Saturday, September 5, 2009

யாரை ஏமாத்த இந்த வேலை? சாட்டையடி 2

இது புனிதமான ரமலான் மாசம்,அல்லாஹ்வுடைய மன்னிப்பு கிடைக்கும் மாசம்,அருள் நிறைந்த மாசம்.உலக முஸ்லிம்கள் எல்லாம் நோன்பு நோற்று,அமல் செய்யும் மாசம்,அதோட நாம பெரும்பாலான மக்கள் இந்த மாசத்துலதான் ஜகாத்தும் கணக்கு பண்ணி கொடுக்கிறோம்,கூடுதல் நன்மை கிடைக்கும் என்கிறதால.

ஆனா நெறைய பேரு ஜகாத்து கொடுக்கிறேன் பேர்வழி என்று ஏழை ஜனங்களை கூட்டி வச்சி,அவங்க வீட்ட்லயோ,தேங்கா வாடியிலயோ தல ஒன்னுக்கு அஞ்சோ,பத்தோ இப்பிடி கொடுக்கிறாங்க.அதுமட்டுமில்லாம அவன் திரும்ப வந்து வாங்கிடுவான்னு மை வச்சி வேற உடுவாஹ.என்னமோ எலக்ஸன்ல ஒட்டு போடுற மாதிரி.அதோட அந்த நேரத்த பாக்கனுமே,எதோ போர் நடந்த எடம் மாதிரி இருக்கும்.எடுபிடி பல பேரு,ஐயோடா,காட்டுக் கத்தல் கத்திக்கிட்டு,அட இதுக்கு பேரு மொதல்ல ஜகாத்தா?யாரடா ஏமாத்தப் பாக்குறீங்க?ஊரெல்லாம் உங்களை வள்ளல் என்று சொல்ல கொடுக்கிறியா?இல்ல அல்லாஹ்வுக்குன்னு கொடுக்கிறியா?

மொதல்ல ஜக்காத்துன்னா என்னா?அது ஒரு கடமை.அல்லாஹ்வுக்கு செய்ற கடமை.அழகான முறையில,வூட்டுல உக்காந்து,கணக்கு பண்ணி,அந்த காசை எடுத்துக்குட்டுப் போய், சொந்தத்துல இருக்குற ஏழை,அக்கம் பக்கம்,இப்பிடி போய் பாத்து,அவங்க தேவை நிறைவேற்ற அளவுக்கு கொடுத்துட்டு வந்தா,அவங்க தேவையும் நிறைவேறும்,நீ கொடுத்த ஜகாத்து ஊர்ருக்கு தெரியாது,அல்லாஹ்வும் பொருந்திக் கொள்வான்.ஜக்காத்து வாங்குற நிலமையில இருக்கிறவன் கண்ணியம் காக்கப்படும் இல்லையா?

அட இதுகூட வேணாங்க,நம்ம ஊர்ல பைத்துல் மால் இருக்கு,(இப்போ எல்லா ஊர்லயும் இருக்கு) பரக்கத் சார்,முனாப் காக்கா இருக்காக,அங்க போய்,இது என்னோட ஜக்காத்து,இன்ன வூட்டுல,இன்ன ஆள் கஷ்டப்படுது,இந்த பணத்தை கொண்டு போய் சேத்துப்புடுங்க,இப்பிடி சொன்னா,யாருக்கும் தெரியாம,அழகா கொண்டு போய் சேக்கப் போறாங்க.இதுனால யார் கொடுத்தான்னு கூட தெரியாது,உங்களுக்கும் ஏழை துவா கிடைக்கும்.

அத வுட்டுட்டு யாராவது,பெருமைக்காக செஞ்சீங்கன்னா,அல்லாஹ் பாத்துக்கிட்டு இருக்கான்,மறந்துடாதீங்க.


நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்தார். அவருடன் கையில் அவருடைய மகள் இருந்தாள். அவளுடைய கையில் இரண்டு தங்க வளையங்கள் இருந்தன. நபி(ஸல்) அந்தப் பெண்மணியிடம் ''நீ இதற்கு ஜகாத் கொடுத்துவிட்டாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், ''இல்லை'' என்றார். ''மறுமையில் அல்லாஹ் இதற்குப் பதிலாக நெருப்பினால் ஆன இரண்டு வளையங்கள் அணிவிப்பதை விரும்புகிறாயா?'' என்று கேட்டார்கள். (இதைக் கேட்டவுடன்) அவர் அவற்றைக் கழற்றிக் கொடுத்து விட்டார் என்று அமீர் இப்னு ஷுஐபு தன்னுடைய தந்தை மற்றும் பாட்டனார் வாயிலாக அறிவிக்கிறார். அபூதாவூத், நஸாயீ மற்றும் திர்மிதீஇது ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


தங்கத்தால் செய்யப்பட்டிருந்த ஒருவகை நகையை நான் அணிந்திருந்தேன், அல்லாஹ்வின் தூதர் அவர்கள், ''இதுவும் (சேகரித்துப் பதுக்கி வைக்கும்) புதையல் ஆகுமா?'' என்று அதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு, ''அதனுடைய ஜகாத் செலுத்தப்பட்டிருந்தால் அது புதையல் ஆகாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என உம்மு ஸலமா(ரலி) அறிவிக்கிறார். அபூதாவூத், தாரகுத்னீ. இது ஹாம்மில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.

இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் சாட்டையடி தொடரும்.............



4 comments:

கிளியனூர் இஸ்மத் said...

ஜகாத்தைப் பற்றி நல்லதொரு சாட்டையடி கொடுத்திருக்கீங்க....இது உங்க ஊரில் மட்டுமல்ல பல ஊர்களில் நடக்கிறது.... உண்மையா ஜகாத் கொடுத்தவர்களுக்கு அதன் பலனை அல்லாஹ்தாலா காண்பித்துக் கொண்டிருக்கிறான்...வாழ்த்துக்கள்

பாத்திமா ஜொஹ்ரா said...

சரியா சொன்னீங்க.

SUMAZLA/சுமஜ்லா said...

//அதுமட்டுமில்லாம அவன் திரும்ப வந்து வாங்கிடுவான்னு மை வச்சி வேற உடுவாஹ.என்னமோ எலக்ஸன்ல ஒட்டு போடுற மாதிரி//

இப்படி கூட நடக்குதா?

பாத்திமா ஜொஹ்ரா said...

ஆமாங்க சுமஜ்லா அக்கா,ரொம்ப கொடுமை.