாப்பிட்ட இன்னும் நல்லா இருக்கும்...

அடுத்த ஸ்டேஜ்,அண்ணன்மார் ஸ்டேஜ்..நாமதா பொருப்பாளி???.ஸீனியர்ஸ் எல்லா வேலை அது இதுன்னு கெலம்பீருவாக...இது “பாரம்பரியமா கெடைக்கிற மருவாத” (பரிவட்டம் கட்ர மாதிரி???)அப்பல்லா ஆல் இன் ஆல் நாமதா..நம்ம பசங்கல்லா சேந்து இந்த வேலைய பாக்குறது..(வீட்டு வேலைய விட்ருவோம்,அதுவேர விஷயம்..) but பொதுவாழ்க்கைன்னு வந்துட்டாலே இதெல்ல சகஜம்தேன..

ஊரணி + பள்ளி
அஸர் தொழுக வந்ததோட,மக்களுக்கு நோன்பு கஞ்சி வினியோகம்,அப்ரம் நோன்பு திறக்க வரும் மக்களுக்கு கோப்பைல கஞ்சி ஏற்பாடு பண்ரது.இந்த கோப்பை கஞ்சியோட பருப்பு துவையல் செய்வாங்க..அதை கோப்பையின் விளிம்பில் ஆறுவிரல் அளவுக்கு வைத்துவிடுவோம்..தட்டுல வெறும் ரெண்டு விரல் அளவுதான்.துவையல் காம்பினேஷன் சூப்பரா இருக்கும்...அப்ரம் வர்ர வட,பஜ்ஜி,ஐட்டங்கள பிரிச்சு எல்லாருக்கும் கொடுக்குறதுன்னு படுபிஸி,கொஞ்சம் பெரிய மனுஷத்தனம் வந்துரும்,பள்ளி வேலையெல்லா பாக்குறோம்ல...
வெளியூர்கள்ல இருக்கிறமாதிரி..பள்ளிலையே நோன்பு திறக்கிரதில்லை..பள்ளியின் பின்புறம் தான் கஞ்சி தயாராகும்.அங்கு பெரிய இடம் இருக்கும் எல்லா பள்ளிலையுமே.. அங்குதான் நோன்பு திறப்போம்..அப்ரம் எங்க செட்’க்கு மட்டும் அங்க இருக்குர உள் வரண்டாவுல அனுமதி...

இதும் இல்லாம என்னோட முதல் காலகட்டத்துல நோன்பு திறந்து மஃரிப்(after sunset prayer) முடிஞ்ச ஒடன..வீட்டுக்கு ஓடி,வெர எதுனாச்சும் சாப்டுட்டு அப்டியே கெளம்பீர்வோம்.. எங்க...பைத் எனும் ஊர்வளத்துக்கு தான்..ஏரியா பசங்க எல்லா ஒன்னா சேந்து,ஒரு ரெண்டு ரெண்டு பேரா நாலு இல்ல அஞ்சு ரோ வர்ர மாதிரி பைத் அரேஞ்சு பண்ணி அப்டியே ஊருக்குள்ள ஒரு ரவுண்டு வர்ரது...

இதுல பாட்டுவேர...பின்ன பைத்துன்னா பாட்டு இல்லாமையா???
“நோன்பான நோன்பின் நாளில்....
நோன்பினை நோற்கவே...,நன்மைகள் சேர்க்கவே...
ரமலானிலே....புனிதஅஅஅ ரமலானிலெ......
லைலத்துல் கதிர் என்ற புனிதமிக்க ஒளிமிக்க நன்நாளில்
இம்மாதத்தை படைத்திட்ட இறையை நாம் ஏற்றி புகழ்ந்திடுவோம்....
(இந்த லைன் ஹைபிச்;ல இருக்கும்,இதுக்கப்பரம் எல்லா லைன்னுமே ஹைபிச்தான்.. ஏன்னுலா தெரியாது..பாரம்பரியம்...அப்டி புடிச்சுட்டு வந்துட்டோம்)
Conti..
இஸ்ஸுலாத்தின் கடமைகள் ஐந்து,அதை
ஒழுங்காக நிறைவேற்றி...இறையோனை தொழுதேற்றி
வாழ்ந்திடுவோம்,..நன்மைஇஇஇஇ சேர்த்திடுவோம்ம்.
நோன்பான நோன்பின் நாளில் Repeattu…”

இதுக்கெடையில ஒரு  உண்டியல் ரெடி பண்ணி ஒருத்தன் கைல கொடுத்துர்ரது...பைத் மூவ் ஆக ஆக அவன் அப்டியே ஒரு கலெஷன் போட்டுட்டே வருவான்...அப்ரம் அத பொதுக் காரியங்களுக்கு செலவு பண்ரது(அப்டியே பண்ணிட்டாலும்!)...என்ன பொல்லாத பொது காரியம்...அந்த வயசுல பரோட்டா கடைலைலா போய் உக்காந்து சாப்டதே இல்லை... பைத் உறுப்பினர்கள் எல்லா பொதுக்குழுவ கூட்டி,எந்த கடைல பரோட்டா சால்னா ஸ்பெஷல்ன்னு முடிவு பண்ணி,அந்த கனவ நெரவேத்திப்போம்..

அப்ரம் தராவீஹ்..வீட்ல சொல்லிட்டு இஷாவுக்கு முன்னாடியே கெலம்பீர்வோம்..அம்மாவேர பெண்கள் மதரஸாவுக்கு தொழுக போயிருவாங்களா..நமக்கு ஜாலிதான்..போகவேண்டியது இஷா(இரவுத் தொழுகை) அட்டன் பண்ணிட்டு,எஸ்கேப்பு..வெளியா பூரா பசங்கதா,,,ஊர்பூரா ஓடி விளையாட்டுதான்..
இந்த இருட்டுல ஒளிஞ்சு விளையாடுரது சூப்பரா இருக்கும்,,பசங்க இருக்குர தைரியத்துல பகல்லையே போக பயப்புடுர பாழடஞ்ச வீட்டுலைலா ஒளிஞ்சு விளையாடுவோம்...ஜாலியா விளையாடும்போதே எங்கள்ல ஒருத்தன் கண்ணும் கருத்துமா..பள்ளிய நோட்டம் விட்டுக்கிட்டே இருப்பான். இருவதாவது ரக்காயத்(கடைசித் தொழுகை) வந்த ஒடன எல்லாம் போய்..பள்ளி ஹவுஸ்’ல(சிறிய நீர் தொட்டி)..சலசலன்னு ஒளூ(wash) செஞ்சுட்டு ஜாயின் பண்ணிப்போம்...தொழுகை முடிஞ்ச ஒடன தப்ரூக்(அன்பளிப்பு) ஏதாவது.. பரிமாறுவாங்க.. நீங்க நெனைக்கலாம்,அடச்சே அல்ப்பம்!!..போயும் போயும் இதுக்காகவா? அப்டீன்னு.. அதுதா இல்லை..இந்த தப்ரூக்கோட வீட்டுக்கு போனாத்தா பயபுள்ள கரெக்ட்டா  தொழுதுட்டு வந்துருக்குன்னு அம்மா நம்புவாக...அதுக்கு தா இந்த ஏற்பாடு...அப்ரம் ஒரு ஸ்டேஜ்ல.. கரெக்ட்டா தொழுக ஆரம்பிச்சாச்சு...ஹஸ்ரத்,டே ஹமீது மயனே..இங்கவா...என்ன நேத்து ஆளக்காணோம்ன்னு நம்மலைல்லா மதிச்சு விசாரிகிர அளவுக்கு கரெக்டா தொழுதோம்ல...(நல்லவனாக்கும்...ம்ம்)

அப்ரம் நோன்புன்னாலே,நம்ம அண்ணன்மார் எல்லாம் சேந்து ஒரு வீட்டோட திண்ணைல மைக் செட் குழாய்,ஸ்பீக்கர் சகிதம் ரெடியாயிருவாங்க..ஸகர் நேரம் சொல்ரதுக்கு... கண்ட்டினுஅஸ்ஸா ஹனிபா பாட்டு ஓடும்..ஒவ்வொரு ஒருமணி நேர இடைவெளியிலும்”””” மைக்க தட்டி,இப்பொழுது நேரம் சரியாக!!! பண்ணண்டு மணி,ஸகர் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.அப்டீன்னு வார்ன் பண்ணிட்டு, பாட்ட தட்டி உட்டுட்டு சீட்டு விளையாட ஆரம்ச்சுருவாக..
இதுக்கெல்லா நமக்கு நாட் அள்ளவ்டு..அவ்வங்கெலோட போய் நாய் மாரி ஊரசுத்திட்டு நடு சாமத்துல வந்து கதவ தட்டுரது...அதுக்கு பெசாம குரான எடுத்து ஒக்காந்து ஓது,நோம்பான நாள்ல நன்மை,இல்ல பெசாம தூங்கு...(இது அம்மா...).ஓக்கே...அதுக்கு மேல பேச முடியாது..

ஆனா ஒரே ஒருநாள் அதையும் கெஞ்சி கேட்டு அட்டன் பண்ணுனேன்..செம ஜாலி,,,..அப்ரம் ப்ச்...இல்ல...நோன்பின் மாண்பு தெரியாமல் விளையாட்டாய் கழிந்த காலம் பள்ளிப் பருவத்துடன் முற்றுப்பெற்றது.அதன் பின் மார்க்கக் கடமைகளின் முக்கியத்துவமும், அருமையும் தெரியவர,நோன்புகால விளையாட்டுக்களெல்லாம் வினையாய் முடியும் என உணர்ந்து,அவற்றை கைவிட்டது வேறு விஷயம்.

அப்டீ நோன்பு ஓடி பெருநாள் வந்துரும்..பெருநாள் காலைல...ஷாம்பு’லா இல்லை... பலமணகப்பி,அப்டீன்னு ஒரு பவ்டர்,சிககாய்,கஸ்தூரி மஞ்சள் வேர என்னன்னமோ போட்டு ஒரு வீட்ல செஞ்சு விப்பாக,ஒரு பாக்கெட் ரெண்டு ரூவான்னு...அது ஆளுக்கு ஒன்னு.. அம்மாக்கு ரெண்டு...

அதை தலை மற்றும் உடம்புக்கு தேய்த்து குளிக்கனும்..நிய்யத்துதா(எண்ணம்) மறந்துரும்ன்னு,சொல்லிட்டே போரது..கடைசில மறந்துரும்L.. அன்னைக்கும் பள்ளிலதா குளியல்ஸ்.அப்ரம் புது ட்ரெஸ்,ஊரணிப்பள்ளில இருந்து பெரிய பள்ளிக்கு பைத் போகும்(இது பெரியவங்க பைத்,நம்ம ஐட்டம் இல்ல), அதுல ஜாயின்பண்ணி கடைசி ரோல பசங்கலோட பேசிக்கிட்டே பள்ளிக்கு போய்ட்டு... தொழுகை.. அப்ரம் வெளிய வந்து எத்ன மணிக்கு மீட்டிங் எல்லா பேசிவச்சுட்டு,வீட்டுக்கு போய்,அப்ரம் சொந்தக்காரங்க வீட்டுக்கெல்லா ஒரு ரவுண்டு...பெரியத்தா சின்னத்தா,மாமி,அப்டீன்னு எல்லா பெருநாள் காஸ் தருவாங்க..ஒரு கலெக்‌ஷன போட்டுட்டு வந்துருவோம்..அப்ரம்..ஊர் பேட்டைல  ராட்னம் போட்டுருப்பாக...ஒரு ரெண்டு மூனு தடவ தலைராட்டினம்,கொடைராட்னம் ஆடிட்டு, அப்டீ போய்,இஸ்டத்துக்கு ஐஸ் வாங்கி திங்கிறது...அப்ரம்..வேரொன்னு செய்யாம காஸ வீட்டுக்கே கொண்டு வந்துருவேன்..அப்போல்லா செலவு பண்ண தெரியாது :)

இப்டியே பெருநாள் ஓடினஒடன...அடுத்த நாள் டல்லாயிடும்....அடுத்த நோன்பு எப்போன்னு.. ஆசையோட..நாள் ஓட ஆரம்பிக்கும்.

ஹ்ம்ம்,,,இதெல்லா எழுதும்போதே அப்டி மனக்கண்ல எல்லா காட்சியும் ஓடி மறையுது... அர்ப்புதமான அனுபவம்...மறக்க முடியாது,,.

காலம் மாற காட்சியும் மாறி..இன்றைய நோன்பு அமீரகத்தில்....

ப்ளைன் கஞ்சி

மட்டன் கஞ்சி
இங்க,உறவுகளை பிரிந்து,....நம்ம கடல்கடந்த நட்புகளோடு,,நோன்பு நல்லாவே போகுது.. நம்மஜலீலாக்கா,அவங்கள மறக்க முடியாது...அவங்களோட நோன்பு கஞ்சி சமயல் குறிப்பு தயவுல..சூப்பரா நோன்பு கஞ்சி காய்ச்சி...அரும்மையா நோன்பு திறக்குறோம்...மாஷா அல்லாஹ்...
இஃப்தார் அரேஞ்மெண்ட்
இந்த நேரத்துல,அவங்களுக்கு எனது நன்றியையும்,அவங்க குடும்பத்துக்கு அல்லாஹ் எல்லா நலன்களையும் வழங்க பிராத்திக்கிறேன்...

அப்பாட ஒருவழியா சகோ ஆமினா அழைத்த தொடர் பதிவையும் இத வச்சு சமாளிச்சுரலாம்ன்னு நெனைக்கிறேன்..பாப்போம் அக்கா என்ன சொல்ராகன்னு....

மற்றும் எல்லா சகோதர சகோதரிகளுக்கும்..இனிய ரமலான் வாழ்த்துக்களை மனமாற தெரிவித்தவனாக விடைபெருகிறேன்.


அன்புடன் ரஜின்

Friday, August 5, 2011

E BOOKS


திருக்குரான் - (ஜான் டிரஸ்ட்)
http://www.scribd.com/doc/2070077/Al-Quran-in-Tamil

ஸஹீஹ் புஹாரி 
http://mwinsys.com/Bukari_Tamil.pdf

ஸஹீஹ் முஸ்லீம் 
http://natura08.in/Softwares/Sahih_Muslim.pdf

ஸூனன் அபூதாவுது 
http://www.scribd.com/doc/20162814/Abu-Dawood

ராஜகிரி மஸ்ஜித் அல் தக்வா - திறப்பு விழா சிறப்பு மலர்
http://www.scribd.com/doc/23215024/Masjid-Al-Taqwa-Book-Rajaghiri-Gazzali
ஈமான் கொள்ளும் வழிமுறை
http://www.scribd.com/doc/7240464/System-of-Islam-Book-Tamil

இஸ்லாத்தில் மகளிர் நிலை
http://noolaham.net/project/40/3901/3901.pdf
குர்ஆனில் மலைப்பூட்டும் சான்றுகள்
http://www.scribd.com/doc/21429252/Quran-Miracles-1
இறைக்கட்டளையை நிராகரிப்பதால் ஏற்படும்விளைவு
http://www.scribd.com/doc/21429488/ra19-1
தப்ஸிர்
http://www.scribd.com/doc/21959314/Tafseer

ஸர்ப்

http://www.scribd.com/doc/22061951/Sharf

இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள்
http://www.scribd.com/doc/22469950/Indian-Muslims


சமரசம் - டிசம்பர் 16-31, 2009
http://www.scribd.com/doc/24315905/Samarasam-Dec16-31-2009-Rajaghiri-Gazzali


சமரசம் - டிசம்பர் 1 -15, 2009
http://www.scribd.com/doc/24087646/Samarasam-Rajaghiri-Gazzali
சமரசம் - நவம்பர் 1-15, 2009
http://www.scribd.com/doc/22574211/Samarasam-Nov1-15-2009
சமரசம் - அக்டோபர் 16-31, 2009
http://www.scribd.com/doc/22141517/Samarasam-Oct16-31-2009
சமரசம் - செப்டம்பர் 16-30, 2009
http://www.scribd.com/doc/20280886/SamarasamSep16302009
சமரசம் - செப்டம்பர் 1-15, 2009
http://www.scribd.com/doc/20303279/SamarasamSep1152009
சமரசம் - ஆகஸ்ட் 16-31, 2009
http://www.scribd.com/doc/21129335/Samarasam-Aug16-31-2009
சமரசம் - ஜூலை 16-31, 2009
http://www.scribd.com/doc/20596023/SamarasamJuly16312009
சமரசம் - ஜூலை 1-15, 2009
http://www.scribd.com/doc/20597784/Samarasam-July-1-152009
சமரசம் - ஜூன் 16-30, 2009
http://www.scribd.com/doc/21293232/Samarasam-June16-30-2009
சமரசம் - ஜூன் 1-15, 2009
http://www.scribd.com/doc/21347889/Samarasam-June1-15-2009
சமரசம் - மே 16 - 31,2009
http://www.scribd.com/doc/21040420/Samarasam-May16-31-2009
சமரசம் - ஏப்ரல் 16-30, 2009
http://www.scribd.com/doc/22545653/Samarasam-Apr16-30-2009
சமரசம் - ஏப்ரல் 1- 15, 2009
http://www.scribd.com/doc/22471062/Samarasam-Apr1-15-2009
சமரசம் - மார்ச் 1-15, 2009
http://www.scribd.com/doc/20984595/Samarasam-Mar1-15-2009
சமரசம் - பிப்ரவரி 1-15, 2009
http://www.scribd.com/doc/20956776/Samarasam-Feb1-15-2009
சமரசம் - ஜனவரி 16-31, 2009
http://www.scribd.com/doc/20786452/Samarasam-Jan16-31-2009
சமரசம் - ஜனவரி 1 -15, 2009
http://www.scribd.com/doc/20786297/Samarasam-Jan1-15-2009
சமரசம் - டிசம்பர் 1-15, 2008
http://www.scribd.com/doc/21341726/Samarasam-Dec1-15-2008
சமரசம் - நவம்பர் 1 - 15, 2008
http://www.scribd.com/doc/21124291/Samarasam-Nov1-15-2008
சமரசம் -அக்டோபர் 1-15, 2008http://www.scribd.com/doc/20303565/SamarasamOct1152008சமரசம் - செப்டம்பர் 1-15,2008http://www.scribd.com/doc/21108065/Samarasam-Sep1-15-2008
சமரசம் - ஆகஸ்ட் 16-31, 2008
http://www.scribd.com/doc/21252253/Samarasam-Aug16-31-2008
சமரசம் - ஆகஸ்ட் 1-15,2008
http://www.scribd.com/doc/21241876/Samarasam-Aug1-15-2008
சமரசம் - ஜூன் 16-30, 2008http://www.scribd.com/doc/20622596/SamarasamJune16302008சமரசம் - ஜூன் 1 -15,2008
http://www.scribd.com/doc/20619845/SamarasamJune1152008
சமரசம் - மே 16-31, 2008
http://www.scribd.com/doc/20755647/Samarasam-May16-31-2008
சமரசம் - ஏப்ரல் 16-30, 2008
http://www.scribd.com/doc/20271660/SamarasamApr16302008
சமரசம் - ஏப்ரல் 1-15, 2008
http://www.scribd.com/doc/20271426/SamarasamApr1152008
சமரசம் - மார்ச் 1- 15, 2008
http://www.scribd.com/doc/20632627/SamarasamMar1152008
சமரசம் - பிப்ரவரி 16-29, 2008
http://www.scribd.com/doc/20746926/Samarasam-Feb16-28-2008
சமரசம் - பிப்ரவரி 1-15, 2008
http://www.scribd.com/doc/20731314/Samarasam-Feb1-15-2008
சமரசம் - ஜனவரி 16-31, 2008
http://www.scribd.com/doc/20729385/Samarasam-Jan-16-31-2008
சமரசம் - ஜனவரி 1 -15, 2008http://www.scribd.com/doc/20649991/SamarasamJan1152008

அல் ஹஸனாத் - அக்டோபர் 2009
http://www.scribd.com/doc/21119815/Alhasanath-Oct-2009
அல் ஹஸனாத் ஆகஸ்ட் 2009http://www.scribd.com/doc/20251074/Alhasanath-Aug-2009அல் ஹஸனாத் - ஜூலை 2009
http://www.scribd.com/doc/20244721/Alhasanath-July-2009
அல் ஹஸனாத் - ஜூன் 2009http://www.scribd.com/doc/20244477/Alhasanath-June-2009அல் ஹஸனாத் - ஏப்ரல் 2009http://www.scribd.com/doc/20251447/Alhasanath-Apr-2009அல் ஹஸனாத் - பிப்ரவரி 2009http://www.scribd.com/doc/20245274/Alhasanath-Feb-2009அல் ஹஸனாத் - ஜனவரி 2009
http://www.scribd.com/doc/20244961/Alhasanath-Jan-2009
அல் ஹஸனாத் - நவம்பர் 2008
http://www.scribd.com/doc/20243870/Alhasanath-November-2008
அல் ஹஸனாத் - அக்டோபர் 2008http://www.scribd.com/doc/20243615/Alhasanath-Oct-2008அல் ஹஸனாத் - செப்டம்பர் 2008
http://www.scribd.com/doc/20164223/Alhasanath-September-2008
சமூகநீதி முரசு - ஜூலை 2009
http://www.samooganeethi.org/images/july_09.pdfசமூகநீதி முரசு - ஜூன் 2009
http://www.samooganeethi.org/images/june_09.pdfசமூகநீதி முரசு - மே 2009
http://www.samooganeethi.org/images/May2009_InnerPages.pdf
சமூகநீதி முரசு - ஏப்ரல் 2009
http://www.samooganeethi.org/images/April2009_inner.pdfசமூகநீதி முரசு - மார்ச் 2009
http://www.samooganeethi.org/images/march2009_innerpages.pdfசமூகநீதி முரசு - பிப்ரவரி 2009
http://www.samooganeethi.org/images/february2009_innerpages.pdf
சமூகநீதி முரசு - ஜனவரி 2009
http://www.samooganeethi.org/images/January_2009.pdfசமூகநீதி முரசு - டிசம்பர் 2008
http://www.samooganeethi.org/images/December_2008.pdf
வைகறை வெளிச்சம் - அக்டோபர் 2009
http://www.scribd.com/doc/20885155/October-2009-Vaigarai-Velicham-Monthly-Magazine-GULAM-MOHAMED
வைகறை வெளிச்சம் - செப்டம்பர் 2009
http://www.scribd.com/doc/19699294/Vaigarai-monthly-magazine-September-2009-Issue-Wwwdarulislamin-Palestine-cover-story?autodown=pdf
வைகறை வெளிச்சம் - ஜூலை 2009
http://www.scribd.com/doc/17077410/V-V-JULY2009-ISSUE-ரமலான் மாதத்தின் சிறப்புகளும் சட்டங்களும் 
http://www.scribd.com/doc/20559959/Ramadan-Booklet
என்ன படிக்கலாம்எங்கே படிக்கலாம்?
http://www.nellaieruvadi.com/neea/images/NEEA_Edu_Guide.pdf
ரியாளுஸ் சாலீஹின்
http://ramalan1.webs.com/riyalusalihinpw.pdf

தர்பியா
http://www.tmmk-ksa.com/content/home/a4.pdf
பிரார்த்தனைப் பேழை
http://www.scribd.com/doc/20445836/Duas-in-Tamil
ஹிஜாப் (புர்கா) ஏன்?http://www.scribd.com/doc/17139412/HIJAB-BURQA-WHY-in-TAMIL

நூறு பெரும் பாவங்கள்
http://www.scribd.com/doc/12537513/-

மரணத் தொடக்கம் மறுமை வரைக்கும்
http://masdooka.googlepages.com/MARANATHODAKKAM_.pdf






THANKS TO


 http://manithaneyaexpress.blogspot.com/

படம் சொல்லுமே சேதி

இந்தோனேஷியாவில் உள்ள பள்ளியில் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபடும் பெண்கள்.

TO VIEW MORE PICTURES
 http://english.aljazeera.net/indepth/inpictures/2011/08/2011826551885298.html 

Thursday, August 4, 2011

கடமையைச் செய்யுங்கள். பலனை எதிர்பாருங்கள்

* நற்செயல் என்பது நற்குணத்தைப் பெறுவதாகும். எந்தச் செயலை நீ மனதில் நினைத்து அதனை பிறர் அறிவதை விரும்பவில்லையோ அது பாவச் செயலாகும்.

* அளவில் சிறிதாக இருப்பினும் தொடர்ந்து நிலையாக செய்யும் செயல்களையே இறைவன் நேசிக்கிறான்.


* பிறப்பில் அனைவரும் தூய்மையானவர்களே! ஒருவர் செய்யும் பாவமே அவரைக் களங்கப்படுத்துகிறது. அக்களங்கத்தை அவரே போக்க வேண்டும்.


* மனிதனுக்கு தான் முயற்சி செய்ததைத் தவிர வேறு எதுவுமில்லை. இன்னும் அவனுடைய முயற்சி விரைவில் கவனிக்கப்படும். பின்னர் அதற்கான முழுக்கூலியும் அவனுக்கு வழங்கப்படும்.


* ஒருவன் நேரான வழியை மேற்கொள்கிறானெனில், அவனது நேரான வழி அவனுக்கே பயனளிக்கும். ஒருவன் நெறிதவறிப் போகிறானெனில், அவனுடைய நெறி தவறிய போக்கு அவனுக்கே தீங்கு விளைவிக்கும். சுமையைச் சுமக்கும் எவரும் 
மற்றவரின் சுமையைச் சுமக்க மாட்டார்.



* கடமையைச் செய்யுங்கள். பலனை எதிர்பாருங்கள்; மனிதர்களிடத்தில் அல்ல; இறைவனிடத்தில்!

* (இறைவனின் அடியார்கள்) இறைவனின் மீதுள்ள அன்பினால் வறியவருக்கும், அநாதைக்கும், கைதிக்கும் உணவளிக்கின்றார்கள். (மேலும் அவர்களிடம் கூறுகின்றார்கள்) ""நாங்கள் இறைவனுக்காகவே உங்களுக்கு உணவளிக்கின்றோம். நாங்கள் உங்களிடமிருந்து எந்த பிரதிபலனையும் நன்றியையும் எதிர்பார்க்கவில்லை''.


* கேடு தான்! தம் தொழுகையில் அலட்சியமாய் இருக்கிறார்களே, அப்படிப்பட்ட தொழுகையாளிகளுக்கு! அவர்கள் பிறருக்கு காட்டுவதற்காகவே செயல்படுகின்றார்கள்.


* எவர்கள் இறைவழியில் தங்கள் பொருளைச் செலவு செய்த பின்னர் அதைத் தொடர்ந்து தாங்கள் செலவு செய்ததைச் சுட்டிக்காட்டிப் பேசாமலும் (மனம்) புண்படச் செய்யாமலும் இருக்கின்றார்களோ, அவர்களுக்குரிய நற்கூலி அவர்களின் அதிபதியிடம் இருக்கின்றது. மேலும் அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். கனிவான சொல்லும், மன்னித்து விடுவதும் மனம் புண்படச் செய்யும் தானத்தைவிடச் சிறப்பு உடையனவாகும்.



திருக்குர்ஆன் 

முஸ்லிம்களுக்கு கிடைத்த பரிசு


முஸ்லிம்களின் புனித மாதமான ரமளான் மாதம் முழுவதும் கஃபத்துல்லாஹ்வின் நிகழ்வுகளை நேரலையாக கூகிள் நிறுவனம் வழங்கி வருகிறது.

சவூதி அரேபிய அரசின் கலாச்சாரம் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்துடன் இணைந்து தாங்கள் இச்சேவையைத் தொடங்கியுள்ளதாக கடந்த திங்கள் கிழமையன்று கூகிள் நிறுவனம் உறுதி செய்தது.

கூகிளின் இச்சேவையை இங்கு காணலாம்...

 http://www.youtube.com/MakkahLive





Monday, August 1, 2011

தடையை மீறினார் வழி தவறினார்


ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி-முஸ்லீம்

பாவங்கள் மன்னிக்கப்படுகின்ற மாதம்.

மனித இனத்தின் மீது அதிக கருணை கொண்டவன் இறைவன்,
ஒரு மகன் செய்யும் குற்றங்களை மன்னித்து விடும் அவனைப் பெற்றெடுத்த தந்தையை விடதாயை விட அவனைப் படைத்த இறைவன் மன்னிப்பதில் பலமடங்கு கருணைக் கொண்டவன் என்பதற்கு முதல் மனிதராகிய ஆதம்(அலை)அவர்களின் குற்றத்தை மன்னித்த கருணையாளன் அல்லாஹ்வின் கருணைக்கு நிகரில்லை.

மனித இனத்தை படைக்கப்போகிறேன் என்று இறைவன் வானவர்களிடம் கூறியதும்உன்னைப் போற்றி துதிக்க நாங்கள் இருக்கும் போது இரத்ததை ஓட்டி குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய மனித இனத்தையா படைக்கப் போகிறாய் என்ற வார்த்தைகளை வேதனையுடன் வெளிப்படுத்தினார்கள் வானவர்கள். 

திருக்குர்ஆன்2:30

நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்று அவர்களிடம் இறைவன் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களை படைத்து அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான்.

அதில் சிலவற்றின் பெயர்களை மட்டும் வானவர்களை அழைத்து இறைவன் கேட்டான். வானவர்களால் அதன் பெயர்களை கூற முடியவில்லை.
ஆதம்(அலை) அவர்களை அழைத்து வானவர்களின் முன்பாக நிருத்தி அவற்றின் பெயர்களை கேட்டான் வானவர்கள் கூற முடியாத பதிலை ஆதம் (அலை) அவர்கள் கூறினார்கள். திருக்குர்ஆன்.2:33

நீங்கள் அறியாதவற்றை நான் அறிந்தவன் என்று உங்களுக்குக் கூறவில்லையாஎன்று வானவர்களிடம் கூறிவிட்டு ஆதம்(அலை) அவர்களுக்குப் பணியும் படிக்கூறினான். அல்லாஹ்வின் கட்டளைக்கு கட்டுப்பட்டு வானவர்கள் அனைவரும் பணிந்தனர். இப்லீஸ் என்ற ஷைத்தான் மட்டும் பணிய மறுத்தான். திருக்குர்ஆன் 2:34

எனது கட்டளையை உனக்கு புறக்கணிக்கச் செய்தது எது என்று இப்லீஸை நோக்கி இறைவன் கேட்டதற்குநான் உயர்ந்தவனா அவர் உயர்ந்தவாரா என்ற ஏற்றத் தாழ்வுகளை திமிர் தனமாக இறைவனுக்கே  விளக்கி (?) விட்டு இறைவனின் கட்டளைக்கு கட்டுப்பட மறுத்தான் இப்லீஸ் !

''எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்ததுஅகந்தை காண்டு விட்டாயா?அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?'' என்று (இறைவன்) கேட்டான்.

''நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்'' என்று அவன் கூறினான்.

''இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள்  வரை உன் மீது எனது சாபம் உள்ளது'' என்று (இறைவன்) கூறினான். 38:75லிருந்து 78 வரையிலான வசனங்கள்.

உயர்ந்தோன்தாழ்ந்தோன் என்ற ஏற்றத்தாழ்வுகளை இறைவனிடமே கற்பிக்க முனைந்த தலைக்கனம் பிடித்த ஷைத்தான் இறைவனால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டான். அவ்வாறு வெளியேற்றப்பட்டவன் மனித குலத்தை அழிவில் ஆழ்த்தாமல் விடமாட்டேன் என்றுக் கூறி வெளியேறினான்.  

இப்லீஸினால் ஆதம்(அலை) அவர்களுக்கு ஆபத்து (வழித் தவறுதல்) ஏற்படும் என்பதை முன்கூட்டியே அவர்களுக்குக் கூறி எச்சரிக்கை செய்துஇன்ன மரத்தின் கனியை உண்ண வேண்டாம் என்றும் தடை வித்தித்தான் இறைவன்

 திருக்குர்ஆன் 2:35 

தடையை மீறினார் வழி தவறினார்.

எதன் பக்கம் நெருங்காதீர்கள் என்று இறைவன் தடை விதித்திருந்தானோ அதையே சிறந்தது என்றும் அதன் மூலமே நிரந்தர இன்பமும்நிலையான வாழ்வும்இருப்பதாகக் கூறி அவரை இலகுவாக வழி கெடுத்தான் இப்லீஸ்.
20:120.அவரிடம் ஷைத்தான் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். ஆதமே! நிலையான (வாழ்வளிக்கும்) மரத்தைப்பற்றியும்அழிவில்லா ஆட்சியைப் பற்றியும் நான் உமக்கு அறிவிக்கட்டுமா? (என்றான்.)

20:121.அவ்விருவரும் அதிரிருந்து சாப்பிட்டனர். அவ்விருவருக்கும் தங்களது வெட்கத்தலங்கள் வெளிப்பட்டன. அவ்விருவரும் சொர்க்கத்தின் இலையால் தங்களை மறைத்துக் கொள்ள முற்பட்டனர். ஆதம் தமது இறைவனுக்கு மாறு செய்தார். எனவே அவர் வழி தவறினார்.

இன்று வரையிலும் அதே பாணியில் அதிகமான மக்களை வழிகெடுத்து வருகிறான் ஷைத்தான்

அன்று

அந்த மரத்தின் கனி

இன்று
மதுமாதுசூது ( இறைவனால் தடுக்கப்பட்ட இன்னும் பல)

மதுமாதுபோன்றவைகள் இறைவனால் தடைசெய்யப்பட்டவைகள்,உடல் நலத்திற்கு கேடு விளைவிக்க கூடியவைகள்,  நரகில் தள்ளக் கூடியவைகள். என்பதை நன்றாக அறிந்திருந்தும் அவற்றில் தான்மன அமைதி கிடைக்கிறதுஅழியக்கூடிய உடல் அழிவதற்கு முன் அனுபவித்துக் கொள் என்ற தீய சிந்தனையை விதைத்து இறைவன் தடைசெய்த தீமைகளை மன அமைதிக்கென்று பொய்யாக ஒரு சிலரை தொடங்கச் செய்து இன்று அதிகமான மக்களின் மன அமைதியையும்உடல் நலத்தையும் கெடுத்து உலகையே குழப்பத்தில் ஆழ்த்தி விட்டான் ஷைத்தான் என்ற இப்லீஸ்.

படிப்பினைகள்

ஆகு என்று சொன்னதும் ஆகிவிடக் கூடியஅழிந்து விடு என்று சொன்னதும் அழிந்து விடக்கூடிய சர்வ வல்லமை மிக்க இறைவனுக்கு ஆதம்(அலை) அவர்களின் செயல் கோபமூட்டக் கூடியதாகவே இருந்தாலும் கோபம் கொள்ளாமல் அவர் வருந்தித் திருந்தி தனது வாழ்க்கையை சீராக அமைத்துக் கொள்வதற்காக இட மாற்றம் மட்டும் செய்து சந்தர்ப்பம் வழங்கினான் கருணையாளன் இறைவன்.   

அறிவு கொடுக்கப்பட்ட ஆதம்(அலை) அவர்களும்அவரது மனைவி ஹவ்வா(அலை) அவர்களும் இறைவனின் தடையை பகிரங்கமாக மீறியக் குற்றத்திற்காக தங்களை மிகப்பெரிய பிடியாகப் பிடிக்காமல் இடமாற்றம் மட்டும் செய்து வாழ விட்ட தயாளனின் கருணையை நினைத்து தொடர்ந்து அழுது கண்ணீர் வடித்தனர். 

அவர்களது உள்ளம் வருந்தி கண்கள் கண்ணீரை வடிப்பதைத் தவிற வேறொன்றும் அறியாதவர்களாயிருந்ததை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு பாமன்னிப்புக்கோரும் வார்த்தைகளை அறிவித்தான்.
2:37. (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்அவன் மன்னிப்பை ஏற்பவன்நிகரற்ற அன்புடையோன்.

7:23.''எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்துஅருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் கூறினர்.

படிப்பினைகள்

உயர்ந்த படைப்பு நானா அவரா ?  என்று ஷைத்தான் அல்லாஹ்விடம் வாக்குவாதம் செய்ததன் பின்னர் நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது உயர்ந்தவர் யார் ?  தாழ்ந்தவர் யார் ?   என்பது தெளிவாகும்.

ஆதம்ஹவ்வா(அலை) அவர்கள் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி பாவமன்னிப்புக்கோரி இறைவனின் மகத்தான மன்னிப்பைப் பெற்று மீண்டும் இறையடியார்களாக நீடித்ததால் இவர்களே உயர்ந்தவர்கள். 

இப்லீஸ் என்ற ஷைத்தானோ தான் செய்த தவறுக்கு ஏற்கமுடியாத காரணத்தை கூறி அதிலேயே நீடித்து இறையருளுக்கு தூரமாகி இறைவனின் சாபத்திற்கும் உள்ளானதால் இவனே தாழ்நதவன்.  

நமது அன்னைதந்தையாகிய ஆதம்ஹவ்வா(அலை) அவர்களின் வழியைப் பின்பற்றி நாம் செய்த குற்றங்களை ஒப்புக் கொண்டு அதற்காக வருந்தி இறைவனிடம் பாவமன்னிப்ர்புக் தங்களை  கோரி சீர்திருத்திக் கொண்டால் இறை யருளுக்கு நெருக்கமாகிய ஆதம்(அலை) அவர்களின் வழித்தோன்றலாக இருப்போம்.

இறைவனின் கட்டளையைப புறக்கனித்த குற்றத்திற்கு வருந்தாமல் ஏற்க முடியாத காரணத்தைக் கூறி கொண்டிருந்தால் இறைவனின் சாபத்திற்கு உள்ளான ஷைத்தானின் வழியைப் பின் பற்றியவாராவோம்.

அல்லாஹ் அதிலிருந்தும் அனைத்து மக்களையும் காத்தருள்வானாக !

இறைவன் கோப குணம் கொண்டவனல்லகருணையாளன் என்பதற்கு ஆதம்(அலை) அவர்கள் செய்த  இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய குற்றத்தை மன்னித்தது உலகம் முடியும் காலம் வரைத் தோன்றும் மனித குலத்திற்கு இறைவன் மன்னிப்பவன்கருணையாளன் என்பதற்கு மிகப்பெரும் சான்றாகும்.

·         உலகம் முடியும் காலம் வரை,

·         மனிதனின் தொண்டைக் குழியை உயிர் வந்தடையும் வரை,

பாவமன்னிப்பின் வாசலைத் திறந்தே வைத்திருப்பதாக அல்லாஹ்வும்அல்லாஹ்வின் தூதரும் கூறுகின்றக் காரணத்தினால்,பாவங்கள் அதிகம் மன்னிக்கப்படுவாக வாக்களிக்கப்பட்ட புனித ரமளான் மாதத்தில் கடந்த காலத்தில் செய்தப் பாவங்களைப் பட்டியலிட்டு இறவா! நீ எங்களை மன்னிக்க வில்லை என்றால் நாங்கள் நஷ்டவாளியாகி விடுவோம் என்று அழுதுக் கேளுங்கள்.

ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். புகாரி-முஸ்லீம்


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.